நான்கு மாதங்களாக குண்டர் சட்டத்தின்கீழ் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘மே பதினேழு’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேர், உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் செப்டம்பர் 20-ம் தேதி விடுதலைசெய்யப்பட்டனர். தமிழர் விடியல் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோருடன் வெளியே வந்தவருக்கு, சிறை வாசலில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அரங்கம் ஒன்றில் ஆதரவாளர்களிடம் உரையாற்றிக்கொண்டிருந்த திருமுருகன் காந்தியுடன் உரையாடினோம்.

‘‘சிறைவாசம் எப்படி இருந்தது?”

‘‘ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதிக நேரம் படிப்பதற்கான வாய்ப்பாக அமைந்தது. அரசியல்ரீதியாகச் சிந்திக்கவும் நேரம் கிடைத்தது. சரியான நேரத்தில் கிடைத்த ஓய்வாகவும் இந்தச் சிறைவாசம் இருந்தது. எங்களை நாங்களே உறுதிப்படுத்திக்கொள்ளவும் உதவியாக இருந்தது. குண்டர் சட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்று சொல்லமுடியாவிட்டாலும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் (என்.எஸ்.ஏ.), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யு.ஏ.பி.ஏ.) ஆகிய சட்டங்களை எங்கள்மீது ஏவுவார்கள் என எதிர்பார்த்தோம். ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனவெறி யுத்தத்தில் இந்திய அரசின் பங்கும் இருக்கிறது. தமிழீழத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இனப்படுகொலை நடத்துவதற்கான சதி அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பதைத் தொடர்ந்து கூறிவருகிறோம். இதுதான் அவர்களுக்குப் பிரச்னையாக இருக்கிறது.”

‘‘மெரினாவில் மெழுகுவத்தி அஞ்சலி செலுத்த, கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த ஆண்டு மட்டும்தானே தடை, பிரச்னைகள்?”

‘‘இல்லை. அப்படி ஒரு தகவல் பரவியிருக்கிறது. முந்தைய ஆண்டுகளிலும் மெரினா அஞ்சலிக்குத் தமிழக அரசு அனுமதி தந்ததே இல்லை. ஒருவேளை ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செய்வதைத் தடுத்தால் தங்களின் அரசியல் வெற்றிக்குப் பாதகமாக இருக்குமென அ.தி.மு.க அரசு நினைத்திருக்கலாம். ஒவ்வோர் ஆண்டும் மே 17-19 வாக்கில் அஞ்சலிக்கான வேலைகளில் இருக்கும்போது, எங்களின் தொலைபேசி இணைப்பைத் துண்டிப்பது போன்ற அத்துமீறல்கள் மூலமாக மறைமுக அழுத்தம் தந்துகொண்டுதான் இருந்தார்கள். அதையும் தாண்டித் தொடர்ந்து நாங்கள் தமிழர் கடலில்- மெரினா கடற்கரையில் ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம். அடுத்த ஆண்டும் அஞ்சலி செலுத்துவோம்.”

‘‘குறிப்பாக, குண்டர் சட்டம் உங்கள் மீது ஏன் ஏவப்பட்டது என நினைக்கிறீர்கள்?”

‘‘தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிராக இந்திய அரசால் தொடர் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர் உரிமைப் போராட்டத்தில் பெங்களூரில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரத் தாக்குதல், ஆந்திராவில் 20 தமிழகத் தொழிலாளர்கள் படுகொலை, தமிழக மீனவர்களின் பிரச்னை, ஆணவப்படுகொலை போன்றவற்றை ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு எடுத்துச்சென்றோம். தொடர்ச்சியாக இதற்கான போராட்டங்களை நடத்திவருகிறோம். இதற்குப் பதில்சொல்வதற்கோ, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கோ, மத்திய - மாநில அரசுகளுக்குத் திராணி இல்லை. இரண்டு அரசுகளும் அரசியல்ரீதியாக கேள்விகளை எதிர்கொள்ளாமல், எங்களின் போராட்டத்தைச் சமூகவிரோதச் செயலாகச் சித்திரிக்கப் பார்க்கின்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போதும் இதே முறையைத்தான் கையாண்டார்கள். அதன் ஒரு பகுதிதான் குண்டர் சட்ட வழக்கு. இப்படிச் செய்தால், அரசியல் கருத்துகளை மக்களிடம் எடுத்துச்செல்லவிடாமல் தடுக்கலாம் என நினைக்கிறார்கள்.”

‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்துப் போராடியபோது போடப்பட்ட வழக்கும் உங்கள் மீதான குண்டர் சட்டப் பிரயோகத்துக்குக் காரணமாகக் காட்டப்பட்டது. நீங்கள் சிறையிலிருந்தபோது நடந்த நீட் எதிர்ப்புப் போராட்டம் பற்றி?”

‘‘பண முடக்கமோ, ஜி.எஸ்.டி-யோ, உலக வர்த்தக அமைப்பின் உத்தரவுப்படிதான் நடக்கின்றன. நம்முடைய தெருவோரக் கடைகளும், சிறு குறு வணிகர்களும்தான் விலையேற்றத்தைத் தடுக்கும் அரணாக, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துபவர்களாக நீண்டகாலமாக இருந்துவருகிறார்கள். இந்தத் தற்சார்பான பொருளாதாரத்தைக் காலியாக்கினால்தான், பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் தொழிலை இங்கே காலூன்றி நடத்தமுடியும். எனவே, சில்லறை வர்த்தகத்தைக் காலியாக்கத் துடிக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசு, பாய்ச்சல் வேகத்தில் செயல்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் வந்ததுதான், நீட்!

இப்போது மருத்துவத்துக்கு... நாளை பொறியியலுக்கும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும் வரும். தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் நீட் போன்ற தேர்வுகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தரம், தகுதி என இதை நியாயப்படுத்துகிறார்கள். ஒரு பேச்சுக்காக தகுதித்தேர்வைச் சரி என்றால், திறன் தேர்வு (ஸ்கில் டெஸ்ட்) வைக்கத் தயாரா? பட்டறைகளில் ரம்பம் அறுக்கின்ற, பைக், கார்களைக் கழற்றிமாட்டுகின்ற திறன்படைத்த நம் இளைஞர்கள்தானே இன்ஜீனியரிங் படிப்புக்கு முதல் வரிசையில் நிற்கமுடியும்? அவர்கள் அல்லாமல் வேறு யாருக்குப் பொறியியல் படிப்புக்குத் தகுதி இருக்கும்?”

- இரா.தமிழ்க்கனல்,
படம்: ப.சரவணகுமார்