Published:Updated:

காணாமல் போகும் வைகை! - கபடி... கழிவுநீர்... கார் பார்க்கிங்...

காணாமல் போகும் வைகை! - கபடி... கழிவுநீர்... கார் பார்க்கிங்...
பிரீமியம் ஸ்டோரி
காணாமல் போகும் வைகை! - கபடி... கழிவுநீர்... கார் பார்க்கிங்...

காணாமல் போகும் வைகை! - கபடி... கழிவுநீர்... கார் பார்க்கிங்...

காணாமல் போகும் வைகை! - கபடி... கழிவுநீர்... கார் பார்க்கிங்...

காணாமல் போகும் வைகை! - கபடி... கழிவுநீர்... கார் பார்க்கிங்...

Published:Updated:
காணாமல் போகும் வைகை! - கபடி... கழிவுநீர்... கார் பார்க்கிங்...
பிரீமியம் ஸ்டோரி
காணாமல் போகும் வைகை! - கபடி... கழிவுநீர்... கார் பார்க்கிங்...
காணாமல் போகும் வைகை! - கபடி... கழிவுநீர்... கார் பார்க்கிங்...

‘‘வைகை இல்லா மதுரை இது. மீனாட்சியைத் தேடுது’’ - ‘ஒருதலை ராகம்’ படத்தில் வரும் பாடலைப் போல, கபடிப் போட்டி, கார் பார்க்கிங், கழிவுநீர் காரணங்களால் ‘வைகை இல்லா மதுரை’ அமைவதற்கான காலம் நெருங்க ஆரம்பித்திருக்கிறது. உயர் நீதிமன்ற உத்தரவுகளைமீறி வைகை ஆறு, நாசமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சமீபத்தில் தாக்கலான பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘வைகை ஆற்றில் ஆக்கிரமிப்புச் செய்தாலோ, கழிவுநீரைத் திறந்துவிட்டாலோ, குப்பைகளைக் கொட்டினாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஆற்றைக் கண்காணித்துப் பாதுகாக்க வேண்டும். வைகையில் மருத்துவக் கழிவுகள் உள்பட பிற கழிவுகளைக் கலக்கும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதம் வசூலிக்க வேண்டும். தொடர்ந்து கழிவுகளைத் திறந்துவிடும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும்’ என்று சொன்னதோடு, அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

காணாமல் போகும் வைகை! - கபடி... கழிவுநீர்... கார் பார்க்கிங்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகத்தில் நீராதாரமாக விளங்கிக்கொண்டிருந்த பல ஆறுகள், மணல் குவாரிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் வறண்டும், சுருண்டும் காட்சியளிக்கின்றன. இதனால் விவசாயம், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகளும் ஆக்கிரமிப்பாளர்களும் கூட்டணிப் போட்டுக்கொண்டு அட்டகாசம் செய்கிறார்கள். தேனி மாவட்டத்தில் தொடங்கி மதுரை வழியாக ராமநாதபுரம் வரைச் செல்லும் வைகை ஆறு, மிகவும் பாழ்பட்டுவிட்டது. மதுரை மாநகருக்குள் மிகக்கடுமையாக பாதிப்படைந்துள்ளது. வைகை வடகரையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ‘தேனி ஆனந்தம்’ ஜவுளி நிறுவனத்தினர்,  வைகை ஆற்றை பார்க்கிங் ஆகப் பயன்படுத்துகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தையே பார்க்கிங் ஆக மாற்றிவிட்டனர். இந்த நிறுவனத்தின் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, வைகையை பார்க்கிங் ஆகப் பயன்படுத்தினர். அது குறித்து, சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்தது.

‘‘மதுரையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வைகை ஆற்றின் வடகரையில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. அதையும் ஜவுளி நிறுவனத்தினர் ஆக்கிரமித்து, பார்க்கிங் ஆக மாற்றி, மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்குச் செய்துவிட்டனர். வைகை ஆற்றின் ஓரம் இந்தக் கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, முக்கியப் புள்ளிகளால் கட்டப்பட்டு வந்த இந்தக் கட்டடத்தை எதிர்த்து மதுரை மாநகராட்சி வழக்குத் தாக்கல் செய்தது. நீண்டகாலம் மூடிக்கிடந்து, நீதிமன்ற வழக்கு அவர்களுக்குச் சாதகமாக வந்தவுடன் அந்தக் கட்டடத்தை, ‘தேனி ஆனந்தம்’ ஜவுளி நிறுவனத்தினர் வாங்கி, வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர்’’ என்றார்கள் அப்பகுதியினர்.

