‘நீலத்திமிங்கலம்’ விளையாட்டு குறித்த செய்திகளும் அதற்குப் பலியாகும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த செய்திகளும் விவரிக்க முடியாத வேதனையை ஏற்படுத்துகின்றன. வாசிப்பைத் தவறவிட்ட இடத்திலிருந்துதான் நாம் விபரீதங்களை வரவழைத்துக்கொண்டோம் என்று தோன்றுகிறது. ஒரு காலகட்டத்தில் வாசிப்பு என்பது இளைஞர்களுக்கான வேட்கையாக இருந்தது. அரசியல் இயக்கங்களும் அதன் பரவலாக்கமும் புத்தகங்களையும் வாசிப்பையும் அடிப்படையாகக்கொண்டிருந்தன. இளைஞர்களை அரசியல்மயப்படுத்துவதற்கு எப்போதுமே புத்தகங்கள் முன்னணியில் நின்றன.

வாசிப்பின் மீதுள்ள ஆர்வத்தால்தான் ஏராளமான எழுத்தாளர்கள் தங்கள் ஆன்மாவை உருக்கி இலக்கியப் பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார்கள். ‘சில நூறு பேர் படிக்கும் பத்திரிகைகள்’ என்ற ஏளனங்களைக் கடந்து அதை ஒரு வேள்வியாக எடுத்துச் சென்றார்கள் என்றால், தீவிர வாசிப்புடையவர்களின் மீதான நம்பிக்கைதான் காரணம். விற்பனையைப் பற்றியோ வருமானம் பற்றியோ கவலைப்படாமல் இப்போதும் தமிழில் ஏராளமான நூல்கள் எழுதிக் குவிக்கப்படுகின்றன என்றால், வாசிப்பின் மீதுள்ள ஆர்வமும் அசைக்க முடியாத நம்பிக்கையும்தான் காரணம். ஆனால், வாசிப்பிலிருந்து விலகிச்செல்லும் இளம் தலைமுறை, மின்னணு ஊடக மெய்நிகர் உலகங்களுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கின்றது. பலவீனமான மனநிலை உருவாவது எதனால், சவால்களை எதிர்கொள்ள முடியாத நோய்மைத்தன்மை ஏற்படுவது எதனால் என்று யோசித்துப் பார்த்தால், அவர்களுக்குப் புத்தக வாசிப்பு குறைவாக இருப்பதைக் கண்டுகொள்ளலாம். புத்தகங்களைப் படிப்பது என்பது, எழுத்துகளைப் படிப்பதல்ல; மனிதர்களைப் படிப்பது; வாழ்க்கையைப் படிப்பது. ஒவ்வொரு மனுஷியும் மனிதனும் தன் வாழ்க்கையை, சிந்தனையை, அனுபவத்தை, கனவை, ஏமாற்றத்தை, கோபத்தை, அரசியலை, உணர்வை, துக்கத்தை, வலிகளை... இன்னும் ஏராளமானவற்றை புத்தகங்களாக உருமாற்றித் தருகிறார்கள். புத்தகங்களை விலக்கிவைப்பது, வாழ்க்கையிலிருந்து விலகி நிற்பதாகும் என்பதை உணர வேண்டும். அடுத்தத் தலைமுறைக்கு வாசிப்பின் ருசியை உணர்த்த வேண்டும். அதுதான் நமது பலவீனங்களைக் கடப்பதற்கான துணை.

- ஆசிரியர்