Published:Updated:

“கக்கூஸ் கழுவுற நாய்... போலீஸுக்குக் கட்டளை போடுறியா?”

“கக்கூஸ் கழுவுற நாய்... போலீஸுக்குக் கட்டளை போடுறியா?”
பிரீமியம் ஸ்டோரி
“கக்கூஸ் கழுவுற நாய்... போலீஸுக்குக் கட்டளை போடுறியா?”

எவிடன்ஸ் கதிர் (செயல் இயக்குநர், எவிடன்ஸ்)

“கக்கூஸ் கழுவுற நாய்... போலீஸுக்குக் கட்டளை போடுறியா?”

எவிடன்ஸ் கதிர் (செயல் இயக்குநர், எவிடன்ஸ்)

Published:Updated:
“கக்கூஸ் கழுவுற நாய்... போலீஸுக்குக் கட்டளை போடுறியா?”
பிரீமியம் ஸ்டோரி
“கக்கூஸ் கழுவுற நாய்... போலீஸுக்குக் கட்டளை போடுறியா?”
“கக்கூஸ் கழுவுற நாய்... போலீஸுக்குக் கட்டளை போடுறியா?”

“நியாயத்துக்காக வந்த என்னை ஒரு நாயைப்போல விரட்டுறீங்க. என் சாவுக்குக் காரணம் நீங்கள்தான்...” என்று சொல்லியபடி, போலீஸார் முன்பு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்திக்கொண்டார் அந்த மனிதர்.

காவல்துறையினரின் சித்ரவதைகளுக்கு ஆளாகி நடக்கும் லாக்கப் மரணங்கள் அனைவரும் அறிந்தவை. ஆனால், காவல்துறையினரால் மிக மோசமாக இழிவுபடுத்தப்பட்டு, மனரீதியாக சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு, காவல் நிலையத்தின் முன்பாகவே ஒரு மனிதன் தீக்குளித்து உயிரிழந்த துயரம் சமீபத்தில் நிகழ்ந்தது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில், ஒரு பிரச்னையில் பாதிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளியான அன்பு, புகார் கொடுப்பதற்காக வாணியம்பாடி நகர் காவல்நிலையம் செல்கிறார். அவரை ஒரு மனிதராகவே மதிக்காமல், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்தனர். தொடர்ச்சியான அவமானங்களால் விரக்தியடைந்த அன்பு, தற்கொலை செய்து கொண்டார்.

அன்பு இப்படித் தீ வைத்துக்கொள்ளும் நேரத்தில், தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாமல், காவல்நிலையத்தைப் பூட்டிக்கொண்டு, ஜன்னல் வழியே போலீஸார் வேடிக்கைப் பார்த்துள்ளனர். உடல் முழுவதும் தீயில் வெந்து துடிதுடித்துக் கீழே விழுந்த அன்புவைச் சற்று நேரத்தில் ஆம்புலன்ஸில் ஏற்றினர். அந்த நிலையிலும், ‘‘என் உயிர் போனால் போகட்டும். எனக்கு நீதி வேண்டும்” என்று கதறினார் அவர். மூன்று நாள்கள் மருத்துவமனையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தந்திரம் செய்த போலீஸார், அன்புவின் தற்கொலைக்கு அவருடைய மனைவி நளினிதான் காரணம் என்று வழக்குப் பதிவுசெய்து, அவரைச் சிறையிலடைத்தனர். ஆனால், ‘என் மரணத்துக்கு போலீஸார்தான் காரணம்’ என்று நீதித்துறை நடுவரிடம் அன்பு அளித்துள்ள வாக்குமூலத்தின் மூலம், வசமாகச் சிக்கிக்கொண்டிருக்கும் போலீஸார், தற்போது விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கக்கூஸ் கழுவுற நாய்... போலீஸுக்குக் கட்டளை போடுறியா?”

