Published:Updated:

கோஷ்டி சண்டைகள்... கோர்ட் வழக்குகள்... களையிழக்கும் யாதவர் கல்லூரி!

கோஷ்டி  சண்டைகள்...  கோர்ட் வழக்குகள்... களையிழக்கும் யாதவர் கல்லூரி!
பிரீமியம் ஸ்டோரி
கோஷ்டி சண்டைகள்... கோர்ட் வழக்குகள்... களையிழக்கும் யாதவர் கல்லூரி!

கோஷ்டி சண்டைகள்... கோர்ட் வழக்குகள்... களையிழக்கும் யாதவர் கல்லூரி!

கோஷ்டி சண்டைகள்... கோர்ட் வழக்குகள்... களையிழக்கும் யாதவர் கல்லூரி!

கோஷ்டி சண்டைகள்... கோர்ட் வழக்குகள்... களையிழக்கும் யாதவர் கல்லூரி!

Published:Updated:
கோஷ்டி  சண்டைகள்...  கோர்ட் வழக்குகள்... களையிழக்கும் யாதவர் கல்லூரி!
பிரீமியம் ஸ்டோரி
கோஷ்டி சண்டைகள்... கோர்ட் வழக்குகள்... களையிழக்கும் யாதவர் கல்லூரி!

துரையில் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கிவந்த ‘யாதவர் கல்லூரி’, போராட்டம், கோர்ட், வழக்கு, கோஷ்டிபூசல்  போன்ற காரணங்களால் சீரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

தென் மாவட்ட ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கில், யாதவர் சமூகப் பெரியவர்களால் மதுரை ஊமச்சிகுளத்தில் 1969-ல் உருவாக்கப்பட்டது யாதவர் கல்லூரி. கல்லூரியின் தற்போதைய நிலைபற்றி நம்மிடம் பேசிய யாதவர் தன்னுரிமை பயிலகத்தின் நிர்வாகி கபிலன், ‘‘யாதவர் சமூகத்தினருக்கு உதவும் நோக்கில் ‘யாதவர் கல்வி நிதி’ என்ற பெயரில் சொசைட்டியை ஆரம்பித்து, 1969-ல் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. யாதவர்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தினரும் பயனடைந்தனர். பல மாவட்டங்களிலும் உள்ள யாதவ சமூகத்தினர் 4,130 பேர், இந்தக் கல்லூரிக்காக நிதியுதவி செய்திருக்கின்றனர். தமிழக அரசு, 1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கப் பதிவுச்சட்டத்தில் புதிய விதிகளை வெளியிட்டது. அந்தப் புதிய விதிகளின்படி, ‘யாதவர் கல்வி நிதி’ உறுப்பினர்களோடு, யாதவர் கல்லூரி நிர்வாகத்தையும் இணைத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார்கள்.

கோஷ்டி  சண்டைகள்...  கோர்ட் வழக்குகள்... களையிழக்கும் யாதவர் கல்லூரி!

‘யாதவர் கல்வி நிதி’ மூலம் உருவாக்கப்பட்ட யாதவர் கல்லூரிக்கு உதவிசெய்த 4,130 பேரைக் கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல், 1969 முதல் 2000-ம்  ஆண்டுவரை முழு முகவரியுடன் வெளியிடப்பட்டது. இந்த அடிப்படையிலேயே யாதவர் கல்லூரி நிர்வாகத்துக்குத் தேர்தலும் நடைபெற்றுவந்தது. அந்த வரிசையில், 2003-ம் ஆண்டு தேர்தல்மூலம் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சந்திரன். அவருக்குப் பிறகு, தேர்தல்மூலம் அல்லாமல், குறுக்கு வழியில் சிலர் பொறுப்புகளுக்கு வரத்தொடங்கினார்கள். இதில்தான் பிரச்னை ஆரம்பித்தது. இதற்கிடையே, ‘யாதவர் கல்வி நிதி’யில் அங்கம்வகித்த குறிப்பிட்ட சிலர், ‘நாங்கள்தான் கல்லூரியை நிர்வாகம் செய்வோம், எங்களுக்குத்தான் அந்த உரிமை உள்ளது’ என்று வழக்குத் தொடுத்தனர். ஆரம்பத்தில் கல்லூரிக்கு உதவுவதாக வந்த முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனின் சம்பந்தியான கே.பி.நவநீதகிருஷ்ணன், தி.மு.க ஆட்சியின்போது,  2007-ல் கல்லூரிச் செயலாளராகப் பதவிபெற்று நிர்வாகம் செய்தார். அதை எதிர்த்துச் சிலர் வழக்குப் போட்டனர். அதைத்தொடர்ந்து பதிலுக்குப் பதில் வழக்குகளால் கல்லூரி நிர்வாகம் ஆட்டம் காணத் தொடங்கியது. கடைசியில், அவர் கல்லூரிக்குள் வருவதற்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. அதோடு, 2012 பிப்ரவரியிலிருந்து கல்வித்துறை இணை இயக்குநர் பொறுப்பில் கல்லூரி செயல்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோஷ்டி  சண்டைகள்...  கோர்ட் வழக்குகள்... களையிழக்கும் யாதவர் கல்லூரி!

