Published:Updated:

பான்பராக் உயிரைக் கொல்லும்!

பான்பராக் உயிரைக் கொல்லும்!
பிரீமியம் ஸ்டோரி
பான்பராக் உயிரைக் கொல்லும்!

பான்பராக் உயிரைக் கொல்லும்!

பான்பராக் உயிரைக் கொல்லும்!

பான்பராக் உயிரைக் கொல்லும்!

Published:Updated:
பான்பராக் உயிரைக் கொல்லும்!
பிரீமியம் ஸ்டோரி
பான்பராக் உயிரைக் கொல்லும்!

றிவாலயத்தின் குரலாகத் தொலைபேசியில் ஒலித்துவந்த, ‘அறிவாலயம்’ ரவியின் குரல் செப்டம்பர் 27-ம் தேதி நின்றுவிட்டது.

அண்ணா அறிவாலயத்தில் கால்வைத்தாலே ரவியைக் கடந்துதான் உள்ளே செல்லமுடியும். மெலிந்த தேகம், சுறுசுறுப்பான நடைக்குச் சொந்தக்காரர். 25 ஆண்டுகளுக்கு முன்பு,  ஓர் உதவியாளராக அறிவாலயத்துக்குள் என்ட்ரி ஆன ரவியின் வேலை, தலைவர்களுக்கு டீ வாங்கிக்கொடுப்பது. வேலையில் ரவியின் வேகத்தைப் பார்த்த கருணாநிதி, “அந்தப் பையனை டெலிபோன் ஆப்ரேட்டரா போடுங்கப்பா” என்று சொல்லியிருக்கிறார். அலுவலகத் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்பவர்களுக்குப் பதில் சொல்லும் வேலையில் அமர்ந்த ரவி, அறிவாலயத்தின் போன் டேட்டாவாக மாறினார். தி.மு.க நிர்வாகிகள் அத்தனை பேரின் தொலைபேசி எண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொபைல் எண்களை வைத்துள்ள ‘மெமரி சிப்’பாக இருந்தார், ரவி.

பான்பராக் உயிரைக் கொல்லும்!

ரவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.எல்.ஏ, எம்.பி, மாநில நிர்வாகிகள் ஆகியோரின் எண்களை எல்லாம் மனப்பாடமாக வைத்திருப்பார். நிர்வாகிகள் எண்களைக்கேட்டுக் கட்சியினரோ, பத்திரிகையாளர்களோ தொடர்பு கொண்டால், அடுத்த நொடியே அந்த எண்களைக் கடகடவெனச் சொல்வார். லேண்ட்லைன் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வருகிறதென்றால், அந்த நம்பரைப் பார்த்த மாத்திரத்தில், “சொல்லுங்க மாவட்டம்...” என்பார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு ரவியின் பற்களின் கீழ்ப் பகுதியில் புண் வந்திருக்கிறது. டாக்டரிடம் காட்டியபோதுதான், வாய்ப்புற்றுநோய் என்பது தெரியவந்துள்ளது. அவருக்குக் கட்சியின் செலவில் உயர் சிகிச்சை அளிக்குமாறு மு.க.ஸ்டாலின் சொன்னார். அப்போலோ மருத்துவமனையில் ஆறு மாதங்களாகச் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லை. ரவியின் மரணத்துக்குக் காரணம், பான்பாராக். எந்நேரமும் பான்பராக்கை மென்று கொண்டே இருந்ததால், அது ரவியின் உயிருக்கு வினையாகிவிட்டது. “பாக்கு போடாதீங்க.. உடனே நிறுத்துங்க’’ எனப் பலரும் ரவிக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை புறம்தள்ளினார். ‘‘ ‘இத்தனை நம்பர்களை ஞாபகத்தில் வைத்திருக்கிறாயே... உன் மூளையை எனக்குக் கொடு அண்ணா...’ என ஜாலியாக ரவியிடம் கேட்பேன். பாக்கு போடாதீங்கண்ணேனு பலமுறை அவரிடம் அட்வைஸ் செய்திருக்கிறேன். அவரின் இழப்பு ரொம்பவே பாதித்துவிட்டது’’ என்றார் தி.மு.க செய்தித்தொடர்பாளர் பிரிவு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா.

ரவிக்கு மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். “பான்பாராக் போட்டதால்தான் எனக்கு கேன்சர் வந்துருச்சு” எனக் கடந்த மார்ச் மாதம் குடும்பத்தாரிடம் சொல்லியிருக்கிறார் ரவி.

குட்கா, பான்பராக் உயிரைக் கொல்லும்!

- அ.சையது அபுதாஹிர்