Published:Updated:

கயல்விழியும் காலங்களின் தேவதையும் - சிறுகதை

கயல்விழியும் காலங்களின் தேவதையும் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
கயல்விழியும் காலங்களின் தேவதையும் - சிறுகதை

எட்.விஸ்வநாத் பிரதாப் சிங், ஓவியங்கள்: லலிதா

கயல்விழியும் காலங்களின் தேவதையும் - சிறுகதை

எட்.விஸ்வநாத் பிரதாப் சிங், ஓவியங்கள்: லலிதா

Published:Updated:
கயல்விழியும் காலங்களின் தேவதையும் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
கயல்விழியும் காலங்களின் தேவதையும் - சிறுகதை
கயல்விழியும் காலங்களின் தேவதையும் - சிறுகதை

நான்காம் வகுப்பு படிக்கும் கயல்விழிக்கு அடிக்கடி ஓர் எண்ணம் மனதில் ஓடும். அது, சீக்கிரமே தான் வளர்ந்து பெரிய ஆளாகிவிட வேண்டும் என்பதுதான். காரணம்? கயல்விழியே தனது தோழி ஹரிணியிடம் சொல்கிறாள். நீங்களும் கேட்டுக்கொள்ளுங்கள்.

‘`பெரியவங்க ஆகிட்டால்தான் நினைச்சதை நினைச்சபடி நம்ம இஷ்டத்துக்குச் செய்யலாம். ஸ்கூல்ல, ‘ஹோம்வொர்க் முடிச்சியா? இதை எழுது; அதைப் படி’னு சொல்றதிலிருந்து தப்பிக்கலாம். வீட்டிலும், ‘இங்கே போகாதே; அங்கே போகாதே; இப்போ விளையாடாதே’னு தடைபோட மாட்டாங்க. ஏன்னா, நாம பெரியவங்க ஆகிட்டால், எல்லாம் நம்ம இஷ்டம்தானே.’’

‘`எல்லாம் சரி, சீக்கிரமா வளர்ந்து எப்படிப் பெரியாளாக முடியும்? வருஷத்துக்கு ஒரு ஹேப்பி பர்த்டேதானே வருது. கொஞ்சம் கொஞ்சமாகத்தானே வளர முடியும்?’’ - இது, தோழி ஹரிணியின் கேள்வி.
‘`எல்லா ஹேப்பி பர்த்டேவும் ஒரே நாளில் வந்துடணும்னு நான் சாமிகிட்டே வேண்டிக்குவேன்’’ - இது, கயல்விழி.

கயல்விழியும் காலங்களின் தேவதையும் - சிறுகதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்று முதல் கயல்விழி தினமும் தூங்கச் செல்லும்முன்பு சாமியிடம், ‘தான் சீக்கிரம் பெரிய ஆளாகிவிட வேண்டும்’ என்று வேண்டிக்கொள்வாள். அப்படி ஒருநாள் படுக்கையில் அமர்ந்து வேண்டிக்கொள்ள ஆரம்பித்தாள். அப்போது படுக்கை அறையில் கயல்விழி மட்டுமே இருந்தாள். அப்பா, ஹாலில், கம்பியூட்டரில் ஏதோ வேலையாக இருந்தார். அம்மா, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்.

‘`சாமி, நாளைக்காச்சும் நான் பெரிய ஆளா வளர்ந்துடணும்’’ என்று வேண்டிக்கொண்டு, போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்தாள்.

சில நிமிடங்களில் அவள் போர்வையை யாரோ விலக்குவதை உணர்ந்தாள். ‘அம்மாதான் பால் சாப்பிட எழுப்புகிறார்’ என நினைத்தவாறு தலையைத் தூக்கிப் பார்த்த கயல்விழி திகைத்தாள். அங்கே வேறு ஒரு பெண் நின்றிருந்தார். அவர் அம்மாவைவிட அழகாக இருந்தார்.

‘`யார் நீங்க?’’ எனக் கேட்டாள் கயல்விழி.

‘’உனக்குச் சீக்கிரமாக பெரியாளாகணும்னு  ஆசை இருக்கில்லியா?’’ என்றார் அந்தப் பெண்.

கயல்விழிக்கு ஆச்சரியம். ‘`ஆமாம்! உங்களுக்கு எப்படி அது தெரியும்?’’ என்று கேட்டாள்.

‘`நான்தான் காலங்களின் தேவதை. யாருக்காவது காலம் குறித்த ஆசைகள் இருந்தால் எனக்குத் தெரிந்துவிடும். அவர்களின் நினைவுகளுக்குள் வந்து, அவர்கள் யோசிக்கும் காலத்தை நினைவுக்குக் கொண்டுவருவேன். மனிதர்கள், கடந்த காலங்களை நினைத்துப் பார்ப்பது என் உதவியால்தான்’’ என்றார்.

‘`ஓஹோ... ஆனால், நான் முடிஞ்சுபோனதை நினைக்கலையே. பெரியாளாக ஆசைப்பட்டேன்’’ என்றாள் கயல்விழி.

‘`எனக்குத் தெரியும். நீ எதுக்குப் பெரியாளாக நினைக்கிறேன்னு தெரியும். பெரியவங்களுக்குத்தான் சுதந்திரம் இருக்கிறதா நினைக்கிறாய். உன்னைப் பெரியாளாக மாத்தறதுக்கு முன்னாடி, பெரியவங்க மனசுக்குள்ளே உன்னைக் கூட்டிட்டுப் போறேன். கொஞ்ச நேரம் அங்கே இருந்து பார். அப்புறமும் உன் ஆசை அப்படியே இருந்தால், உடனே பெரியவளா ஆக்கிடறேன்’’ என்றார் காலங்களின் தேவதை.
கயல்விழி மகிழ்ச்சியோடு, ‘`சரி, யார் மனசுக்குள்ளே கூட்டிட்டுப் போகப்போறீங்க?’’ என்று கேட்டாள்.

