Published:Updated:

நொய்யலில் நீராடுவாரா கருப்பணன்? - மங்குனி மந்திரி - 2

நொய்யலில் நீராடுவாரா கருப்பணன்? - மங்குனி மந்திரி - 2
பிரீமியம் ஸ்டோரி
நொய்யலில் நீராடுவாரா கருப்பணன்? - மங்குனி மந்திரி - 2

நொய்யலில் நீராடுவாரா கருப்பணன்? - மங்குனி மந்திரி - 2

நொய்யலில் நீராடுவாரா கருப்பணன்? - மங்குனி மந்திரி - 2

நொய்யலில் நீராடுவாரா கருப்பணன்? - மங்குனி மந்திரி - 2

Published:Updated:
நொய்யலில் நீராடுவாரா கருப்பணன்? - மங்குனி மந்திரி - 2
பிரீமியம் ஸ்டோரி
நொய்யலில் நீராடுவாரா கருப்பணன்? - மங்குனி மந்திரி - 2

ம்மா வழியில் நடக்கும் ஆட்சியில் மங்குனி மந்திரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூவுக்கு அடுத்து கிளம்பியிருக்கிறார் அமைச்சர் கருப்பணன். ‘‘சாயப்பட்டறைகள் தவறு செய்யவில்லை. பொதுமக்கள், வீடுகளில் சோப்புப்போட்டுக் குளித்ததால்தான் நொய்யலில் நுரைபொங்கியது’’ என புதிய வியாக்கியானம் சொல்லியிருக்கிறார் கருப்பணன். ரசாயனக் கழிவுநீரை நொய்யல் ஆற்றில் கலந்து, அராஜகம் செய்யும் சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு வக்காலத்து வாங்கியிருக்கும் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணனுக்கு எதிராகக் கொந்தளிக்கிறார்கள், கோவை மாவட்ட மக்கள்.

நொய்யலில் நீராடுவாரா கருப்பணன்? - மங்குனி மந்திரி - 2

கடந்த வாரம் திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்து, ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தது. அதைச் சாக்காகக்கொண்டு, சாயப்பட்டறை ரசாயனக்கழிவு நொய்யல் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால், நொய்யலில் வெள்ளை நுரை பொங்க தண்ணீர் ஓடியது. ‘‘சாயப்பட்டறைகளிலிருந்து சட்டவிரோதமாக ரசாயனக் கழிவுநீரைக் கலந்துவிட்டதுதான் நொய்யலில் நுரைபொங்கியதற்குக் காரணம்’’ எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதைத்தொடர்ந்து அங்கு ஆய்வு செய்ய வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், “சாயப்பட்டறைகள் ஒரு தவறும் செய்யவில்லை. பொதுமக்கள், வீடுகளில் சோப்புப்போட்டுக் குளித்ததால்தான் நொய்யலில் நுரைபொங்கியது. இப்போது நுரை வடிந்துவிட்டது” எனக் கூச்சமின்றி விநோதமான ஒரு விளக்கத்தைத் தந்தார்.

“நொய்யல் பிரச்னையைப் பத்திரிகையாளர்கள் பெரிதுபடுத்த வேண்டாம். அரசு இயங்குவதற்கு வருவாய் மிகவும் அவசியம். அது திருப்பூர் தொழில்துறையின் மூலம் அரசுக்கு நிறையவே கிடைக்கிறது. அதனால், தேவையற்ற சர்ச்சைகளை யாரும் உருவாக்கிவிடாதீர்கள்” என்றார். அருகில் இருந்த கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், “நான், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக இருந்தவன். எனக்கு அனைத்து ஊடக முதலாளிகளும் நன்றாகத் தெரியும்” எனச் சொல்லிவிட்டு, ‘‘நொய்யல் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டாம்’’ என்றார்.
 
‘‘திருப்பூர் சுற்றுவட்டாரங்களில் எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ, அன்றைய இரவில், நொய்யல் ஆற்றில் திருட்டுத்தனமாக சாயக் கழிவுகளைத் திறந்துவிடுவது வழக்கமாகி விட்டது. கடந்த வாரம் இப்படி திறந்துவிட்ட 23 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர், மக்களுக்கு விசுவாசமாக இல்லாமல், சட்டவிரோதமாக நடந்துகொள்ளும் சாயப்பட்டறை முதலாளிகள்மீது கரிசனம் காட்டுவதுதான் கொடுமை’’ எனக் கொதித்தார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நொய்யலில் நீராடுவாரா கருப்பணன்? - மங்குனி மந்திரி - 2

‘‘சாயப்பட்டறை அதிபர்களின் நலனுக்காக, இன்று திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மட்டும் ஒரு லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்கிறார் பா.ம.க-வின் மாநில  துணை பொதுச்செயலாளர் வடிவேல்.

அமைச்சர் கருப்பணனிடம் விளக்கம் கேட்டோம். “நான் ஏற்கெனவே சொன்ன கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. கோவைக்கும், திருப்பூருக்கும் இடையில் அமைந்துள்ள நல்லம்மன் தடுப்பணை வழியாகத்தான் நொய்யலாறு திருப்பூர் மாநகராட்சிக்குள் வந்தடைகிறது. அந்த அணையின் மேற்பகுதியில் எந்தச் சாயப்பட்டறையும் செயல்படுவதில்லை. அப்படியென்றால் கோவைப் பகுதி மக்களின் வீட்டுக் கழிவுநீர்தானே நொய்யலில் நுரையாக மாறியிருக்க வேண்டும். கோவை மாவட்ட மக்களின் வீடுகளிலிருந்து தினந்தோறும் சுமார் ஒரு கோடி லிட்டர் கழிவுநீர் நொய்யலாற்றில் கலக்கிறது. பெரும்பாலான வீடுகளில் சோப்பு பயன்படுத்துவதுதான் நொய்யலில் நுரை பொங்குவதற்குக் காரணமே தவிர, சாயப்பட்டறைகள் அல்ல. எங்கள் ஆட்சியில் பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்புத் திட்டம் கொண்டு வந்த பிறகு திருப்பூர் சாயப்பட்டறைகள் எந்தவிதமான தவறுமே செய்வது கிடையாது. இப்போது நொய்யலாறு 75 சதவிகிதம் வரை சுத்தமாகிவிட்டது” என்று ஒரே போடாக போட்டார்.

அப்படியென்றால், காவிரி புஷ்கரத்தில் நீராடியதுபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் நொய்யலுக்கு வந்து நீராடிச் செல்வார்களா?

- தி.ஜெயப்பிரகாஷ்