
தவளை
தன்னையே பகுப்பாய்வு செய்துகொள்ளச் செய்தல் எளிது
செல்லத் தவளையாக இருந்தால் இன்னும் நோவின்மை
முதலில்
நீரும் நிலமும் நீங்களெனக் குதிக்கும் அதை
சிறுமைப்படுத்தி
கோபத்தில் பொய்கைக்குள் பாயச்செய்
பொய்கையில் நீர் வற்றும்படி
அதனுடனான உள்பெட்டி உரையாடலைத் தடைசெய்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘எரிவது நீ’ என நிலைத்தகவலிட்டு
தவளைக்கு ஒவ்வாதவர்களை உடனழைத்துக்கொள்
உமது மெளனம் அடர்த்தியான குளோரோபார்ம்
அதையதன் மேல் தெளித்துவிடு
அரைகுறை மயக்கத்தில் உங்கள் முன் மண்டியிடும்
தவளை உமக்கிழைத்த குற்றங்களை
வலிய கூர் ஆணிகளாக்கி
அதனிடமே வழங்கு... அறுவைக்கான சாதனங்களையும்
இடதுகைப்பழக்கம் உடைய தவளை அக்கரம் தவிர்த்த
எஞ்சிய தன்னுடலை பகுப்பாய்வுப் பலகையில் அறைந்து
தோல், தசை கிழித்து பாகங்கள் காட்டுகிறது
அதன் இதயத்தின் மூவறைகளில் ஏதோ ஒன்றில் உறங்கும்
உமது அன்பான ஆன்மாவை துன்புறுத்த விரும்பாமல்
எப்போதும் மழையாக உங்களை வேண்டுமதன் குரல்வளையில்...
அறுவைக்கத்தி சோடியத்தை எத்தனை இலகுவாக வெட்டுகிறது
தொண்டையின் வழியாகவும் வெளியேறலாம் உலோகத்தின் ஆன்மா.