
இரவின் மொட்டிலமர்ந்து அச்சிறு பெண் மிட்டாய் கேட்டாள்
ஆரஞ்சு நிற ஆடையில் காத்திருந்த காதலியைப்போன்ற
அம்மிட்டாயைத் தர முடியாமல் தவித்திருந்தேன்
நீடித்த இருட்டின் அல்லிமொட்டுகள்
அலர்ந்து இதழ்களாய் விரிந்துகிடந்தன


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவளோ நிசப்த இருளின்
ஓர் இதழாய் என் முன் காட்சியாகியிருந்தாள்
வதனமெங்கும் இன்னும் தந்துவிடாத மிட்டாயின்
ஆரஞ்சு சுடர்ந்தது தீப்பிடித்த ஆரண்யம்போல
வலி நரம்பிடையே ஊர்ந்து முகம் வழி
சிந்துவதைக் கண்டேன்
உருண்டு திரண்டு நின்ற இரங்காத மனதின் மீது
கருணை மின்னலென இறங்கிப் பிளந்தது
சுருங்கிய அவளுடலைத் தீண்டிய
விரல்களிடையே மிட்டாய் அவளுடையதாகிவிட்டது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism