நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்

ஆனந்த் என்ன செய்யப் போகிறான்? துர்காவின் அடுத்த கட்ட பயணம் என்ன?

இந்தக் கேள்விகளுடன் முடிந்திருந்தது கடந்த எபிசோட். அடுத்த எபிசோட், எந்தெந்த ரூட்டில் பயணிக்கும் என்பதை தீர்மானித்து, இயக்குநர் நாற்காலியில் உட்காரும் ஆவலோடு இங்கே வாசகிகள் கலக்குகிறார்கள்...

கிழக்கு தாம்பரம் - ஜம்பகலட்சுமி, அந்தியூர் - ஜாஸ்மின், மும்பை - ஆர்.மீனா, நிலக்கோட்டை - புஷ்பலதா.... இந்த நால்வரும், 'ஆனந்த் மனமாற்றம் அடைகிறான்' என்கிறார்கள். ஆனால், திருப்பங்கள் இல்லாவிட்டால், கதையில் சுவை குறைந்துவிடுமே!

திருவான்மியூர் - மாயா, பெங்களூரூ - சுபா இருவரும்... 'குழந்தை அஞ்சு மனதில் ஆனந்த் விஷம் பாய்ச்சுகிறான்' என்று புதுத் திருப்பம் சொல்கிறார்கள். பரவாயில்லை!

நெல்லை - என் கோமதி, தஞ்சாவூர் - செந்தாமரை... இருவரும் ஆனந்த் செய்யப் போகும் வில்லன் வேலைக்கு முன்னுரை எழுதுகிறார்கள். பாராட்டலாம்!

ஈரோடு - விஜயலட்சுமி.... ஆனந்த்தை தற்கொலை எல்லை வரை கொண்டு போய் நிறுத்தி திகில் கிளப்புகிறார்!

கப்பலூர் - ஜெயசித்ராவுக்கு கடும் கோபம். இந்தச் சகோதரி கதையையே கடுமையாக விமர்சிக்கிறார். 'வழக்கம் போல' என வசைபாடுகிறார். ஆனால்... தீர்வைச் சொல்ல வேண்டாமோ?

சங்கரன்கோயில் - சுகுணா ரவி.. ஊருக்குப் போகும் அவசரத்திலும் கருத்தை பதிவு செய்கிறேன் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார்... 'எந்த நிலையிலும் துர்கா வாழ்ந்து காட்டுவாள்’ என தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

சென்னை - கலா பாஸ்கர்... இவர், இயல்பான கதைக்கு வருகிறார். ராஜம் தூண்டி விட்டு ஆனந்த் எப்படி திசை மாறக்கூடும் என வெகு இயல்பாக சிந்தித்திருக்கிறார். ஆதலால் இந்த எபிசோட் இயக்குநர்... இவரே! சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

காலை நாலரை மணி. உறக்கம் தொலைந்துபோக... ஆனந்த் எழுந்து, இருட்டு அறைக்குள் நடக்கத் தொடங்கினான்.

'தாம்பத்யத்துல கல் வீசி, அதை நீங்க உடைச்சாச்சு. நான் தனிச்சு வாழ முடியும். ஒரே வீட்டுல வாழவும் தயார். அதுவும் பிடிக்கலைனா, நீங்க உங்கம்மா வீட்டுக்கே போயிடலாம்’, 'புரிஞ்சுகிட்டா... கைகோத்து காலம் முழுக்க பயணிக்கலாம். இல்லைனு நெனைச்சா, நமக்குரிய ஸ்டேஷன் வந்தாச்சுனு இறங்கிப் போயிட்டே இருக்கலாம். குட் பை!’

- அவனுடைய நெஞ்சுக்குள் ஊசியாக இறங்கிக் கொண்டே இருந்தன... துர்காவின் இந்த வார்த்தைகள்!