‘`ஹாலில் உட்கார்ந்திருக்கிற உன் அப்பா, அம்மாவின் மனங்களுக்குள்ளேதான்’’ எனச் சொல்லி, கயல்விழியின் கைகளைப் பற்றினார் காலங்களின் தேவதை.

கயல்விழியும் காலங்களின் தேவதையும் - சிறுகதை

அடுத்த நொடி தன் தந்தையின் மனதுக்குள் இருந்தாள் கயல்விழி. தந்தையின் மனது மிகவும் படபடப்புடன் இருந்தது.

‘நாளைக்குள்ளே இந்த புராஜெக்ட்டை சப்மிட் பண்ணலைன்னா ஜி.எம் திட்டுவாரே. ச்சே... பேருக்குத்தான் மேனஜர். ஒருமணி நேரம் ரிலாக்ஸா இருக்க முடியுதா? எனக்குக் கீழே இருக்கிறவங்ககிட்டே வேலையை வாங்கி அனுப்பறதுக்குள்ளே போதும் போதும்னு ஆகிடுது. மத்தவங்க பண்ற தப்புக்கெல்லாம் சேர்த்து நான் திட்டு வாங்கணும். பத்துமணி நேரம் ஆபீஸில் இருந்துட்டு வந்தும் இங்கேயும் அதே வேலை. ஞாயிற்றுக்கிழமை பீச்சுக்குப் போகணும்னு ஒரு மாசமா பிளான் போட்டும் முடியலை. ஒருமணி நேரம் பழைய ஃப்ரெண்டு வீட்டுக்குப் போய் செஸ் விளையாட ஆசைப்பட்டும் நடக்கலை. ச்சே... கயல்விழி மாதிரி குழந்தையாகவே இருந்திருக்கலாம்’ என்று புலம்பியது அவர் மனம்.

கயல்விழி சொல்வதறியாது திகைத்துப் போனாள். எப்படித் தன் தந்தையால் தினம் தினம் இத்தனை கடினமான சூழ்நிலையில் தொடர்ந்து உழைக்க முடிகிறது என ஆச்சரியம் அடைந்தாள். அப்போது, கயல்விழியின் தந்தை மனதுக்குள் ஓர் எண்ணம் வருவதைக் காலங்களின் தேவதை சுட்டிக்காட்டினாள். அது, அவரது சிறு வயதுப் பருவம். நண்பர்களோடு சேர்ந்து உற்சாகமாகக் கால்பந்து விளையாடுகிறார். நண்பர்களோடு சிரித்துப் பேசுகிறார்.

‘`கயல்விழி, சரி வா! உன் அம்மாவின் மனதுக்குள்ளும் போய் வரலாம்’’ என்றார் காலங்களின் தேவதை.

அடுத்த நொடி, அம்மாவின் மனதுக்குள் இருந்தாள். அம்மாவின் கண்கள்தான் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்ததே தவிர, நினைவுகள் அங்கே இல்லை. ‘ம்... காலையில் என்ன டிபன் செய்யறது? அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்துச்சே. இப்போ எப்படி இருக்கோ? போய்ப் பார்க்கலாம்னு ஆசைப்பட்டால் இங்கே நடக்குமா? மாதக் கடைசி. கையில் காசு இல்லேன்னு கத்துவார். நம்ம காசுல போய் வரலாம்ன்னா, கயல்விழிக்கு ஸ்கூல். அவளை யாரு கவனிச்சுப்பா’ என்று நினைத்துக்கொண்டிருந்தார்.

அப்போது, அம்மாவின் மனதிலும் ஓர் எண்ணம் வந்தது. அது, அவர் கயல்விழி வயதில் இருக்கும்போது அவரின் அப்பா மீது உப்புமூட்டை ஏறி விளையாடிய நினைவுகள். இதைப் பார்த்த கயல்விழி திகைத்துப்போனாள்.

இப்போது, மீண்டும் படுக்கை அறையில் இருந்தாள் கயல்விழி. “இப்போ சொல்லு கயல்விழி. நீ சீக்கிரம் பெரியாளாக ஆகணுமா? பெரியவங்க எல்லோருக்கும் நினைச்சதைச் செய்யும் சுதந்திரம் இருக்கா?’’ எனக் கேட்டார் காலங்களின் தேவதை.

‘`ம்ஹூம்... பெரியவங்க எல்லோருக்குமே அவங்க குழந்தைப் பருவம்தான் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு. எல்லோருக்குமே சுதந்திரம் என்பது ஓர் அளவோடுதான் இருக்கும். அந்தப் பருவத்தில் அந்த அளவு சுதந்திரத்தோடு நம்ம வேலையை ஒழுங்கா செய்யணும்’’ என்றாள் கயல்விழி.
 
‘`சபாஷ்! ரொம்ப அழகா புரிஞ்சுக்கிட்டே. அப்போ, உனக்கு எல்லா ஹேப்பி பர்த்டேவும் மொத்தமா ஒண்ணா வரணுமா?’’

‘`வேண்டவே வேணாம். நான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டுப் போர்வைக்குள் நுழைந்தாள் கயல்விழி.