Published:Updated:

திருவண்ணாமலை கலெக்டர் அட்டாக்! - பர்சனல் மோட்டிவா... ஆள்மாறாட்டமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருவண்ணாமலை கலெக்டர் அட்டாக்! - பர்சனல் மோட்டிவா... ஆள்மாறாட்டமா?
திருவண்ணாமலை கலெக்டர் அட்டாக்! - பர்சனல் மோட்டிவா... ஆள்மாறாட்டமா?

திருவண்ணாமலை கலெக்டர் அட்டாக்! - பர்சனல் மோட்டிவா... ஆள்மாறாட்டமா?

பிரீமியம் ஸ்டோரி

திருவண்ணாமலைக்குப் புதிய கலெக்டராக வந்து இரண்டு வாரத்துக்குள், தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார் கே.எஸ்.கந்தசாமி.

கலெக்டராகப் பொறுப்பேற்ற ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 14 வரையில் பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார், கந்தசாமி.  15-ம் தேதி காலை, கலெக்டர் பங்களாவில் பால் காய்ச்சிவிட்டுப் பணிக்குச் சென்றார். அன்று மதிய உணவுக்காக பங்களாவுக்கு நடந்தே வந்துள்ளார். அப்போது, பைக்கில் வந்த மூன்று பேர், அவர்கள் அணிந்திருந்த ஹெல்மெட்களைக் கழற்றி, கலெக்டர் முதுகில் தாக்கியுள்ளனர். நிலைத்தடுமாறி கீழே விழுந்த கலெக்டர் மீது மிளகாய் பொடியைத் தூவ முயன்றுள்ளனர். கலெக்டரின் பி.ஏ கூச்சல் போட்டுள்ளார். அதைக் கேட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், மர்ம நபர்களை மடக்கிப்பிடித்தனர். அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிவா, மணிகண்டன், சந்தோஷ் என்ற அந்த மூன்று பேர் விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, மதுஅருந்திவிட்டு  திருவண்ணாமலையில் யாரோ ஒருவரைத் தாக்க வந்ததாகவும், ஆள் தெரியாமல்  கலெக்டரைத் தாக்கியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அட்டாக்! - பர்சனல் மோட்டிவா... ஆள்மாறாட்டமா?

‘‘பட்டப்பகலில், கலெக்டர் பங்களாவுக்குள் நுழைந்து கலெக்டரைக் கொலைவெறியுடன் தாக்குகிறார்கள் என்றால், எப்படி ஆள் மாறாட்டமாக  இருக்க முடியும்? குடிபோதையில் ஆளைமாற்றி தாக்கியதாகவே இருந்தாலும், கலெக்டர் பங்களாவுக்குள் எப்படி நுழைய முடியும்? போலீஸார், தீவிர விசாரணை நடத்தாததும், இந்தச் சம்பவத்தை கலெக்டர் கண்டுகொள்ளாமல் இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’’ என்கிறார்கள் கலெக்டர் அலுவலக ஊழியர்கள்.

‘‘குற்றவாளிகள் மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து, பிரச்னையை அமுக்கப்பார்க்கிறார்கள். கலெக்டருக்கும் அவருடைய உறவுகளுக்கும் இடையே  பிரச்னைகள் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. தன்னையே பாதுகாத்துக்கொள்ள முடியாத கலெக்டர், நம்மை எப்படிப் பாதுகாப்பார் என்ற விரக்தி மக்கள் மனதில் எழாதா?’’ என்றார்கள் திருவண்ணாமலை வாசிகள்.

கலெக்டர் கந்தசாமியிடம் நாம் பேசியபோது,  ‘‘என்னைப் பின்புறமாகத் தாக்கினார்கள்.   தடுப்பதற்காக நான் திரும்பியதும் கீழே விழுந்துவிட்டேன். என்னைப் பார்த்ததும், ‘நாம அடிக்க வந்தது இவர் இல்லை.  ஆள் மாறிடுச்சு’ என்று சொல்லி அவர்கள் தப்பிக்க முயற்சி செய்தார்கள். அவர்களை போலீஸ் பிடித்துவிட்டது. இந்தச் சம்பவத்தில் மோட்டிவ் எதுவும் இல்லை’’ என்றார்.

- கா.முரளி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு