Published:Updated:

இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்

இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்

இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்

இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்

இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்

Published:Updated:
இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்

ப்ளின் நகரம். கோடைக்காலம் இலையுதிர்க்காலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. நல்ல வெயிலடிப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு வெளியே வந்தால், அப்படி ஒரு குளிர் காற்றடிக்கிறது. கடல்பறவை ஒன்று நகரத்துக்குள் வந்துவிட்டு விசித்திரமாகக் குரல் எழுப்புவது நல்ல சகுனமா என்று எனக்குத் தெரியவில்லை. ஓர் இந்தியக் கவிஞனின்மீது ஐரிஷ் காற்று கவிதைத்தனமாக வீசுவதை ரசித்தபடி ஒரு முக்கியமான நபரைச் சந்திப்பதற்காகப் பேருந்து நிலையத்தில் நிற்கிறேன்.   

இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்

ஐரிஷ் கவிஞர் ஃபியோனா போல்கர் (Fiona Bolger) என்னைச் சந்திப்பதற்காக டிரினிட்டி கல்லூரி வாசலில் தனது செல்ல நாய்க்குட்டியைக் கையில் பிடித்தபடிக் காத்திருந்தார். இவர் ஐரிஷ் கவிஞர்களையும், இந்தியக் கவிஞர்களையும் இணைத்து ‘ALL THE WORLDS BETWEEN: A collaborative poetry project between India and Ireland’ எனும் கவிதைத் தொகுப்பை இந்தியக் கவிஞர் கே.ஸ்ரீலதாவுடன் (K.Srilata) இணைந்து தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 23 இந்திய மற்றும் ஐரிஷ் கவிஞர்களை இணைத்துத் தொகுக்கப்பட்ட இதனை ‘யோடா பிரஸ்’ (YODA PRESS, New Delhi) எனும் டெல்லியிலுள்ள ஒரு வெளியீட்டாளர் வெளியிட்டுள்ளார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்

23 இந்திய மற்றும் ஐரிஷ் கவிஞர்களை ஒருவருக்கொருவர் என்று நிர்ணயம் செய்து, கலந்துரையாடவைத்து கவிதைகளை இத்தொகுதிக்காகவே உருவாக்கித் தொகுத்திருக்கும் ஸ்ரீலதாவும் ஃபியோனா போல்கரும் ஒரு புதிய அனுபவத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். ஐரிஷ் மொழி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இதில், வத்சலா என்பவரின் திருநங்கைகள் பற்றிய ஒரு கவிதை, தமிழ் எழுத்திலேயே அச்சிடப்
பட்டுள்ளது. இதுவரை நிகழ்ந்திராத ஓர் அபூர்வக் கவிதை அனுபவத்தின் புதிய திசையை உருவாக்கியுள்ளது இந்தக் கவிதைத் திட்டம் என்றே சொல்ல வேண்டும்.

அயர்லாந்தில் இந்த மாதம் 29-ம் தேதி நடைபெற உள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவில், நூலை ஒரு மூத்த இந்தியக் கவிஞர் என்ற வகையில் நான்தான் வெளியிட்டு உரை நிகழ்த்த வேண்டும் என ஐரிஷ் கவிஞர்கள் கேட்டுக்கொண்டபோது நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன்.

