Published:Updated:

செல்போனா... சில்மிஷமா? - நர்ஸின் உயிரைப் பறித்தது எது?

செல்போனா... சில்மிஷமா? - நர்ஸின் உயிரைப் பறித்தது எது?
பிரீமியம் ஸ்டோரி
செல்போனா... சில்மிஷமா? - நர்ஸின் உயிரைப் பறித்தது எது?

செல்போனா... சில்மிஷமா? - நர்ஸின் உயிரைப் பறித்தது எது?

செல்போனா... சில்மிஷமா? - நர்ஸின் உயிரைப் பறித்தது எது?

செல்போனா... சில்மிஷமா? - நர்ஸின் உயிரைப் பறித்தது எது?

Published:Updated:
செல்போனா... சில்மிஷமா? - நர்ஸின் உயிரைப் பறித்தது எது?
பிரீமியம் ஸ்டோரி
செல்போனா... சில்மிஷமா? - நர்ஸின் உயிரைப் பறித்தது எது?

ருத்துவராக முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் உயிரைவிட்ட அனிதாக்களின் தேசத்தில், மருத்துவரின் அலட்சியத்தால் செவிலியர் ஒருவரின் உயிர் பறிபோன சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிசெய்த தாட்சாயிணி இப்போது உயிருடன் இல்லை. அந்தத் தனியார் மருத்துவமனையின் மருத்துவர் காந்திராஜ்தான், தாட்சாயிணி தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. தாட்சாயிணி, உயிருக்குப் போராடியபோதும்கூட, அவரைக் காப்பாற்றாமல் மருத்துவர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர்.

செல்போனா... சில்மிஷமா? - நர்ஸின் உயிரைப் பறித்தது எது?

தாட்சாயிணியின் தாய் மணிமேகலையிடம் பேசினோம், ‘‘ஒரு வாரமாவே என் பொண்ணு சரியா சாப்பிடாம தூங்காம ஏதோ மிரட்சியாவே இருந்தா. சம்பவம் நடந்த செவ்வாய்க்கிழமை டூட்டி முடிஞ்சு வீட்டுக்கு வந்தப்போ அவளுக்குக் கண்கலங்கியிருந்துச்சு. இரவு ஏழரை மணிக்கு ‘எனக்குப் படபடனு வருது’னு சொன்னவ அப்படியே கீழே விழுந்துட்டா. வாயில இருந்து நுரைத் தள்ள ஆரம்பிச்சுது. பதறிப்போயி காந்திராஜ் டாக்டரோட ஆஸ்பத்திரிக்கே கொண்டுபோனோம். ஆட்டோவுல போய்க்கிட்டிருந்தப்பவே, ‘என்னை, காந்திராஜ் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகாத... நான் மருந்து குடிச்சதுக்குக் காரணமே அவர்தான். அவர், என்னைப் பொழைக்கவைக்க மாட்டாரு. கொன்னுடுவாரு’ன்னு சொன்னா. அவ சொல்றதைப் பெருசா எடுத்துக்காம ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனோம். ‘தாட்சாயிணி மருந்து குடிச்சுட்டா, பெட்டுக்குத் தூக்கிட்டுப் போங்க’னு சொன்னேன். அதுக்கு, ‘உங்களை, உள்ளே விடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. இங்க ட்ரீட்மென்ட் பார்க்க முடியாது. தூக்கிட்டுப் போங்க’னு ரிசப்ஷன்ல சொன்னாங்க. உடனே, கோவில்பட்டி  ஜி.ஹெச்சுக்குத் தூக்கிட்டுப் போனோம். அங்கே, ‘பாளையங்கோட்டை ஜி.ஹெச்சுக்குக் கொண்டுபோங்க’னு சொல்லிட்டாங்க. பாளையங்கோட்டையிலும் சிகிச்சையை உடனே ஆரம்பிக்கல. சொந்தக்காரங்க எல்லாருமே கோபமாப் பேசின பிறகுதான், விஷத்தை வெளியே எடுத்தாங்க. பிறகு, என் பொண்ணு இறந்துட்டதாச் சொன்னாங்க’’ என்று கண்கலங்கியவர் தொடர்ந்து, ‘‘ ‘எங்க காந்திராஜ் டாக்டர் சரியில்லம்மா... எல்லா நர்ஸ்களிடமும் கண்ட இடத்துல தொட்டுத்தான் பேசுவாரு. என்கூட வேலை பார்க்குற சில நர்ஸ்கள் அவரோட நெருக்கத்துல இருக்காங்க. இது, ஆஸ்பத்திரியில எல்லாருக்குமே தெரியும். ஆனா, அதேமாதிரி எங்கிட்டயும் ஏதாவது சில்மிஷம் செஞ்சா என்னையே மாய்ச்சுக்குவே’னு சொன்னா. அதே மாதிரி செஞ்சுட்டா’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செல்போனா... சில்மிஷமா? - நர்ஸின் உயிரைப் பறித்தது எது?

