குண்டர் சட்டத்திலிருந்து விடுதலையாகி வந்துள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை, ‘மோஸ்ட் வான்டட்’ லிஸ்டில் இருப்பவரைப்போல நடத்துகிறது தமிழக அரசு.

ஒரு டீ கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தியைத் திடீரெனக் கைதுசெய்தது காவல்துறை. வழக்கறிஞர்கள் உட்பட பலரும் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவரை விடுவித்தார்கள். போலீஸ் நடவடிக்கை குறித்துத் திருமுருகன் காந்தியிடம் பேசினோம். “ஜெனீவாவில், வைகோவைச் சிங்களர்கள் சிலர் அவமானப்படுத்திய செயலைக் கண்டித்து, தமிழ்ப் புலிகள் அமைப்பினர் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின்முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தேன். பிறகு, மே 17 ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரவீன்குமாரும் நானும் அருகிலுள்ள கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தோம். அங்கு வந்த போலீஸ் எங்களைக் கைது செய்தது. காரணம் கேட்டதற்கு, ‘உயர் அதிகாரிகளின் உத்தரவு’ என்றார்கள்.

எந்தப் போராட்டமும் நடத்தாத, போராட்டத்திலும் பங்கெடுக்காத என்னை எந்தக் காரணமும் சொல்லாமல் போலீஸ் கைதுசெய்தது சட்ட விதிமீறல். இந்தக் கைதுக்கான பின்னணி, செப்டம்பர் 23-ம் தேதி தி.நகரில் தமிழின உரிமைப் பொதுக்கூட்டம் நடத்தியதற்காக என்று கருதுகிறேன். 2016-ம் ஆண்டு மெரீனாவில் ஒரு போராட்டத்துக்கு ஒரு ஏற்பாடு செய்தேன். அதற்காகச் செப்டம்பர் 25-ம் தேதி, மெரீனா காவல்நிலையத்தில் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு ஒன்றை இப்போது பதிவுசெய்து கைது உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த வழக்கு அக்டோபர் 4-ம் தேதி நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வருகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே என்னை எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் எனக் காவல்துறையினருக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுத்துள்ளன. அதனால் நடத்தப்படும் நாடகம்தான் இவை. கைது செய்து என்னையும் பிரவீன்குமரையும் காவல்நிலையத்தில் வைத்தனர்; மற்ற தோழர்களை மண்டபத்தில் வைத்திருந்தனர். வழக்கறிஞர்கள், இயக்கத் தோழர்கள் அனைவரும் காவல்நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே, எங்களை விடுதலை செய்தனர். தி.நகர் பொதுக் கூட்டத்துக்குப் பிறகு மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மூன்று இடங்களில் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், அவை எதற்கும் போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. மேலும், எப்படியாவது எங்களைக் கைது செய்துவிட வேண்டும் எனக் காவல்துறை துடிக்கிறது” என்றார்.

அடக்குமுறைகளைமீறி ஒலிக்கிறது திருமுருகன் காந்தியின் குரல்.

- ஜெ.அன்பரசன், படம்: கே.ஜெரோம்