அன்புவுக்கும், அவருடைய மனைவி நளினிக்கும் சச்சரவு இருந்துள்ளது. இதுகுறித்து புகார் செய்வதற்காகத்தான் அவர் காவல்நிலையம் செல்கிறார். பலமுறை சென்றும், அவரை போலீஸார் தொடர்ந்து இழிவுப்படுத்தியுள்ளனர். அதனால் ஏற்பட்ட விரக்தியின் உச்சத்திலிருந்த அன்பு, செப்டம்பர் 8-ம் தேதி மாலை ஆறே முக்கால் மணியளவில் காவல்நிலையம் சென்றுள்ளார். சிறப்பு சார்பு ஆய்வாளர் குமார் மற்றும் சில போலீஸார் இருந்துள்ளனர். அவர்களிடம், “சார்… உங்ககிட்ட எத்தனை முறை புகார் கொடுத்திருக்கேன். ஏன் நடவடிக்கை எடுக்க மாட்டேங்கிறீங்க?” என்று அன்பு கேட்டுள்ளார். அதற்கு, “கக்கூஸ் கழுவுற நாய்… நீ வந்து எங்களுக்குக் கட்டளை போடுறியா? உன்னோட புகாரை விசாரிக்கிறதுதான் எங்க வேலையா? ஒழுங்கு மரியாதையாக வெளியே போடா… இனிமே இந்தப் பக்கம் வந்தா உன்னைத் தொலைச்சுப்புடுவோம்’’ என்று குமாரும் மற்ற போலீஸாரும் இழிவுபடுத்தித் துரத்தியுள்ளனர்.

வீட்டுக்கு வந்த அன்பு, மண்ணெண்ணை கேனுடன் காவல்நிலையம் சென்று உடலில் தீவைத்துக்கொண்டார். அன்று இரவே மாவட்ட முதன்மை உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் சக்திவேலிடம் மரண வாக்குமூலம் கொடுத்தார். அதில், ‘இந்தத் தற்கொலை முடிவுக்கு போலீஸார்தான் காரணம். நான் கொடுத்த புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது’ என்று வாக்குமூலம் கொடுத்தார்.

“கக்கூஸ் கழுவுற நாய்... போலீஸுக்குக் கட்டளை போடுறியா?”

சிகிச்சை பலனின்றி 11-ம் தேதி அன்பு இறந்துவிட்டார். மரண வாக்குமூலத்தில், ‘போலீஸார்தான் குற்றவாளிகள்’ என்று அன்பு கூறியிருந்ததால், நாம் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த போலீஸார், வழக்கைத் திசைதிருப்பத் திட்டமிட்டனர். அதனால், அன்புவின் மனைவி நளினியை உடனே கைதுசெய்து, ‘‘எனக்கும் என் கணவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. என்னால்தான் என் கணவர் தற்கொலை செய்துகொண்டார். பலமுறை என்னிடம் தற்கொலை மிரட்டல் விடுத்தார்’’ என்று எழுதிக் கொடுக்கும்படி போலீஸார் மிரட்டியுள்ளனர். ‘‘நான் எத்தனை கையெழுத்து வேண்டுமானாலும் போடுகிறேன். என் புருஷன் முகத்தைப் பார்க்க அனுமதி கொடுங்க’’ என்று நளினி கதறியிருக்கிறார். ஆனால், இரக்கமற்ற போலீஸார், நளினியை இரண்டு நாள்கள் சட்டத்துக்குப் புறம்பாக காவல் நிலையத்தில் வைத்திருந்து, செப்டம்பர் 13-ம் தேதி ரிமாண்டு செய்துள்ளனர்.

இன்னொருபுறம், செப்டம்பர் 11-ம் தேதியன்று, அன்புவின் தாயார் பேபியிடம் நளினிக்கு எதிராகப் புகார் வாங்கியுள்ளனர். ஆனால், செப்டம்பர் 9-ம் தேதி இரவு வழக்குப் பதிவு செய்ததாகக் கணக்குக் காட்டியுள்ளனர். அன்புவின் மரண வாக்குமூலத்தை மறைப்பதற்கான வேலையிலும் வாணியம்பாடி போலீஸார் ஈடுபட்டுள்ளனர். உண்மையை அறிந்துகொண்ட நீதித்துறை நடுவர், போலீஸாரின் இந்த மோசடித்தனத்தைக் கண்டித்ததாகத் தெரிகிறது.

தந்தை தற்கொலை செய்துகொண்டுவிட்டார்; தாய் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார்; பாட்டி பேபியை மறைத்துவைத்துள்ளனர்... இதனால் அநாதைகளாகப்பட்ட அன்புவின் நான்கு குழந்தைகளும், என்ன நடக்கிறது என்பது புரியாமல் கதறிக்கொண்டிருப்பது பரிதாபம்.

சட்டம் தன் கடமையை இப்படித்தான் செய்யுமா?