“ ‘பாதுகாப்பான’ அணு உலை என்கிற ஒன்று இல்லவே இல்லை. அணுசக்தியைச் சார்ந்திருப்பது, அதை முன்னெடுத்துச் செல்வது ஆகியவற்றிலிருந்து இந்தியா விலகியிருக்க வேண்டும்” என்கிறார் ஜப்பான் முன்னாள் பிரதமர் நவோடா கான். அவரின் பேட்டியிருந்து...

“ஃபுகுஷிமாவில் அணு உலைப் பேரழிவு நிகழ்ந்து ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?’’

“ஒவ்வோர் ஆண்டும் ஃபுகுஷிமா சென்று அங்கு நடப்பதை உற்றுக் கவனித்துவருகிறேன். இன்னும் அங்கே நிலைமை மோசமாகத்தான் உள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை. அவர்கள், சொந்த இடங்களுக்குத் திரும்ப அச்சப்படுகின்றனர். குழந்தைகளின் எதிர்காலம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற பிரச்னைகளால் அங்கு அவர்களால் திரும்பிப்போக முடியவில்லை”

“ஃபுகுஷிமா பேரழிவு தவிர்த்திருக்க முடியாது என நினைக்கிறீர்களா?”

“அந்த விபத்துக்கு நிலநடுக்கம் மற்றும் சுனாமிதான் காரணம். அரசும் விஞ்ஞானிகளும் விபத்து நடக்கவே நடக்காது என்று நம்பினர். ஆகையால், விபத்துக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஃபுகுஷிமா டய்ச்சி, கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டது. ஆனால், 10 மீட்டருக்கும் உயரமான சுனாமிப் பேரலைகள் வந்திருக்கின்றன என்று வரலாற்றுக் கோப்புகள் காட்டுகின்றன. இதை மனதில்வைத்து, அணு உலையை 35 மீட்டர் உயரத்துக்குக் கட்டியிருக்க வேண்டும். அரசு, நிதி சார்ந்து எடுத்த முடிவால்தான் 10 மீட்டர் உயரத்தில் அணு உலை கட்டப்பட்டது. இந்த விபத்து தடுக்க முடியாதது ஒன்றும் அல்ல.”

“ஃபுகுஷிமா பேரழிவுக்குப் பின்னர், இந்த உலகமும் ஜப்பானும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?”

“அணு உலைத் தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது என்றும் 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்றும் நம்பப்படுகிறது. ‘அணு உலை விபத்து எங்கு, எப்போது நடக்கும் என்பது தெரியாது. ஆனால், அது கண்டிப்பாக நடந்தே தீரும்’ என்று கிரகொரி ஜாக்சோவின் கூற்றைத்தான் இந்தக் கேள்விக்குப் பதிலாகக் கூற விரும்புகிறேன். ஃபுகுஷிமா விபத்து நடந்த இடத்திலிருந்து 250 கி.மீ தூரத்தில் இரண்டரைக் கோடி மக்களுக்குமேல் வசிக்கிறார்கள். இந்த இரண்டரைக் கோடி மக்களை அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து காலிசெய்ய வைக்கும் அளவுக்கு ஃபுகுஷிமா விபத்து சென்றிருக்கும். அதைப்போன்ற ஒரு விபத்தை யாரும் கற்பனைசெய்துகூடப் பார்க்கவில்லை. மரபுசாரா எரிசக்தி நோக்கி ஜப்பான் முன்னரே நகர்ந்திருக்க வேண்டும்.”

“இந்தியாவுக்கு நிலநடுக்கப் பாதிப்புகள் இருக்கப் போவதில்லை. இதனால், இந்தியாவில் இருக்கும் அணு உலைகளின் அபாய அளவு குறையுமா?”

“ஜப்பான் வரலாற்றில் நிறைய நிலநடுக்கங்களும் சுனாமியும் வந்துள்ளன. விபத்துகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு விபத்து நடக்கும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்பது மிகப்பெரிய அளவுக்கு இருக்கும். இந்தியாவுக்கு நிலநடுக்க அச்சுறுத்தல்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது முக்கியமல்ல. அணு உலைகளால் ஏற்படப்போகும் பாதிப்புகளுக்கும் ஒரு நாட்டுக்கு நிலநடுக்க அச்சுறுத்தல் இருக்கிறதா என்பதற்கும் சம்பந்தம் இல்லை.”

“ஜப்பான், மீண்டும் அணுஉலைகளை இயக்க ஆரம்பித்துள்ளதே?”

“2011 மார்ச் 11 வரை 54 அணு உலைகளை ஜப்பான் இயக்கியது. அவை, ஜப்பானின் மொத்த மின்சாரத்தேவையில் 30 சதவிகிதத்தைப் பூர்த்திசெய்தன. ஃபுகுஷிமா டய்ச்சி விபத்துக்குப் பிறகு, நாட்டில் இருந்த அத்தனை அணு உலைகளும் நிறுத்திவைக்கப்பட்டன. அப்போது, மின்சாரப் பற்றாக்குறை இருக்குமென்று மின் உற்பத்தி நிறுவனங்கள் எல்லாம் கூறின. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதன்மூலம், அணுமின் உற்பத்தி ஜப்பானுக்குத் தேவையில்லை என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. எனவே, அணு உலைகளை மறுபடியும் இயக்குவதன்மூலம் ஜப்பான் அரசு தவறு செய்கிறது என்று நினைக்கிறேன்”

“சென்னைக்கும் டெல்லிக்கும் நீங்கள் வரவேண்டுமென நினைக்கிறோம்...”

“இந்தியாவுக்கு இதுவரை இருமுறை வந்துள்ளேன். வாய்ப்புக் கிடைத்தால், அணுமின் நிலையம் அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களையும், அணு உலைகளுக்கு எதிராகப் போராடுபவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க விரும்புகிறேன்.”

“அணு மின்நிலையத் திட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?”

“அணுசக்தியைச் சார்ந்திருப்பது, அதை முன்னெடுத்துச் செல்வதிலிருந்து இந்தியா விலகியிருக்க வேண்டும். காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம்தான் மின்சாரத் தேவையை நாடவேண்டும். இந்தியாவுக்கு மின்சாரம் தேவை என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால், அணுமின் நிலையங்களைக் கட்டாமல், வளர்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே மரபுசாரா எரிசக்திமூலம் மின்சாரம் பெறுகிறீர்கள் என்றால், அது நன்றாக இருக்கும்.”

- அமிர்தராஜ் ஸ்டீபன்
மொழிபெயர்ப்பு: பூவுலகின் நண்பர்கள்