Published:Updated:

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!
பிரீமியம் ஸ்டோரி
டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

Published:Updated:
டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!
பிரீமியம் ஸ்டோரி
டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!
டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

‘‘செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யா அரசு அகல வேண்டும். அரசு தூங்குகிறது பெற்றோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலைப் பெறாது அமையாதீர்’’ - டெங்குவுக்கு எதிராகப் பொங்க ஆரம்பித்துவிட்டார் கமல்.

தமிழகம் ஆபத்தான ஒரு சூழலில் சிக்கியிருக்கிறது. டெங்கு, மலேரியா போன்ற கொடூரக் காய்ச்சல்கள் இதற்கு முன்பு இவ்வளவு வேகமாகப் பரவியதில்லை. கிட்டத்தட்ட வீட்டுக்கு ஒருவர், ஏதோ ஒரு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் கிடக்கிறார்கள். காய்ச்சல் நோயாளிகளால் அரசு மருத்துவமனைகள் திக்குமுக்காடுகின்றன. வந்திருப்பது வைரஸ் காய்ச்சலா, டெங்குக் காய்ச்சலா, மலேரியாவா, ஜப்பானிய மூளைக் காய்ச்சலா, சிக்குன் குன்யாவா, பன்றிக் காய்ச்சலா, எலிக் காய்ச்சலா எனத் தெரியாமல் தமிழக மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலே இல்லை. இது, வெறும் மர்மக் காய்ச்சல்தான்’ என்று சாதித்துவந்த தமிழக அரசு, ‘5 ஆயிரம் பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று அண்மையில் ஒப்புக்கொண்டுள்ளது. தமிழகத்தில் தற்போது, 2,500 பேருக்கு மலேரியா உறுதிசெய்யப்பட்டுள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மாறும் சீதோஷ்ணம் காரணமாக, காய்ச்சல் பரவுவது இயல்புதான். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக இருக்கிறது. வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களை முன்பே கணித்து சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து, கொசு ஒழிப்பு போன்ற பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கும்.இந்த ஆண்டு, அப்படியான எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2012-ல் மதுரை மாவட்டத்தில் டெங்கு பாதிப்புத் தொடங்கியது. அது, தமிழகம் முழுமைக்கும் பரவியது.  2015-ல் மீண்டும் டெங்கு ஊடுருவியது. இந்த ஆண்டு, மிகத் தீவிரமாக தமிழகத்தைப் பாதித்திருக்கிறது டெங்கு. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, டெங்குவின் பாதிப்பை மறைக்க முயற்சி செய்வதிலேயே மத்திய, மாநில அரசுகள் குறியாக உள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்வதில்தான், அவர்களின் முழுக்கவனமும் இருக்கிறது.

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநரும் இந்தியப் பொது சுகாதாரச் சங்கத்தின் தமிழகத் தலைவருமான எஸ்.இளங்கோ, “டெங்கு காய்ச்சல், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ, அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. 2006-ல் தமிழ்நாட்டில் ‘சிக்குன் குன்யா’ பரவியது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அப்போதைய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை என அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் மூன்று மாதங்களில் சிக்குன் குன்யா கட்டுப்படுத்தப்பட்டது. இப்போதைய அரசு, டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் தோல்வியடைந்துள்ளது. எந்தத் துறைகளிலும் ஒருங்கிணைப்பே இல்லை.செயல்பாடுகளைத் துரிதப்படுத்தவும் நடவடிக்கை இல்லை. இப்போது கொசுக்களின் தற்காப்புத்திறன் பல மடங்கு அதிகரித்துவிட்டது. டெங்குவைப் பரப்பும் ஈடிஸ் கொசுவை, ‘டைகர் மஸ்கிட்டோ’ என்று சொல்வார்கள். இது வீட்டைச் சுற்றியும், வீட்டுக்குள்ளும் வாழும். மலேரியாவைப் பரப்பும் அனப்பளஸ் கொசு, பெரிய தண்ணீர் தொட்டிகள் மற்றும் கிணறுகளில் வசிக்கும்.

1980-களில் ஒருசில மாவட்டங்களில் மட்டுமே இருந்த டெங்கு, இப்போது சீதோஷண எல்லைகளைக் கடந்து, நீலகிரி மற்றும் கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளிலேயே வீரியத்தோடு தாக்குப்பிடிக்கும் அளவுக்குத் திறனை வளர்த்துக்கொண்டுவிட்டது. களத்தில் நின்று பணியாற்ற வேண்டிய ஊழியர்களின் பணியிடங்கள் பெரும்பாலும் காலியாக உள்ளன. களத்துக்குப் போய் டாக்டர்கள் வேலை செய்வதில்லை. இப்போதைய தேவை களப்பணியாளர்கள்தான். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை. மாவட்டத்துக்கு ஒரு பூச்சியியல் வல்லுநர்தான் இருக்கிறார். ஒருங்கிணைந்த கொசு ஒழிப்புத் திட்டம், ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. டெங்குவுக்கு எதிராகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது. எனவே, பல்துறை ஒருங்கிணைப்புடன் உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்” என்கிறார்.

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

மலேரியாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 70 சதவிகிதம் பேர் சென்னையில் மட்டுமே இருக்கிறார்கள்.குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளில் கழிவுநீர் வெளியேற வசதிகள் இல்லை. குடிநீர் தொட்டிகளையும் சரிவரப் பராமரிப்பதில்லை. டெங்கு, மலேரியா பரப்பும் கொசுக்களின் இருப்பிடமாக தண்ணீர்தொட்டிகள் உள்ளன.1990-ல், பானை வடிவில் கறுப்பு நிறத்திலான ஒரு தண்ணீர் தொட்டியை குடிசைமாற்று வாரியத்துக்குச் சுகாதாரத் துறை வடிவமைத்துக் கொடுத்தது. கறுப்பு நிறம், வெப்பத்தை உள்வாங்கும் தன்மையைக்கொண்டதால், தொட்டிக்குள் சென்றாலே கொசுக்கள் இறந்துவிடும். ஆனால், இன்றுவரை அந்தத் தொட்டியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவில்லை.  

மருத்துவ உரிமைக்கான செயற்பாட்டாளர் சி.ஆனந்தராஜிடம் பேசினோம். “2012-ல், மதுரை மாவட்டத்தில் ஆரம்பித்து விருதுநகர், திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் என்று தென் தமிழகத்தைக் கடுமையாகத் தாக்கியது டெங்கு. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மர்மக் காய்ச்சல் என்று சொல்லிவந்த தமிழக அரசு, அதன்பிறகுதான் செயல்படவே ஆரம்பித்தது. மத்திய அரசின் பூச்சியியல் துறை வல்லுநர்கள் மதுரைக்கு வந்தார்கள். அவர்கள், ‘மாஸ்டர் பிளான்’ என்ற தலைப்பில், மதுரை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஆய்வுத்தொகுப்பை அளித்தனர். அதில் குறிப்பிடப்பட்ட திட்டங்களை இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை. டெங்கு பாதித்தவர்களுக்கு அதிகளவில் ரத்தம் தேவை. பெரும்பாலான அரசு தாலுகா மருத்துவமனைகளில், ரத்தத்தைப் பதப்படுத்தி வைப்பதற்கான நவீன வசதிகள் இல்லை. அங்கு, பொதுவான காய்ச்சலுக்குரிய மாத்திரைகளையே கொடுக்கிறார்கள். இதனால் உயிரிழப்பு அதிகமாகிறது” என்கிறார் சி.ஆனந்தராஜ்.

மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு.கணேசன், “டெங்கு கிருமியில் நான்கு வகைகள் உள்ளன. அதன் தாக்குதலிலும் பல கட்டங்கள் இருக்கின்றன. சாதாரண வைரஸ் காய்ச்சல்போல் ஒரு வாரத்தில் வந்துசெல்கிற டெங்குவும் உண்டு. கடுமையாகத் தாக்கி, உயிரிழப்புவரை இழுத்துச்செல்லும் டெங்குவும் உண்டு. இப்போது, டெங்கு கிருமிகள் முன்பைவிட மிகவும் வீரியம் பெற்றுள்ளன. இதனால், டெங்கு ரத்தக்கசிவுக் காய்ச்சல் (Dengue hemorrhagic fever) எனும் ஆபத்தான கட்டத்துக்குச் செல்லும் நோயாளிகள் அதிகமாகின்றனர். ஒரே சமயத்தில் ஒரே நபரை இரண்டுக்கும் மேற்பட்ட டெங்கு கிருமி வகைகள் தாக்குவது நடக்கிறது. இதனால், நோயாளியின் உயிருக்கு ஏற்படும் ஆபத்து பல மடங்கு அதிகரிக்கிறது. டெங்குவைக் கண்டறிய ‘எலிசா’ எனும் பரிசோதனையை, ஆரம்பச் சுகாதார நிலையம் தொடங்கி எல்லா அரசு மருத்துவமனைகளிலும் மேற்கொண்டால், டெங்குவைச் சீக்கிரத்தில் கட்டுப்படுத்திவிடலாம். ஆனால், இந்தப் பரிசோதனை பெருநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருக்கிறது. இதனால், மரணங்களைக் கட்டுப்படுத்துவதும் கடினமாகிறது.டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவற்றைத் தடுப்பதற்கான செயல்திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை.இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கு மத்திய அரசுத் துடிக்கிறது” என்கிறார்.

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

சூறாவளியைப்போலச் சுழன்றடிக்கும் கொள்ளைநோய்களைத் தடுக்க, கட்டுப்படுத்த, ஒழித்துக்கட்ட போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘அம்மா இட்லியும் கெட்டிச்சட்னியும் சாப்பிட்டாரா, இல்லையா?’ என்ற பட்டிமன்றத்தை நிறுத்திவிட்டு, காய்ச்சலை ஒழித்துக்கட்ட தமிழக ஆட்சியாளர்கள் களமிறங்குவார்களா?

- வெ.நீலகண்டன்

மலேரியா

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

 பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் என்ற ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட ‘அனோபலஸ்’ என்ற கொசுவால் மலேரியா பரவுகிறது. கிணறு, ஏரி, குளம், வயல்வெளி, சுத்தமான நீர்நிலைகள் ஆகியவற்றில் இந்தக் கொசுக்கள் வளரும். இந்தக் கொசுக்கள் கடிக்கும்போது அவற்றின் உமிழ்நீர் வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்துவிடும். பின்பு, அவை ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் செல்லும். ஒரு வாரம்வரை கல்லீரலில் தங்கி, கோடிக்கணக்கில் பெருகும். பிறகு, அங்கிருந்து ரத்தத்துக்கு வந்து ரத்தச் சிவப்பணுக்களை அழிக்கும்.

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

கொசுக் கடித்த ஒரு சில வாரங்களுக்குப் பிறகே மலேரியா வெளிப்படும். சிலருக்கு, சில வருடங்களுக்குப் பிறகுகூட நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது வெளிப்படும். மலேரியாவை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். மலேரியாவுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சைப் பெறவேண்டும். மலேரியா முற்றினால் மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு, வலிப்பு வரும். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, ‘பிளாக் வாட்டர் காய்ச்சல்’ வரக்கூடும்.

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

பரிசோதனைகள்: முதல் வாரத்திலேயே பரிசோதனை மூலம் மலேரியா பாதிப்பைக் கண்டறிய வேண்டும். இல்லையெனில், மோசமான பாதிப்பு ஏற்படும். மலேரியாவுக்கென தடுப்பூசிகள் இதுவரை கண்டறியப்படவில்லை. குளோரோகுயின், பிரைமாகுயின் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மலேரியா பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளலாம். 

டெங்கு

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

தண்ணீர் மற்றும் காற்று மூலமாகவும், டெங்கு பாதித்தவர்களின் இருமல், தும்மல் மூலமாகவும் டெங்கு பரவாது. ‘ஏடிஸ் எஜிப்தி’ ( Aedes aegypti) எனும் கொசுக்கள் கடிப்பதால் மட்டுமே டெங்கு பரவும். ஏடிஸ் கொசு, கறுப்பு நிறமுடையது. இதன் சிறகுகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படும். இவற்றில், பெண் கொசு மட்டும்தான் டெங்குவை மனிதனுக்குப் பரப்புகிறது.