இதற்கான முதல் காரணம், இந்தியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்கும் ஐரிஷ் கவிஞர் யேட்சுக்கும் இருந்த நட்புடன்கூடிய கவிதை அனுபவப் பகிர்வு, அவர்கள் காலத்தோடு நின்றுவிட்டதே என்ற என் ஆதங்கத்துக்கு மருந்து போடுவதாக இருக்கிறது என்பதுதான். ரவீந்திரர் தனது வங்காள மொழி ‘கீதாஞ்சலி’யின் ஆங்கில மொழிபெயர்ப்பை ஐரிஷ் கவிஞர் யேட்ஸுக்கு அனுப்பி, அதனை யேட்ஸ் தனது பேனாவினால் தொட்டு உயிர் கொடுக்குமாறு கேட்டு எழுதிய கடிதம் ஒன்றை யேட்ஸின் வாழ்க்கை வரலாற்று நூலின் பின் இணைப்பாகக் கொடுத்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் ஐரிஷ் கவிஞர் ஏட்ஸ்தான் தாகூரை உலக வெளிச்சம்படக் காண்பித்துக் கொடுத்து தாகூருக்கு நோபல் பரிசு கிடைக்கக் காரண மாக இருந்தார். இப்படி அயர்லாந்துக்கும் இந்தியாவுக்குமான கவிதை உரையாடல் தாகூர் – யேட்ஸ் காலத்துக்குப் பிறகு இந்தக் கவிதைத் தொகுப்பின் மூலமாக மீண்டும் உருவாக்கப்படுகிறது என்பதில் நான் மகிழ்கிறேன். அதுமட்டுமல்ல; தமிழுக்குத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை படைத்துக் கொடுத்து, தமிழ் ஒரு செம்மொழி என்று முதன்முதலில் சொன்ன ராபர்ட் கால்டுவெல் பிறந்த டப்ளின் நகரத்துக்கும் இன்றைய தமிழ் இலக்கியத்துக்கும் தொடர்பே இல்லாமல் போய்விட்டதே எனும் என் மனக்குறைக்கு இந்த இந்திய - ஐரிஷ் கவிதை உரையாடல் பெரிதும் ஆறுதல் அளிக்கிறது.  

இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்

இந்தத் தொகுதியில் பங்களித்த கவிஞர்களை நான் டப்ளின் நகரத்து ‘புக்ஸ் அப்ஸ்டேர்ஸ்’ (Books Upstairs) எனும் புத்தகக் கடையின் ரெஸ்ட்டாரென்ட்டில் வைத்து சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார் ஃபியோனா போல்கர். இத்தகைய கவிதைக் கூட்டு முயற்சிக்கு ஐரிஷ் நாட்டின் சார்பில் பங்களித்த ஃபியோனா போல்கர் இந்தியாவில் சென்னையில் 2000-த்திலிருந்து 2008 வரை வாழ்ந்திருக்கிறார். அலகாபாத்தில் வாழ வேண்டும் என்பதற்காக இந்தியா வந்தவர்  பின்னாளில் சென்னையை விரும்பிவந்து வாழ்ந்துமிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில்தான் ஆங்கிலத்தில் இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருந்த கவிஞர் ஸ்ரீலதாவைச் சந்தித்திருக்கிறார். இவர்கள் சந்திப்பில்தான் இந்திய - ஐரிஷ் கவிஞர்கள் கூட்டுமுயற்சிப் பற்றியத் திட்டம் உருவாகியிருக்கிறது. இதில் பங்கெடுத்த ஒவ்வோர் இந்தியக் கவிஞருடனும் ஒரு குறிப்பிட்ட ஐரிஷ் கவிஞர் சேர்த்துவிடப்பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் ஐரிஷ்-இந்திய உரையாடல்கள் (நேரிலோ அல்லது கணிப்பொறி வழியிலோ) மூலமாகக் கூட்டுமுயற்சியில் கவிதைகளை எழுதுவது அல்லது மொழிபெயர்ப்பது என்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். 

இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்உதாரணமாக, அடில் ஜசுவாலா x சூய் பட்லர், ஆன் டன்னம் x ஸ்ரீலேகா, நீட்டா மிஷ்ரா x யோஹன்னன் ராஜ், ஆல்வெ கரெகர் x ஷோபனா குமார், அருந்ததி சுப்பிரமணியம் x ஃபியோனா போல்கர், சம்பூர்னா சட்டர்ஜீ x கிளாஸ் ஆங்கர்சன் என்று இருவர் இருவராகச் சேர்ந்து கவிதைக் கலை மற்றும் அதன் தொழில்நுட்பம்  குறித்து உரையாடி, கவிதைப் படைப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது ஏதோவொரு கவிதைப் பட்டறையில் செயல்படுவது போன்ற செயல்பாடு.