காணாமல் போகும் வைகை! - கபடி... கழிவுநீர்... கார் பார்க்கிங்...

நம்முடைய ஆறு நம் கண் முன்னால் நாசமாகிறதே... அழியாமல் அதைக் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறதே என்ற உறுத்தலோ, கவலையோ இல்லாமல்  அமைச்சர் செல்லூர் ராஜு, வைகைக்குள் கபடிப் போட்டி நடத்தி பெருமைப்படுகிறார். கடந்த வருடமும் இதேபோல் கபடிப் போட்டி நடத்தப்பட்டபோது, சர்ச்சை உண்டானது. அதை அவர் பொருட்படுத்தவேயில்லை. ‘‘அமைச்சர் நினைத்தால் அரசு விளையாட்டு மைதானத்திலோ, தனியார் மைதானத்திலோ நடத்தலாம். ஆனால், தன் பவரைக் காட்ட, வைகை ஆற்றுக்குள் கபடிப்போட்டியை நடத்துவதில்தான் தனக்குப் பெருமை என நினைக்கிறார்’’ எனக் குமுறுகிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

 வைகை ஆற்றைப் பாதுகாக்கத் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் வைகை நண்பர்கள் இயக்கத்தின் நிர்வாகி நாகராஜனிடம் பேசினோம். ‘‘கோச்சடை முதல் விரகனூர் வரை மதுரை மாநகர் வழியாகச் செல்கிற வைகையில், ஏகப்பட்ட ஆக்கிரமிப்புகள். நிறுவனங்கள்தான் கழிவுநீரை ஆற்றில் கலக்கின்றன என்றால், மதுரை மாநகராட்சியும் அதே கொடுமையைச் செய்கிறது. ராஜாஜி மருத்துவமனை தொடங்கி, பல தனியார் மருத்துவமனைகளும் வைகை ஆற்றில்தான் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுகின்றன. அமைச்சர் ஆதரவில் நடந்த கபடிப் போட்டிக்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி நடத்தியதாகக் கூறுகிறார்கள். காவல்துறை அனுமதிக்குத்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘ஆற்றுக்குள் நடத்துங்கள்’ என்று சொல்லவில்லை. வைகையில் கபடிப் போட்டி நடத்தியதன் மூலம் இனி பல அமைப்புகளும் விளையாட்டுகள் நடத்த இது முன்னுதாரணமாகிவிடும். ஜவுளிக்கடைக்காரர்கள் வைகையை  தங்கள் பார்க்கிங் ஆகப் பயன்படுத்தி வருகிறார்கள். இது அதிகாரிகளுக்குத் தெரிந்துதான் நடக்கிறது. வைகையைக் காப்பாற்ற நாங்கள் பல புகார்கள் அனுப்பியும் நடவடிக்கையே இல்லை’’ என்றார்.

தேனி ஆனந்தம் நிர்வாகி செல்வராஜிடம் பேசினோம், “ஆற்றை பார்க்கிங்காக பயன்படுத்தவில்லை. கடையின் கட்டடத்தின் கீழேயே கார், டூ வீலர் பார்க்கிங் உள்ளது. வைகை ஆற்றில் பார்க்கிங் வைக்க மாநகராட்சி எப்படி அனுமதிக்கும்?” என்றார்.

மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகரிடம் விளக்கம் கேட்டோம். “அந்த ஜவுளிக் கடைக்காரங்க ஆற்றுக்குள் வாகனங்களை நிறுத்தியிருப்பதாக எனக்குத் தகவல் வந்ததும், வாகனங்களை அப்புறப்படுத்தினோம். இனி வாகனங்கள் அங்கே போக முடியாத அளவுக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. . கழிவு நீர் ஆற்றில் கலக்காமல் இருக்கவும், ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும் கலெக்டர் தலைமையில் கமிட்டி அமைத்துள்ளோம். இனி தொடர்ந்து வைகை ஆறு கண்காணிக்கப்படும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

- செ.சல்மான்
படம்: ஈ.ஜெ.நந்தகுமார்