Published:Updated:

அடுத்து என்ன? - தமயந்தி

அடுத்து என்ன? - தமயந்தி
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - தமயந்தி

மிச்சமிருப்பதென்பது மொழியும் நானும் மட்டுமேபடங்கள்: கே.ராஜசேகரன்

அடுத்து என்ன? - தமயந்தி

மிச்சமிருப்பதென்பது மொழியும் நானும் மட்டுமேபடங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
அடுத்து என்ன? - தமயந்தி
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - தமயந்தி

ந்த நாள், தருணம், நொடி எல்லாமே எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது 24 டிசம்பர் 1987. அடுத்த நாள் கிறிஸ்துமஸ். பொதுவாகவே அன்று பிரியாணியாகத்தான் இருக்கும். அதற்கான ஆட்டு இறைச்சியை அப்பா பாளையங்கோட்டை மார்க்கெட்டில்தான் வாங்குவார்.  

அடுத்து என்ன? - தமயந்தி

அப்பாவுடன் நானும் சென்றிருந்தேன். பாதிக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கறிக்கடையின் பாதி ஷட்டர் மட்டும் திறந்துவைக்கப்பட்டு, முதன்முறை குடிக்கப் போகிறவர்கள் டாஸ்மாக் கடைக்கு முன் நிற்பதுபோல கடைக்காரர் நின்றிருந்தார். அப்பாவுக்குப் புரியவில்லை. “ஏன் மார்க்கெட்ல கூட்டமே இல்ல?” என்று அப்பா கேட்க, கடைக்காரர் “சார்... ஒங்களுக்கு நெஜம்மாவே தெரியாதா...

எம்.ஜி.ஆர் செத்துட்டாரு” என்றார். அந்த மார்க்கெட் ஒரு கலவரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. அப்பா, அவசரமாகப் பணம் கொடுத்துவிட்டு என்னைக் கூட்டிக்கொண்டுவந்து சைக்கிளிலிருந்து ஸ்டாண்ட் எடுத்தபோது முதல் கல் விழுந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்குச் சிறுவயதில் இந்திரா காந்தியைப் பிடிக்கும். பாளையங்கோட்டை ரிசர்வ் லைனில் ஹெலிபேட் போடப்பட்டு இந்திரா காந்தி வந்து இறங்கிய கூட்டத்திற்கு நான் போக வேண்டும் என்று நச்சரித்தபோது அப்பா கூட்டிப் போனார். இந்திரா காந்தி கை காட்டியபோது அபரிமிதமான பிரமிப்பில் நான் கை காட்டியதை அப்பா உற்று நோக்கியபடியிருந்தார். அன்று இரவு அவர் மேல் கால் போட்டுக்கொண்டு படுத்த படி நான் சொன்னேன், 

அடுத்து என்ன? - தமயந்தி“அப்பா எனக்கு இந்திரா காந்திய ரொம்பப் பிடிச்சிருக்கு.”

“சரி.”

“ப்பா...”

“என்னம்மா?”

“நான் இந்திரா காந்தியோட போகட்டா.”

அப்பா அதிர்ந்து என்னைப் பார்த்தார். அன்றிரவுதான் அவரெனக்கு மிக எளிய வார்த்தைகளில் நெருக்கடி நிலை பற்றி, ஜெயப்ரகாஷ் நாராயணன் பற்றிச் சொன்னது. அதற்குப் பிறகு, திராவிடத் தலைவர்களை நான் உணர்வுநிலையிலிருந்து விலகி நின்றே அணுகுவேன். அப்படித்தான் எம்.ஜி.ஆரின் மரணமும் இருந்தது எனக்கு. ஆனால், நெல்லையில் சில பகுதிகளில் பெண்களின் தாலியில் எம்.ஜி.ஆரின் உருவப்படம் உண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஏன் தமிழ்நாட்டு மக்களுக்கு இவ்வளவு திரைப்பட மோகம் உள்ளது? அதைப் பயன்படுத்தியே இன்றளவும் தமிழக அரசியல் நடத்தப்படுவது தமிழ்நாட்டுக்கு நல்லதா இல்லையா என்ற குழப்பம் எனக்கு எப்போதுமே உண்டு. நான் முதன்முதலில் எழுதிய `நிழலிரவு’ நாவலில் கம்யூனிஸமும் கிறிஸ்தவமும் ஏன் நடைமுறை வாழ்வில் தோற்றுப்போகிறதென என் வாழ்வியல் அனுபவங்களை இணைத்து எழுதினேன். அடுத்த நாவலை இந்தத் திராவிடக் குழப்பங்களை முன்வைத்தே எழுதத் திட்டமிட்டேன்.   

அடுத்து என்ன? - தமயந்தி

முதலில்  ‘வதை’ என்று தலைப்பு வைத்து, எம்.ஜி.ஆர் இறப்புக்கு கருணாநிதி முதல் ஆளாக ஓடி வருவதில் ஆரம்பித்து, மூன்று வருடங்களாக எழுதி முடித்து மறுவாசிப்புக்கும் பிழை திருத்தவும் முயலும்போது வெள்ளத்தில் என் கணினி மூழ்கியது. மொழியில் இதுவரை பிரதிபலிக்காத வலி அழுத்த, கையறு நிலையில் இருந்தேன். இன்னொரு பக்கம் அதுவரை சேர்த்த வாழ்நாள் சேமிப்பான புத்தகங்களின் இழப்பு வேறு. பின் மெள்ள மெள்ள மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.  வார்த்தைகள் பரணிலிருந்து ஏற்கெனவே எழுதி அடுக்கப்பட்ட பெட்டியிலிருந்து உதிர்வதுபோலவே உதிர்ந்தன.  திருநெல்வேலியில் ஒரு நடுத்தரக் குடும்பம். அண்ணன் அ.தி.மு.க., தம்பி தி.மு.க. அவர்களின் வாழ்க்கைக்குள் சிக்கிக் கிடக்கும் அரசியலும் தலைவர்களும்...

இதற்காகத் தொண்டர்கள் என அழைக்கப்படும் நிறைய மனிதர்களைச் சந்தித்தேன். பயணங்கள் செய்தேன். அப்படியொரு பொழுதில்தான் சென்ற டிசம்பரில் ஜெயலலிதா இறந்தார். நாவலின் முடிவு என்னவென்று காலம் எழுதிச் சென்றது. ‘வதை’ என்னும் தலைப்பு மாறிவிடும். எழுதும் அத்தனை அத்தியாயங்களையும் பத்திரமாக என் ஜிமெயிலில் சேமித்துவைக்கும் ஒழுங்கை இப்போது பின்பற்றுகிறேன்.

 அடுத்த வருடம் ‘பனிக்குடம்’ வெளியீடாக நாவல் வெளிவர இருக்கிறது. திராவிடத்தை முற்றிலும் புறந்தள்ள இயலாத, அதே நேரம் இன்று அத்தனை முட்டாள்தனங்களும் தமிழக அரசியல் தளத்தில் நிகழ்ந்திட சாத்தியப்படுத்திய திராவிடத்தை நாவலை முடித்த பிறகும் முழுமையாக நேசிக்க இயலவில்லை. வெறுக்கவும் இயலவில்லை. அந்தக் குழப்பத்தின் கூர்முனையில் ஒட்டியிருக்கும் ஒற்றை நீர்த்துளியே இந்நாவல்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism