Published:Updated:

“கணக்குக் காட்ட கைதா?”

“கணக்குக் காட்ட கைதா?”
பிரீமியம் ஸ்டோரி
“கணக்குக் காட்ட கைதா?”

“கணக்குக் காட்ட கைதா?”

“கணக்குக் காட்ட கைதா?”

“கணக்குக் காட்ட கைதா?”

Published:Updated:
“கணக்குக் காட்ட கைதா?”
பிரீமியம் ஸ்டோரி
“கணக்குக் காட்ட கைதா?”

சிரியர் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் (ஜாக்டோ-ஜியோ) போராட்டம் நடந்தபோது, அது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கிருபாகரன் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனம் செய்ததாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

“கணக்குக் காட்ட கைதா?”

‘நீதிமன்றத்தின் உத்தரவுகளை விமர்சிப்பதில் தவறு இல்லை... நீதிபதியைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவர்கள்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். அதையடுத்து, சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை சைபர் கிரைம் போலீஸார் கைதுசெய்தனர். பின்னர், சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், சுபாஷ் சந்திரபோஸ் மோசமானப் பதிவுகளை வெளியிட்டிருந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.

 சுபாஷ் சந்திரபோஸை நாம் தொடர்பு கொண்டபோது, ‘‘அவர் உடல் நலக்குறைவாக இருக்கிறார். நீதிபதியை விமர்சனம் செய்யும் வகையில் எந்த ஒரு கருத்தையும் அவர் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்யவில்லை’’ என்று  அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். 

 பாளையங்கோட்டையில், செப்டம்பர் 14-ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணிமனை ஊழியரான முருகன் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவர் மீது புகார் கொடுத்த நபர், ‘ஆர்ப்பாட்டம் நடந்தபோது அந்த வழியாகச் சென்றேன். ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒருவர், நீதிபதிகளை அவதூறாக விமர்சனம் செய்தார்’ என்று  புகார் மனுவில் கூறியிருந்தார். முருகன் பெயர் குறிப்பிடப்படவே இல்லை. ஆனாலும், முருகன் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 500 (அவதூறாகப் பேசுதல்) உள்பட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. செப்டம்பர் 22-ம் தேதி இரவு, முருகன் தன் மனைவியுடன் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, 10 கி.மீ தூரத்துக்கு விரட்டிச் சென்று அவரை வழிமறித்து போலீஸார் கைதுசெய்தனர். அந்த அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு, சிகிச்சையில் இருக்கிறார் முருகன்.

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், “நீதிபதி குறித்து தவறான வார்த்தைகளை உபயோகித்து விமர்சனம் செய்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. போலீஸார் முறையாக விசாரணை செய்யாமல், கணக்குக் காட்டுவதற்காக இரண்டு பேரைக் கைதுசெய்துள்ளனர்” என்றார். 

- பி.ஆண்டனிராஜ், கே.பாலசுப்பிரமணி
படம்: வி.ஸ்ரீனிவாசலு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!