Published:Updated:

ஜெயலலிதா மர்மம்... கறுப்பு பூனைகள் வெளியே வருமா?

ஜெயலலிதா மர்மம்... கறுப்பு பூனைகள் வெளியே வருமா?
பிரீமியம் ஸ்டோரி

மிழகத்தில் இப்போது நடக்கும் அத்தனை கூத்துக்களும் ஆரம்பித்தது, ஜெயலலிதா மரணத்திலிருந்து தான்.

75 நாள்கள் அப்போலோ மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது ஒருசிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ‘‘அம்மா நலமுடன் இருக்கிறார்... இட்லி சாப்பிட்டார்’’ என நாங்கள் சொன்னதெல்லாம் பொய் என்று அதே வாய்கள் இப்போது கூச்சமின்றிச் சொல்கின்றன. இப்போது, ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிப்பதற்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனைத் தமிழக அரசு நியமித்துள்ளது.

ஜெயலலிதா மர்மம்... கறுப்பு பூனைகள் வெளியே வருமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், ஜெ. மரணம் தொடர்பான விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம்  திரட்ட முயன்ற கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன், சில கருத்துக்களை முன்வைக்கிறார்.

 “ஜெயலலிதா மரணத்துக்கு முதலில் பதில் சொல்ல வேண்டியது, அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய கறுப்புப் பூனைப் படையினர்தான்.சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டபோது, நீதிமன்றத்திலிருந்து ஜெயலலிதாவைச் சிறைக்கு அழைத்துச்செல்ல கர்நாடக போலீஸ்  முற்பட்டது. அப்போது, ‘சிறைத் துறையினரிடம் ஒப்படைக்கச் சொல்லித்தான் எங்களுக்கு உத்தரவு. உங்களிடம் ஒப்படைக்க முடியாது’ எனக் கர்நாடக போலீஸிடம் ஒப்படைக்க மறுத்தனர், கறுப்புப்பூனைப் படையினர். இதிலிருந்தே கறுப்புப் பூனைப் படையினரின் அதிகாரத்தை அறிந்துகொள்ள முடியும். அப்படிப்பட்ட கறுப்புப் பூனைப் படையினர், ஜெயலலிதாவை அப்போலோவுக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச்செல்லப்பட்டபோது உடன் சென்றார்களா? அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களும் அவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்களின் பாதுகாப்புப் பணி எப்போது வாபஸ் பெறப்பட்டது? என்ற கேள்விகளுக்கு யாரிடமும் விடை இல்லை.

ஜெயலலிதா மர்மம்... கறுப்பு பூனைகள் வெளியே வருமா?

‘ஜெயலலிதாவுக்கு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு எப்போது வாபஸ் பெறப்பட்டது?’ என  உள்துறை அமைச்சகத்திலும் தேசிய பாதுகாப்புப் படையிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்கள் கேட்டேன். ‘இந்தத் தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற முடியாது’ எனக் கூறிவிட்டார்கள். இறந்த ஒரு தலைவருக்குப் பாதுகாப்பு எப்போது வாபஸ் பெறப்பட்டது என்பதைச் சொல்வதில் என்ன சிக்கல்? வெறுமனே சசிகலா, தினகரன் பழிவாங்கலாக இல்லாமல்... கவர்னர், தேசிய பாதுகாப்புப்படை அதிகாரிகள் என அனைவரையும் ஆறுமுசாமி கமிஷன் விசாரிக்க வேண்டும்’’ என்றார், வழக்கறிஞர் லோகநாதன்.

- எம்.புண்ணியமூர்த்தி, படம்: க.விக்னேஷ்வரன்