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

அறிகுறிகள்: கடுமையான காய்ச்சல் (104 டிகிரி ஃபாரன்ஹீட்/ 40 டிகிரி செல்சியஸ்), கடும் தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூச்சம், உடலில் சிவப்புப் புள்ளிகள். எலும்புகளை முறித்துப்போட்டதைப்போல எல்லா மூட்டுகளிலும் கடுமையான வலி.

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

  பெரும்பாலும் ஏழு நாள்களில் டெங்கு குணமாகிவிடும். வெகுசில நேரங்களில் ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள்  குறைந்துவிடும். நுரையீரல், பல் ஈறு, சிறுநீர்ப் பாதையில் ரத்தக்கசிவு ஏற்படலாம். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

மூன்று நாள்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், மருத்துவமனைக்குச் சென்று, என்.எஸ் 1 ஆன்டிஜன், டெங்கு ஐ.ஜி.எம் அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை மூன்று லட்சம்வரை இருக்கும். டெங்கு வந்தவருக்கு, தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். அதனால் ரத்தத் தட்டணுக்கள், ரத்தத்தின் நீர்ப்பளவு பரிசோதனைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி இரண்டு அல்லது மூன்று நாள்கள் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டும்.

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

  டெங்குக் காய்ச்சலுக்கு எனத் தனியாகச் சிகிச்சை எதுவுமில்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டமால் மாத்திரையும், உடல்வலியைப் போக்க உதவும் மருந்துகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே அதிர்ச்சி நிலை ஏற்படும். அதற்கு, குளுக்கோஸ் மற்றும் சலைன் தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட, நரம்பு மூலமாக தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

  டெங்குவிலிருந்து தற்காத்துக்கொள்ள இப்போதைக்கு தடுப்பூசி எதுவுமில்லை. கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

நிலவேம்பு கஷாயம், ஆடாதொடா இலைக் குடிநீர், பப்பாளி இலைச்சாறுப் போன்றவை டெங்குவின் பாதிப்பிலிருந்து காக்கும். `வாசா குடுஜியாதி கஷாயம்’, `சுதர்சன சூரணம்’ போன்ற மருந்துகள் ரத்தத் தட்டுகளை அதிகரிக்கும். காய்ச்சலைக் குறைக்கும்.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல்

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

கியூலெக்ஸ் என்ற ஒரு வகை கொசுக்களால் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரவுகிறது. ஆறு, கண்மாய், கிணறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் இந்தக் கொசுக்கள் உருவாகின்றன. இவற்றுக்கு மிகவும் பிடித்தது பன்றி மற்றும் பறவைகளின் ரத்தம். பன்றி மற்றும் பறவைகளைக் கடிப்பதால், கொசுக்களின் உடலிலுள்ள வைரஸின் வீரியம் அதிகரிக்கிறது. பன்றி மற்றும் பறவைகளைக் கடிக்காமல், இந்தக் கொசுக்கள் நேரடியாக மனிதர்களைக் கடித்தால், மனிதரின் உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியே இந்த வைரஸ் கிருமியை அழித்துவிடும்.

டெங்கு... மலேரியா... ஜுரத்தில் நடுங்கும் மக்கள்... கவலைப்படாத அரசு!

நகரங்களைவிட, கிராமங்களில்தான் இந்த வைரஸின் தாக்கம் அதிகம். 15 வயதுக்குட்பட்ட  குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால், இந்த வைரஸ் தீவிரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஐந்து முதல் 15 நாள்களில் இதன் பாதிப்பின் அறிகுறிகள் தென்படும். தலைவலி, காய்ச்சல், வாந்தி, உடல் சோர்வு, படபடப்பு, மூட்டுவலி, மனஅழுத்தம் போன்ற அறிகுறிகள் தென்படும். உரிய சிகிச்சை பெறவில்லையென்றால் மூளையில் வீக்கம், பக்கவாதம் ஏற்படுவதுடன் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இந்த காய்ச்சலைக் கட்டுப்படுத்த மருந்துகளும் வலிநிவாரணி மாத்திரைகளும் தரப்படும். இதற்குத் தடுப்பூசி உண்டு. தற்போது, இந்தக் காய்ச்சல் தமிழகத்தில் பரவத் தொடங்கியுள்ளது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.