யாதவ சமூகத்தினரால் உருவாக்கப்பட்ட கல்வி ஆலயம், கையைவிட்டுப் போய்விடுமோ என்ற கவலை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. தனி நபர்கள் சிலரின் ஈகோ, அரசாங்கத்தின் அலட்சியம் ஆகியவற்றால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பத்து வருடங்கள் இணை இயக்குநர் நிர்வாகத்தில் ஒரு கல்லூரி இருந்தால், அதை அப்படியே அரசு எடுத்துக்கொள்ள விதி உள்ளது. ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. நாங்களும் அனைவரையும் சமாதானமாக்கி வழக்குகளை வாபஸ் வாங்கி, அரசியல் சார்பில்லாத கல்வியாளர்களைப் பொறுப்புக்குக் கொண்டுவந்து, கல்லூரியை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டுமென்று தன்னார்வமாகப் போராடி வருகிறோம்’’ என்றார் வருத்தத்துடன்.

கோஷ்டி  சண்டைகள்...  கோர்ட் வழக்குகள்... களையிழக்கும் யாதவர் கல்லூரி!

இதே கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த ஐந்து வருடங்களாக அறப்போராட்டங்களை நடத்தி வந்தவர்கள், செப்டம்பர் 24-ம் தேதி, ‘யாதவர் கல்லூரியை மீட்க என்ன வழி?’ என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்கள். இதில் பேசிய, முதுகுளத்தூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான மலேசியா பாண்டி, ‘‘யாதவர் கல்லூரிப் பிரச்னைக்கு நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டி சட்டமன்றத்தில் கேட்டுக்கொண்டும், இதுவரை அரசு செய்யாதது வேதனையளிக்கிறது. பின்தங்கிய மாவட்ட மாணவர்களின் நலன் கருதி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்’’ என்றார்.

இவர்களால் புகார் கூறப்படும் யாதவர் கல்லூரியின் முன்னாள் செயலாளர் கே.பி.நவநீதகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘நான் கல்லூரி நிர்வாகத்தில் இருந்தபோதுதான், இந்தியாவின் சிறந்த 12 கல்லூரிகளில் ஒன்றாகவும், தமிழகத்தில் சிறந்த மூன்று கல்லூரிகளில் ஒன்றாகவும் யூ.சி.ஜி-யால் தேர்வு செய்யப்பட்டது யாதவர் கல்லூரி. மேலும், மதுரை காமராஜர் பல்கலை அளவிலும் மூன்று வருடங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. கல்லூரி வளாகத்துக்குள் புதிய கல்வியியல் கல்லூரியைத் தொடங்கினேன். கல்லூரிக்கு உதவிய 4,130 பேரைப் புறந்தள்ளிவிட்டு 40 பேர் மட்டும் கல்லூரியைக் கைப்பற்ற நினைத்தபோது நான்தான் வழக்குப் போட்டு நிறுத்தினேன். கல்லூரிக்குப் பாடுபட்ட என்னை எந்த ஆதாரமும் இல்லாமல் புகார் சொல்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்கிற ஒரே காரணம், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனின் சம்பந்தி என்பதுதான். இவர்களைத் தூண்டி விடுவதே மலேசியா பாண்டிதான். அவர் குறுக்கு வழியில் கல்லூரி நிர்வாகத்துக்குள் வர நினைக்கிறார்’’ என்றார்.

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு கல்விக்கண் திறந்த ஒரு கல்வி நிறுவனம் கண்முன்னே சீரழியலாமா?

- செ.சல்மான்
படம்: வி.சதீஷ்குமார்