மேலும், நான் அடிக்கடிச் சொல்லிவரும் தமிழ்க் கவிதையின் மாய்மாலங்களில் ஒன்றான கவிதை என்பது தானாகவே ஊற்றெடுத்து வழிய வேண்டும் என்கிற நம்பிக்கையைக் குலைத்துப்போடுகிறது இச்செயல் திட்டம். மேலும், கவிதை என்பது தனி மனிதனாக மேற்கொள்ளும் தியான நிலையில் பிறப்பது என்பதையும் உடைத்துப் போடுகிறது. கூட்டுச் செயல்பாடாகக் கவிதை இருக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டும் ஒரு பரிசோதனையாகவே நான் இதனைப் பார்க்கிறேன். தமிழில் இடைக்காலத்தில் இரட்டைப் புலவர்கள் என்று அறியப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். முதலாமவர் இரண்டு வரிகள் பாடுவார். அடுத்தவர் மீதமுள்ள இரண்டு வரிகளைப் பாடி முடிப்பார். இந்தத் தொகுதியில் உள்ளவை அப்படிப்பட்டவை இல்லைதான். ஆனாலும், கவிதை என்பது தனி மனிதரால் மட்டுமே படைக்கப்படுவது என்ற செயல்பாட்டை இந்தக் கவிதைகள் மேலும் விரிவுபடுத்துகின்றன.  

இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்

ஐரிஷ் பண்பாடு, இந்தியப் பண்பாடு என்கிற இரண்டு வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் கவிதை என்ற குவிமையத்தில் ஒர் உரையாடலுக்கு உட்படுகிறார்கள். அடில் ஜசுவாலா போன்ற மிக மூத்த கவிஞர், இளம் கவிஞரான சூய் பட்லருடன் இணைந்து கவிதைப் படைப்பில் இறங்குகிறார். எனவே, பண்பாடு, இனம், மதம், வயது, பாலினம் ஆகிய பலவற்றைக் கடந்த நிலையில் கவிதை குறித்த உரையாடல் மிக ஆரோக்கியமான முறையில் இங்கே நடந்திருக்கிறது.

ஃபியோனா போல்கர் எங்கள் சந்திப்பின்போது நேர்ப்பேச்சில் கூறிய வார்த்தைகள் கவிதைபோன்றே ஒலிக்கின்றன. “நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு முரசைத் தயார்செய்திருக்கிறோம் என்று. கவிஞர்களாகிய நாங்கள் அதன் தோலை ஒரு பெரிய வட்டமாகப் பிடித்திருக்கிறோம். கண்டங்களைத் தாண்டியும் எங்களைச் சுற்றியுள்ள அதிர்வலைகளைத் தாண்டியும், எங்களுக்குள்ள உலகங்களுக்கு இடையிலும்.”  

இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்

நான் நேரில் சந்தித்த கவிஞர்களில் ஒருவரான ஆன் டன்னம் எனும் பெண் கவிஞர், இந்தக் கவிதைத் திட்டத்துக்காகவே இந்தியாவுக்கு வந்துசென்றிருக்கிறார். இவரும் ஸ்ரீலதாவும் இணைந்து ஆங்கிலத்தில் எழுதியிருக்கும்  ‘காலா பாணி’ எனும் கவிதை சிறப்பாக இருக்கிறது.

டப்ளினில் என்னை நேரில் சந்திக்க வந்திருந்த மற்றொரு கவிஞரான நீட்டா மிஷ்ரா, ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியர்.அயர்லாந்தில் வாழ்ந்துவரும் இவர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று அயர்லாந்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவரும் இந்தியா சென்று ரிஸீயோ யோஹனன் ராஜ் எனும் பெண் கவிஞருடன் கவிதை உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார்.  

இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்


ஐரிஷ், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்குள் கவிதை உரையாடலைச் சாத்தியப்படுத்தியிருக்கும் இந்தத் தொகுதியும் அதனைச் சாதித்துக் காட்டியிருக்கும் சென்னையைச் சேர்ந்த கே.ஸ்ரீலதாவும், டப்ளினைச் சேர்ந்த ஃபியோனா போல்கரும் தொடர்ந்து பல சாதனைகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு கவிஞர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு நான் புறப்பட்டபோது டப்ளினுக்கே உரிய குளிர் தொலைக்கும் இதமான வெயில் என்னை வருடியது.

