Published:Updated:

“சி.எம் பஸ்ஸையே மறிக்கிறீங்களா...”

“சி.எம் பஸ்ஸையே மறிக்கிறீங்களா...”
பிரீமியம் ஸ்டோரி
“சி.எம் பஸ்ஸையே மறிக்கிறீங்களா...”

சவால்விட்ட கண்டக்டர்... சிறையில் தள்ளிய போலீஸ்!

“சி.எம் பஸ்ஸையே மறிக்கிறீங்களா...”

சவால்விட்ட கண்டக்டர்... சிறையில் தள்ளிய போலீஸ்!

Published:Updated:
“சி.எம் பஸ்ஸையே மறிக்கிறீங்களா...”
பிரீமியம் ஸ்டோரி
“சி.எம் பஸ்ஸையே மறிக்கிறீங்களா...”

‘‘எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆன பிறகு, பினாமி பெயர்களில் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன’’ - இப்படியான பேச்சு பரவலாக அடிபட்டுக்கொண்டிருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக சேலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

“சி.எம் பஸ்ஸையே மறிக்கிறீங்களா...”

பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸை நிறுத்தச் சொன்னதில் ஏற்பட்ட தகராறுக்காக, ‘‘சி.எம் பஸ்ஸையே மறிச்சுட்டீங்களா? என்ன நடக்கப் போகுது பாருங்க...’’ என்று மூன்று பேரைச் சிறையில் அடைத்து, களேபரம் செய்திருக்கிறார்கள் பேருந்து ஊழியர்கள். என்ன நடந்தது? கைதுசெய்யப்பட்ட அருண்குமார் என்பவரின் மனைவி கமலேஸ்வரியிடம் பேசினோம். ‘‘செப்டம்பர் 18-ம் தேதி, நானும் என் வீட்டுக்காரரும் கைக்குழந்தையுடன் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கலைமகள் பஸ்ஸில் ஏறினோம். என் கணவர், மல்லூருக்கு இரண்டு டிக்கெட் கேட்டார். அதற்கு, ‘எத்தனைமுறை சொன்னாலும் காது கேட்காதா? மல்லூரில் பஸ் நிற்காது. முதலில் இறங்குய்யா’ என்று கண்டக்டர் ஒருமையில் திட்டினார். உடனே பஸ்ஸைவிட்டுக் கீழே இறங்கிட்டோம். வீட்டுக்காரர், அவங்க அப்பா பழனியப்பனுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னார். எங்க ஊர்க்காரர்களெல்லாம் ஒன்று சேர்ந்து கலைமகள் பஸ்ஸை மல்லூரில் நிறுத்தி கண்டக்டர், டிரைவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். சம்பவம் நடந்தபோது நானும், எங்க வீட்டுக்காரரும் சேலத்தில் இருந்தோம். என் வீட்டுக்காரர் கண்டக்டரைத் திட்டவுமில்லை, அடிக்கவுமில்லை. ஆனால், என் வீட்டுக்காரர் மீது வன்கொடுமைச் சட்டம் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டு சிறையில் அடைத்துவிட்டார்கள். என் மாமனார் பழனியப்பன் தலைமறைவாக இருக்கிறார்’’ என்று கண்ணீர்விட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சி.எம் பஸ்ஸையே மறிக்கிறீங்களா...”

அருண்குமாரின் உறவினர் பிரேம், ‘‘அந்த பஸ் ஊருக்கு வந்ததும், கண்டக்டர் மாயக்கண்ணன், ‘பஸ்ஸை நிறுத்த முடியாது... நீ செய்வதைச் செய்’ என்று ரொம்பத் திமிராகப் பேசினார். அதனால் கோபத்தில் ஊர்க்காரங்க அடிச்சுட்டாங்க. அதற்குப் பிறகு, ‘இது முதல்வர் எடப்பாடி பழனிசாமியோட பஸ். சி.எம்-மோட பஸ்ஸையே நிறுத்திட்டீங்களா? உங்களை அவர் என்ன செய்யப்போறார் பாருங்க...’ என்று சொல்லி யாருக்கோ போன் பண்ணிட்டு மல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பிறகு, ஒரு டி.எஸ்.பி தலைமையிலான டீம் வந்து அருண்குமார், தங்கதுரை, பழனியப்பன், வெங்கடாசலம், என் அப்பா ராஜா ஆகியோர் மீது அடிதடி, பஸ் கண்ணாடி உடைப்பு, வன்கொடுமைச் சட்டம் என ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டனர். நடு இரவில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து அருண், ராஜா, தங்கதுரை  ஆகியோரைக் கைதுசெய்தனர். பஸ் மீது யாரும் கைவைக்கவில்லை. ஆனால், கண்ணாடியை உடைத்ததாக வழக்குப்போட்டிருக்கிறார்கள்’’ என்றார்.

மல்லூர் மக்கள் நலப் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் மோகன், ‘‘மல்லூர் புறவழிச் சாலையில் சேலம் டு நாமக்கல் பைபாஸ் ரோடு போட்ட பிறகு, மல்லூர் ஸ்டாப் பெர்மிட் வாங்கிய பஸ்கள், மல்லூருக்குள் வராமல் பைபாஸ் ரோட்டிலேயே செல்கின்றன. இதனால், மல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதியில்லாமல் அவதிப்பட்டோம். இதற்காகவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மல்லூர் மக்கள் நலப் பாதுகாப்பு கமிட்டியை உருவாக்கினோம். மல்லூர் பெர்மிட் வாங்கிய பேருந்துகளும் மல்லூருக்குள் வந்து மக்களை ஏற்றிச்செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல போராட்டங்கள் நடத்தினோம். அந்த பஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குச் சொந்தமானது என்றும், அதனால்தான் போலீஸ் இவ்வளவு விசுவாசமாக நடந்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். உண்மையில் அந்த பஸ் முதல்வருடையது என்றால், அந்த பஸ் நிர்வாகம் இன்னும் கூடுதல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இதற்கு எதிராக, மிகப்பெரிய போராட்டத்தை விரைவில் நடத்துவோம்’’ என்றார்.

“சி.எம் பஸ்ஸையே மறிக்கிறீங்களா...”

சங்ககிரி டி.எஸ்.பி அசோக்குமார், ‘‘அவர்கள் கண்டக்டரை அடித்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அதன் அடிப்படையில் வழக்கு போடப்பட்டுள்ளது. பஸ் உரிமையாளர் யார் என்று தெரியாது. கண்டக்டர் கொடுத்த புகாரின் பெயரிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

சங்ககிரியைச் சேர்ந்த கலைமகள் பஸ் உரிமையாளர் அப்பு கவுண்டரிடம் கேட்டதற்கு, ‘‘அது யாருடைய பஸ் என்று தெரியவில்லை. ஆனால், எங்கள் பஸ் பெயரில் ஓடுகிறது. வண்டி என்னுடையது கிடையாது என்று கூறிவிட்டேன். பஸ் நிற்கவில்லை என்று கேட்டதற்காக வன்கொடுமைச் சட்டமெல்லாம் போட்டிருப்பது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது’’ என்றார்.

கலைமகள் பஸ் உரிமையாளர், அந்த பஸ் என்னுடையது இல்லை என்கிறார். அது யாருடைய பஸ்? சி.எம்-முக்கே வெளிச்சம்.

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்