Published:Updated:

சொத்துகள்... தொடர்புகள்! - குறிவைக்கப்பட்ட 10 பேர் - செந்தில்பாலாஜி ரெய்டு பின்னணி

சொத்துகள்... தொடர்புகள்! - குறிவைக்கப்பட்ட 10 பேர் - செந்தில்பாலாஜி ரெய்டு பின்னணி
பிரீமியம் ஸ்டோரி
சொத்துகள்... தொடர்புகள்! - குறிவைக்கப்பட்ட 10 பேர் - செந்தில்பாலாஜி ரெய்டு பின்னணி

சொத்துகள்... தொடர்புகள்! - குறிவைக்கப்பட்ட 10 பேர் - செந்தில்பாலாஜி ரெய்டு பின்னணி

சொத்துகள்... தொடர்புகள்! - குறிவைக்கப்பட்ட 10 பேர் - செந்தில்பாலாஜி ரெய்டு பின்னணி

சொத்துகள்... தொடர்புகள்! - குறிவைக்கப்பட்ட 10 பேர் - செந்தில்பாலாஜி ரெய்டு பின்னணி

Published:Updated:
சொத்துகள்... தொடர்புகள்! - குறிவைக்கப்பட்ட 10 பேர் - செந்தில்பாலாஜி ரெய்டு பின்னணி
பிரீமியம் ஸ்டோரி
சொத்துகள்... தொடர்புகள்! - குறிவைக்கப்பட்ட 10 பேர் - செந்தில்பாலாஜி ரெய்டு பின்னணி

குடகு மலையிலிருந்து இறங்கி வராததால் வருமானவரித் துறையை இறக்கிவிட்டிருக்கிறார்கள். இதில் முதல் குறி செந்தில்பாலாஜி.

தி.மு.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்குக் கட்சி மாறிவந்த கரூர் செந்தில்பாலாஜி, குறுகிய காலத்திலேயே எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர், அமைச்சர் என உச்சம் தொட்டவர். ஆனால், அந்த உயரத்திலிருந்து அவரைத் தடாலடியாகக் கீழே தூக்கியடித்திருக்கிறது சமீபத்திய வருமானவரித் துறையின் ரெய்டு. செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளில், சுமார் 70 கோடி ரூபாய் வரையில் வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சொத்துகள்... தொடர்புகள்! - குறிவைக்கப்பட்ட 10 பேர் - செந்தில்பாலாஜி ரெய்டு பின்னணி

செப்டம்பர் 21-ம் தேதி, கோவை வருமானவரித் துறை கூடுதல் இயக்குநர் செந்தில்குமார் தலைமையில் கரூருக்கு வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள், எட்டு குழுக்களாகப் பிரிந்து ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். யார், யார் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது... அவர்களுக்கும் செந்தில்பாலாஜிக்கும் என்ன தொடர்பு என விசாரித்தோம்.

செந்தில்பாலாஜியின் மாமா ஆர்.சி. தியாகராஜனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிதி நிறுவனம், ஆர்.சி எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனி, பிரியா ஹேண்ட்லூம்ஸ் ஆகிய இடங்களில் ரெய்டு நடந்தது. 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் நடைபெற்ற பணப்பட்டுவாடா விஷயங்களில் இவர்தான் பின்னணியாகச் செயல்பட்டார் என்கிறார்கள். முறைகேடாகச் சம்பாதித்த பல கோடி ரூபாயை இவரிடம் கொடுத்துதான் வெள்ளையாக்க முயன்றாராம் செந்தில்பாலாஜி. ஆர்.சி. தியாகராஜனுக்குச் சொந்தமான பிரியா ஹேண்ட்லூம்ஸ் நிறுவனத்தின் பார்ட்னராக இருப்பவர் செல்வராஜ். இவர் செந்தில்பாலாஜிக்குத் தூரத்துச் சொந்தம். குப்புச்சிப்பாளையத்தில், செந்தில்பாலாஜி நிலம் வாங்க உதவிசெய்தவர் இவர். அதனாலேயே, இவரும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொத்துகள்... தொடர்புகள்! - குறிவைக்கப்பட்ட 10 பேர் - செந்தில்பாலாஜி ரெய்டு பின்னணி

இன்னொருவர் நவ்ரங்க் சுப்பிரமணியன். செந்தில்பாலாஜி முதல்முறையாக எம்.எல்.ஏ-வானபோதே, அவரைத் தன் நட்பு வட்டத்துக்குள் கொண்டுவந்துவிட்டார் நவ்ரங்க் சுப்ரமணியன். இவருக்குச் சொந்தமாக நிதி நிறுவனமும் நவ்ரங்க் சாயப்பட்டறை மற்றும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களும் இருக்கின்றன. இவரும் செந்தில்பாலாஜியின் முக்கிய பினாமி என்கிறார்கள். கரூரில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கும் திட்டத்துக்காகக் குப்புச்சிப்பாளையத்தில், நவ்ரங்க் சுப்பிரமணியன் மற்றும் இன்னும் சில பினாமிகளின் பெயர்களில் 100 ஏக்கர் நிலம் வாங்கினாராம் செந்தில்பாலாஜி. அதிலிருந்து 25 ஏக்கர் நிலத்தை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க தானமாகவும் கொடுத்தாராம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அங்கே வந்தால், நில மதிப்பு அதிகமாகும். பல கோடி லாபம் பார்த்துவிடலாம் என்று கணக்குப் போட்டே, விலைபோகாத அந்தப் பகுதியில் சில கோடிகளை வாரியிறைத்து இடம் வாங்கியதாகச் சொல்கிறார்கள். ‘100 ஏக்கர் நிலம் வாங்க, பணம் எப்படி வந்தது..?’ என்ற வருமானவரித் துறையின் கேள்வியில் மாட்டியிருக்கிறார் நவ்ரங்க் சுப்பிரமணியன்.

மாயனூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்தக்காரர் எம்.சி.எஸ். சங்கர். 2011-2016-ல் செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோதுதான், சங்கரின் தொழில் அசுரத்தனமாக வளர்ந்தது. மாவட்டம் முழுக்க அனைத்து அரசு வேலைகளையும் எடுத்து செய்துவந்தார். அதோடு, செந்தில்பாலாஜி வகித்த போக்குவரத்துத் துறை சம்பந்தமாக மாநிலம் முழுக்க ஒப்பந்தப் பணிகளையும் வாங்கிச் செய்தார். மேலும், அரசு போக்குவரத்துத் துறையில் கமிஷன் அடிப்படையில், வேலை வாங்கித் தருவது, பணி மாறுதல் பெற்றுத் தருவது என்று புரோக்கர் போலவும் செயல்பட்டுள்ளாராம். இந்த வகையில், இவரது எம்.சி.எஸ் நிறுவனம் வருமானவரித் துறை ரெய்டு வளையத்துக்குள் வந்திருக்கிறது. இவரின் சகோதரர் ஆனந்தும் மேற்கண்ட விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பதால், அவரும் விசாரணை வளையத்துக்குள் சிக்கியிருக்கிறார்.

கரூர், ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஆர்த்தி ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தின் பங்குதாரர்கள் மனோகரன், சாமிநாதன். இந்த நிறுவனத்தில்தான் நான்கு நாள்களும் விடாமல் ரெய்டு நடந்தது. ஜெயலலிதா பேரவையின் முன்னாள் செயலாளரான மனோகரன், அப்போது சிறிய அளவில் சாயப்பட்டறை நடத்தி வந்தார். செந்தில்பாலாஜியின் தொடர்பு கிடைத்த பிறகு, ‘ஆர்த்தி டெக்ஸ்’ நிறுவனத்தை ஆரம்பித்து, குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கிறார். பணிநியமன ஆணை வழங்குவதற்காகப் பெற்றதாகச் சொல்லப்படும் நான்கரை கோடி ரூபாயையும் ‘ஆர்த்தி டெக்ஸ்’ நிறுவனத்தில்தான் முதலீடு செய்திருந்தாராம் செந்தில்பாலாஜி. அதனால், இந்த நிறுவனத்தில் மட்டும் சற்றுக் கூடுதல் கவனத்துடன் ரெய்டு நடத்தினார்கள்.

நான்கு நாள் ரெய்டில், வருமானவரித் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் உரிமையாளர் தாரணி சரவணன். இவர் செந்தில்பாலாஜியின் பள்ளிக்கால நண்பர். செந்தில்பாலாஜிக்கு ஆல் இன் ஆல் இவர்தான் என்கிறார்கள். செந்தில்பாலாஜியின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கவே இவரது மேற்பார்வையில் மூன்றுக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் செயல்பட்டிருக்கின்றன.கரூர் லைட்ஹவுஸ் பகுதியிலிருந்த இவரது நிதி நிறுவனத்தைத்தான், வருமானவரித் துறை கூடுதல் இயக்குநர் சந்திரமவுலி கையெழுத்திட்ட பேப்பரை ஒட்டி சீல் வைத்திருக்கிறார்கள்.

கரூரில் பிரசித்திபெற்ற ‘கொங்கு மெஸ்’ஸின் உரிமையாளர் கொங்கு சுப்ரமணி. இவர் சமீபத்தில் வாங்கிய சொத்துகள் சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் அவரது நிதி நிறுவனத்தில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் இப்போது வருமானவரித் துறையின் கையில். தன்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில், இவரை நண்பராக்கிக் கொண்ட செந்தில்பாலாஜி, இவர் மூலமாகவும் பல கோடி ரூபாயை வெள்ளையாக்க முயற்சி செய்தது தற்போது தெரியவந்திருக்கிறது.

சொத்துகள்... தொடர்புகள்! - குறிவைக்கப்பட்ட 10 பேர் - செந்தில்பாலாஜி ரெய்டு பின்னணி

செப்டம்பர் 23-ம் தேதி திடீரென விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார் கிருஷ்ணா பிளைவுட் கம்பெனி உரிமையாளர் ரவி. கரூரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கான பாடி கட்டுதலுக்கு இவர்தான் பிளைவுட் சப்ளை செய்யும் கான்ட்ராக்டர். செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது, தரமில்லாத பிளைவுட்களை சப்ளை செய்து அமைச்சருக்குக் கோடிகளில் கமிஷன் வழங்கினாராம். 2004-ம் ஆண்டில், இவர் கொடுத்த பிளைவுட்டில் கட்டப்பட்ட அரசுப் பேருந்தின் பலகை உடைந்துபோனது. இதையடுத்து திருவாரூரில், பஸ்ஸுக்குள் இருந்த குழந்தை ஓட்டை வழியாக கீழே விழுந்து, மரணமடைந்த புகாரும் இவர் மீது உண்டு. செந்தில்பாலாஜிக்கும் இவருக்குமான பணப் பரிவர்த்தனைகளை மோப்பம் பிடித்துதான் மூன்றாம் நாள் விசாரணையில் இவர் கொண்டு வரப்பட்டார்.

திருச்சி வருமானவரித் துறை அலுவலகத்தில் தினம் ஒருவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென இந்தப் பத்துப் பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவர்களில் தியாகராஜன், நவ்ரங் சுப்பிரமணியன், சங்கர் மட்டும் விசாரணைக்காக சென்னைக்கு அழைக்கப்படலாம் என்கிறார்கள்.

- துரை.வேம்பையன்
  படங்கள்: எம்.விஜயகுமார், ந.ராஜமுருகன்