டாக்டர் காந்திராஜை போனில் தொடர்புகொண்டோம். ‘‘தாட்சாயிணி இங்கே நர்ஸா வேலை பார்த்தாங்க.  பிரச்னை எதுவும் இல்லை. ஏன் விஷம் குடிச்சாங்கனு தெரியலை’’ என அவர் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோதே, ‘‘அப்பா, காய்ச்சலினால் ரெஸ்ட்ல இருக்காங்க’’னு சொல்லி அவருடைய மகள் பத்மபிரபா பேசினார். ‘‘எங்க அப்பாமீது பாலியல் ரீதியா குற்றம்சாட்டுறது உண்மைனா அந்தப் பொண்ணு எங்கிட்ட நேரடியா வந்து சொல்லியிருக்கலாம். அப்படி ஏன் சொல்லலை? அப்பாவுக்கு இப்போ வயசு 71. தலைசுற்றல் பிரச்னையும் இருக்கு. அதனால ஓ.பி முடிஞ்சதும் மாடிக்குப் போய் சாப்பிட்டுவிட்டு அப்படியே தூங்கிடுவாங்க. அதுக்குப் பிறகு கேஸ் வந்தா ஜி.ஹெ-ச்சுக்கு அனுப்புவோம். அந்த நேரத்துலதான் தாட்சாயிணியைக் கூட்டிட்டு வந்திருக்காங்க. ‘பாயசன் கேஸ் வந்திருக்கு’னுதான் மற்ற நர்ஸ் சொன்னாங்க. மூணு மாசத்துக்கு முன்னாலகூட வேலை பாக்குற ஒரு நர்ஸோட போனை தாட்சாயிணி திருடி மூவாயிரம் ரூபாய்க்கு வித்திருக்காங்க. இது, அப்பாவுக்குத் தெரிஞ்சதும் தாட்சாயிணியை அழைச்சு சத்தம்போட்டு மூவாயிரம் ரூபா பணத்தை அந்தப் பொண்ணுகிட்ட கொடுக்கச் சொன்னாங்க. மத்தபடி வேறெந்த பிரச்னையும் இல்ல’’ என்றார்.

கோவில்பட்டி கிழக்குக் காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ், ‘‘செல்போனைத் திருடிவித்த விஷயம் நர்ஸுக்கும் டாக்டருக்கும் தெரிஞ்சதுனால இந்தப் பொண்ணு இப்படித் தற்கொலை பண்ணிடுச்சு. தற்கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்துறோம்’’ என்றார்.

செல்போனா... சில்மிஷமா? - நர்ஸின் உயிரைப் பறித்தது எது?

கோவில்பட்டி, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் கமலவாசன், ‘‘தாட்சாயிணிய, மூணுமணி நேரம் கழிச்சுத்தான் இங்கே கொண்டு வந்தாங்க. வந்ததுமே, விஷமுறிவு மருந்தும் கொடுத்தோம். ஆனாலும், அவரோட ஆக்சிஜன் ரத்தத்தில் கலக்கும் அளவு குறைஞ்சுட்டே வந்துச்சு. இந்தச் சூழ்நிலையில எம்.டி பொது மருத்து நிபுணரின் ஆலோசனை தேவை. இந்த ஜி.ஹெச்சுல எம்.டி பொது மருத்துவ நிபுணர் பற்றாக்குறையால் மேல் சிகிச்சைக்காக, அவர்கள் வந்த 40-வது நிமிஷத்துலேயே பாளையங்கோட்டை ஜி.ஹெச்சுக்கு அனுப்பிட்டோம்’’ என்றார்.

தாட்சாயிணி மரணத்துக்குக் காரணம் செல்போனா.... சில்மிஷமா?

- இ.கார்த்திகேயன்
படங்கள்: ஏ.சிதம்பரம்