இதற்கு முன்னர் - ஒன்யா நி கிளிம்

இதற்கு முன்னர்
கவிதையாகிவிட்ட ஒரு கனவு இருந்தது.
இதற்கு முன்னர்
கனவாகிவிட்ட ஒரு கவிதை இருந்தது.
இதற்கு முன்னர்
ஒரு பனியைப் பற்றிய ஒரு கனவு இருந்தது.
இதற்கு முன்னர்
பிரேக் நகரத்துத் தெருவுக்குப் பின்னாலிருக்கும்
சிறு காபிக்கடையில்
என் கவிதையின் மேல் விழுந்துகொண்டிருந்த
பனி இருந்தது.
அந்தத் தெருவுக்குப் பின்னால் இருந்த காபிக் கடையில்
என் கையிலிருந்த கோப்பையில் விழும்
பனி இருந்தது.
நான் அதைக் குடித்துவிட்டு
என் கவிதையில் பனி பெய்வதாகக் கனவு கண்டேன்.
என் கனவு உறைந்துபோனது.
என் கவிதை உறைந்துபோனது.
ஒருவேளை நான் வீட்டிலேயே தங்கிப்போயிருக்கலாம்.
அல்லது ஒருவேளை
நான் வீட்டிலேயே தங்கிவிடுவதாகக் கனவு காணலாம்.  

இந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்

கனவுகளை வஞ்சித்தல் -  மௌரிஸ் டெவிட்

மாலையில் நான் திரும்புகிறேன்
காலியான என் கனவுகளின் குகைக்கு.
ஒவ்வொரு சந்திலும்
எனது அம்மாவினாலும் அவளது அம்மாவினாலும்
கையளிக்கப்பட்ட
கதைகள் சுரந்துகொண்டிருக்கும் குகைக்கு.
பெயர்கள் இல்லை
வெறுமனே மூடி ஒட்டப்பட்ட உறைகள்
ஆண்டாண்டு காலமாக
வீட்டுக் கோட்டுகளின் சலிப்பூட்டும் பாக்கெட்டுகளில்
வைக்கப்பட்டிருந்தன.
எப்போதுமே வேண்டாம் என்று சொல்லப்படுவதிலிருந்து
கவனம் திருப்பப்பட்டு
வாழ்தலின் சந்தடியில்
உஷ் என அடக்கப்பட்ட கதைகள்.

நான் இந்தக் கதைகளைச் சொல்லும்போது
நீங்கள் அதைக் கேட்கப்போவதில்லை.
அப்படி நீங்கள் கேட்க நேர்ந்தாலும்
அவை கற்பனை என்று நினைத்துக்கொள்வீர்கள்.
அந்த நிறங்கள் உண்மையென்று
உங்களுக்கு ஒருபோதும் தோன்றப்போவதில்லை.
விவரணைகள் நம்பத்தகுந்தவை அல்ல என்பதால்
நீங்கள் உரத்து வயிறு குலுங்கச் சிரித்து
எனக்காகவும் என் கனவுகளுக்காகவும் என்று
வைத்திருக்கும்
நிராகரிப்பின் குலுக்கலுக்காக
உங்கள் தோள்களை வடிவமைத்துக்கொள்கிறீர்கள்.

நான் உங்களை
முதன்முதலில் சந்தித்தபோது
என் கைகளைத் திறந்த
தவறினைச் செய்தேன்.
என் கனவுகளை
இன்னமும் காலியாக இருக்கும் அறைக்குள்
அவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளாத
உங்களுக்காக மட்டுமே திறந்துவிட்டேன்.
செயல்திறன் மிக்க சாரணனின் விரல் நுணுக்கத்தோடு
அந்த மூலையில்
அக்குவேறு ஆணி வேறாக வைத்தேன்.
உங்கள் கண்கள்
சுவரின் ரத்தம் தோய்ந்த விரல் பதிவுகளைத்
தவிர்த்தன.

தொகுப்பிலிருந்து சில கவிதைகள்...  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism