Published:Updated:

சாதா ரயில் சேவையும் புல்லட் ரயில் தேவையும்!

சாதா ரயில் சேவையும் புல்லட் ரயில் தேவையும்!
பிரீமியம் ஸ்டோரி
சாதா ரயில் சேவையும் புல்லட் ரயில் தேவையும்!

சாதா ரயில் சேவையும் புல்லட் ரயில் தேவையும்!

சாதா ரயில் சேவையும் புல்லட் ரயில் தேவையும்!

சாதா ரயில் சேவையும் புல்லட் ரயில் தேவையும்!

Published:Updated:
சாதா ரயில் சேவையும் புல்லட் ரயில் தேவையும்!
பிரீமியம் ஸ்டோரி
சாதா ரயில் சேவையும் புல்லட் ரயில் தேவையும்!

ந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கு கவுன்ட்டவுண் தொடங்கிவிட்டது. அகமதாபாத்–மும்பை இடையிலான புல்லட் ரயில் திட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் இணைந்து குஜராத் மாநிலம் சபர்மதியில் அடிக்கல் நாட்டியுள்ளனர். ‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும், வலிமையையும் உணர்த்த இது அவசியம்’ என மோடி சொல்ல, ‘இந்தியாவுக்கு புல்லட் ரயில் தேவையா?’ என்ற சர்ச்சை இன்னொரு பக்கம் தொடங்கியுள்ளது.

சாதா ரயில் சேவையும் புல்லட் ரயில் தேவையும்!

2022-ம் ஆண்டில், இந்த புல்லட் ரயிலில் மக்கள் பயணிக்கலாம்.சாதாரணமாக அகமதாபாத்திலிருந்து மும்பைக்குச் செல்ல எட்டு மணி நேரம் ஆகும். புல்லட் ரயிலில் மூன்று மணி நேரத்துக்குள் சென்றுவிடலாம். சுமார் 320 கி.மீ வேகத்தில் புல்லட் ரயில் பயணிக்கும். புல்லட் ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பீடான ரூ. 1.10 லட்சம் கோடியில் ரூ. 88,000 கோடியை 0.01 சதவிகித வட்டிக்குக் கடனாக, ஐம்பது ஆண்டு கால தவணையுடன் இந்தியாவுக்கு ஜப்பான் அளிக்கிறது. உயர்மட்டப் பாதையிலும், சுரங்கம் வழியாகவும் (7 கி.மீ தூரம் கடலுக்கு அடியிலும் பாதை அமைக்க உள்ளார்கள்) ரயில் பாதை செல்வதால், கிட்டத்தட்ட 800 ஹெக்டேர் நிலப்பரப்பு மட்டுமே தேவைப்படுகிறது. புல்லட் ரயில் சேவைக்காக 4,000 பணியாளர்களுக்கு வதோதராவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், 16,000 பேருக்குத் தற்காலிகப் பணிகளும் கிடைக்கின்றன. 

‘ஜப்பான் மாதிரியான நாடுகளிடமிருந்து அறிவியல், விஞ்ஞான வளர்ச்சிகளை இந்தியா பின்பற்றத் தொடங்குவது என்பது, நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும். எதிர்காலத்தில், மேலும் அமைய உள்ள புல்லட் ரயில் தடங்களை இந்தியர்களே உருவாக்கிக்கொள்ள இது உதவும்’ என இதன் பாசிடிவ் பக்கங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள். 
 
மேலும், ‘சாமானியர்களின் பயண நேரத்தைக் குறைப்பதால், பொருளாதார வளர்ச்சிக்கு இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும்’ என்கிறார் மோடி. ஆனால், புல்லட் ரயிலின் பயணக் கட்டணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், விமானச் சேவையை மக்கள் நாடலாம். அப்படியானால், புல்லட் ரயில் யாருக்குச் சேவை தரும் என்ற சந்தேகத்தைச் சிலர் எழுப்புகின்றனர். உதாரணமாக, சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதால், சாமானிய மக்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. இப்படி புல்லட் ரயிலும், பயன்படாத ‘வெள்ளை யானை’ ஆகிவிடுமோ என்பதே எதிர்ப்பாளர்களின் கேள்வி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதா ரயில் சேவையும் புல்லட் ரயில் தேவையும்!

இந்தியாவில் மெட்ரோ ரயில் கட்டமைப்பை உருவாக்கியவர், ‘மெட்ரோ மேன்’ என அழைக்கப்படும் ஸ்ரீதரன். அவரும், ‘‘இப்போது இருக்கும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவது, விபத்துகளைத் தவிர்க்க முயல்வது, வேகத்தைக் கூட்டுவது, பயணிகளுக்கான வசதிகளை அதிகரிப்பது என்று கவனம் செலுத்தாமல், புல்லட் ரயிலை அறிமுகம் செய்வது அத்தனை ஏற்புடையது அல்ல’’ என்கிறார். கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இன்னமும் ரயில்களில் கொத்துக் கொத்தாக மக்கள் தொங்கிக்கொண்டு செல்வதைக் காண முடிகிறது. ஒரு புல்லட் ரயில் திட்டத்துக்கு ஆகும் செலவில், இவர்களுக்கான போக்குவரத்துக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவிடலாம். 2013 முதல் 2017 வரை, 450 ரயில் விபத்துகளில் 800 பேர் இறந்திருக்கிறார்கள். தொடர் விபத்துகள் காரணமாக, ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு, சமீபத்தில் ராஜினாமா செய்ய முன்வந்தார். பிறகு, அவருக்கு வேறு துறையைக் கொடுத்தார்கள். 

உலகெங்கும் சாதாரண ரயில்களே மணிக்கு 160 கி.மீ முதல் 200 கி.மீ வேகத்தில் செல்ல முடிகிறபோது, இந்தியாவில் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் செல்லும்போதே ரயில் பயணம் பாதுகாப்பற்றதாகிவிடுகிறது. பல முக்கியமான தடங்களைத் தேவைக்கும் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். இருவழிப் பாதைகளே இதற்குத் தீர்வு. ஆனால், சென்னை- மதுரை போன்ற மிக முக்கியமான தடங்கள்கூட இன்னமும் முழுமையாக இருவழிப் பாதை ஆகவில்லை. இதனால், ரயில்பாதை பராமரிப்புக்கான நேரம் கிடைப்பதில்லை. இது, பயணிகளின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது.

புல்லட் ரயில் தடங்களை அமைப்பதற்கு முன்பாக, சாதாரண ரயில் பாதைகளின் கட்டமைப்பை சீனா மேம்படுத்தியது. சீனாவில் இப்போது, சாதாரண ரயில்களே மணிக்கு 160 முதல் 200 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். இதுபோல, இந்தியாவின் 20,000 கி.மீ ரயில் பாதைகளை மேம்படுத்த, ஒரு கி.மீ-க்கு 12 கோடி ரூபாய் ஆகும் என மதிப்பிட்டுள்ளனர். முக்கியமான தடங்களை இருவழிப் பாதை ஆக்க, ஒரு கி.மீ-க்கு 15 கோடி ரூபாய் தேவைப்படும். இதுதான் அவசரமும் அவசியமும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடியின் புல்லட் ரயில் திட்டம் இந்தியாவின் கடந்தகாலத் திட்டங்களைப்போல் தடைகளைத் தாண்டி வெற்றியை நிலைநாட்டுமா அல்லது இந்தியர்களைக் கடன்காரர்களாக மாற்றுமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

- சாரா