Published:Updated:

சௌபாக்யா திட்டம் மோடியின் தேர்தல் உத்தியா?

சௌபாக்யா திட்டம் மோடியின் தேர்தல் உத்தியா?
பிரீமியம் ஸ்டோரி
சௌபாக்யா திட்டம் மோடியின் தேர்தல் உத்தியா?

சௌபாக்யா திட்டம் மோடியின் தேர்தல் உத்தியா?

சௌபாக்யா திட்டம் மோடியின் தேர்தல் உத்தியா?

சௌபாக்யா திட்டம் மோடியின் தேர்தல் உத்தியா?

Published:Updated:
சௌபாக்யா திட்டம் மோடியின் தேர்தல் உத்தியா?
பிரீமியம் ஸ்டோரி
சௌபாக்யா திட்டம் மோடியின் தேர்தல் உத்தியா?

திங்கள்கிழமை மாலை 6 மணி. அலுவலகமே தொலைக்காட்சி முன்பாக ஒருவித திகிலுடன் அமர்ந்திருக்கிறது. நண்பர் ஒருவர், தன் பர்ஸில் பழைய 100, 50 ரூபாய் நோட்டுகள் இருக்கின்றனவா  எனப் பார்த்து... இல்லை என்று நிம்மதியடைகிறார். காரணம், ‘இன்று மாலை 6:30 மணிக்குப் பிரதமரிடமிருந்து ஓர் அறிவிப்பு வெளிவரும்’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி முன்கூட்டியே சொல்லியிருந்ததுதான். பிரதமரின் அறிவிப்புக்காகப் பயத்துடன் காத்திருந்தவர்களுக்கு, சற்று நேரத்தில், பிரதமரின் ட்வீட் பதில் சொல்லிவிட்டது. ‘செளபாக்யா திட்டத்தை அறிமுகம் செய்கிறோம். இதன்மூலம் இந்தியாவை மின் இணைப்புகள் முழுமையாகப் பெற்ற நாடாக மாற்றுவோம்’ என்று ட்விட்டில் மோடி குறிப்பிட்டார்.

சௌபாக்யா திட்டம் மோடியின் தேர்தல் உத்தியா?

16,320 கோடி ரூபாய் மதிப்பிலான சௌபாக்யா திட்டத்தின் மூலம், இதுவரை மின் இணைப்பு இல்லாத 4.05 கோடி குடும்பங்களுக்கு 2018-ம் ஆண்டுக்குள் மின்சார வசதி ஏற்படுத்தித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தியாவின் 78 சதவிகித கிராமங்கள், தீனதயாள் உபாத்யாய் கிராம ஜோதி யோஜனா மூலம் மின் இணைப்பு உள்ள கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. மீதமுள்ள 3,000 கிராமங்களை டிசம்பர் 31, 2018-க்குள் மின்சார இணைப்பு முழுமையாகப் பெற்ற கிராமங்களாக மாற்றுவோம் என்று பிரதமர் கூறியுள்ளார். இதற்கான காலஅளவு, முன்பு மார்ச் 2019 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது வேலைகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. எனவே, காலஅளவு குறைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இந்தத் திட்டத்துக்கு 60 சதவிகித நிதியை மத்திய அரசும், 10 சதவிகித நிதியை மாநில அரசும், 30 சதவிகித நிதியைக் கடன் மூலம் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் எட்டு மாநிலங்களில், 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்இணைப்பு இல்லாமல் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவின் 78 சதவிகித வீடுகளுக்கு இந்தத் திட்டம் ஏற்கெனவே சென்றுவிட்ட நிலையில், சௌபாக்யா திட்டத்தை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் 12 வீடுகளுக்கு மட்டும்தான் மின் இணைப்பு இல்லை. அப்படியென்றால், இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை.

இதுமட்டுமின்றி ஓ.என்.ஜி.சி-யுடன் இணைந்து மண்ணெண்ணெய்க்கு மாற்றான எரிபொருளைக் குறைந்த செலவில் அறிமுகம் செய்யவிருப்பதையும், மின்சார அடுப்புகள் இறக்குமதி செய்யும் திட்டம் உள்ளதையும் மோடி அறிவித்துள்ளார். 2016 முதல் மூன்று கோடி குடும்பங்களுக்கு மின்சார அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள குடும்பங்களை விரைவில் இத்திட்டம் சென்றடையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சௌபாக்யா திட்டம் மோடியின் தேர்தல் உத்தியா?

பி.ஜே.பி ஆளும் மாநிலங்களான குஜராத் மற்றும் இமாச்சலில் தேர்தல் நடைபெறவுள்ளது. 2018-ல் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் தேர்தல் வரவிருக்கிறது. மின் இணைப்பு அதிகம் தேவைப்படும் மாநிலங்களின் பட்டியலில் இந்த மாநிலங்கள் உள்ளன. இதுதான் பி.ஜே.பி-யின் அதிரடித் திட்ட அறிவிப்புக்குக் காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த மாநிலங்களில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களைக் கவரும் விதமாக இந்த அறிவிப்பு உள்ளது.

ஏற்கெனவே உள்ள திட்டங்களுக்கான மேம்படுத்தப்பட்ட அறிவிப்பை, அரசு ஒரு திட்டமாக அறிவித்துள்ளது. இதற்கு நிதியமைச்சர் இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக டீஸர் வெளியிடுகிறார். பிரதமர், சொன்ன நேரத்தில் திட்டத்தைப் பற்றி ட்வீட் செய்கிறார். பெரிய ஆச்சர்யங்கள் இல்லாத திட்டத்தை அரசு இவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அறிவிக்கிறது. மின் இணைப்பு கொடுக்கப்பட்டால் போதுமா? மின்சாரத்தில் தன்னிறைவான நாடாக இருக்கிறோமா? அதற்கான திட்டங்கள் என்ன என்ற கேள்விகளுக்குப் பதிலே இல்லை. இதற்கெல்லாம் எந்த ட்வீட்டில் பதில் சொல்லப்போகிறார் மோடி? அது என்றைக்கு, எத்தனை மணிக்கு ட்வீட் செய்யப்படும்?

- ச.ஸ்ரீராம்