'இதுக்கும் மேல இவகூட நான் இருந்தா, என்னைவிடக் கேவலமான ஆம்பள வேற யாரும் இருக்க முடியாது!’

- சரசரவெனத் தன் துணிகளை எடுத்து, பெட்டிக்குள் வைத்துக் கொண்டான். முகம் கழுவி, வாய் கொப்பளித்து, உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான். எதிரே துர்கா!

''நான் இதை எதிர்பார்த்தேன்.''

''பின்னே... ஒரு பொண்டாட்டி இத்தனை பேசின பிறகு எந்த ஆம்பளை வெக்கம்கெட்டு அவளோட குடித்தனம் நடத்துவான்?''

''நான் இங்கே வரும்போது, 'நீங்களும் வாங்க’னு கூப்பிடல. என் கடமைக்காக விலகி வந்தேன். பாசத்தோட நீங்க வரல... வேவு பார்க்க வந்தீங்க. மனைவியைப் புரிஞ்சுக்க முடியாத புருஷன், பிரிஞ்சு வாழறதுல தப்பே இல்லை. உங்களை நான் தடுக்கவும் இல்லை.''

''உன் உதவி இல்லாம என்னால வாழ முடியும்.''

''நான் முடியாதுனு எப்ப சொன்னேன்?''

''ஊருக்கு உபகாரம்னு சொல்லிட்டு, நீ நடத்தற அல்லி தர்பார்ல எனக்கு உடன்பாடு இல்லை.''

துர்கா பேசவில்லை!

''ஆனா, அஞ்சு... உன்னால அவ எதிர்காலம் நாசமாகப் போகுது.''

துர்கா விரக்தியுடன் சிரித்தாள். ஆனந்த் வேகமாக வெளியேறினான். குழந்தைகள் இரண்டும் உறக்கத்தில் இருக்க, ராஜாவின் கேசத்தைத் தடவிக் கொடுத்தாள் துர்கா.

'உங்கப்பா இங்கே வராம இருக்கலாம். உங்கம்மா மடியில மகளா வளர்ந்த நான், உன்னை எப்படீடா விட்டுத் தர முடியும்? நான் பேசினதுல தப்பில்லை. நடக்கறது நடக்கட்டும்.’

அடுத்த அரைமணியில் ஆனந்த் பெட்டியுடன் வீட்டுக்குள் நுழைய, ராஜம் பதறிப் போனாள்.

''என்னடா... பெட்டியோட திரும்பிட்டே?''

நடேசன் வெளியே வந்தார்.

''அம்மாவைப் பிரிஞ்சு இருக்க முடியாம ஆசையோட வந்திருப்பான் உன் பிள்ளை.''

''போதும் உங்க கேலி. அவகிட்ட அவமானப்பட்டு வந்திருக்கான். முகமே சொல்லுதே.''

ஆனந்த் பேசவில்லை!

''அக்கா செத்ததும், அவ புருஷனும், பிள்ளையும்தான் முக்கியம்னு இங்கிருந்து ஓடினா. அவளுக்கு வக்காலத்து வாங்க அந்த அன்வர் பய. சுத்தி ஆம்பளைங்க. எந்தப் புருஷனால தாங்கிக்க முடியும்? இனி அங்கே இருந்தா, வேலைக்காரனைவிட கேவலமா நடத்துவா.''

''நிறுத்துடி. ஏன் இப்படி அபாண்டமா பேசறே?''

''நான் பேசினது தப்புனா, ஆனந்த் சும்மா இருப்பானா? முகம் தொங்கிப் போய் நிக்கறானே?''

ஆனந்த் நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தான். ராஜம் அருகில் வந்தான். அவன் கைகளை மெள்ளப் பிடித்தாள்.

''ஆனந்த்... நீ அவகூட போறதுல எனக்குக் கொஞ்சம்கூட இஷ்டமில்லை. தடுத்தா தப்பாகும்னு விலகி நின்னேன். இப்ப நீயே திரும்பி வந்துட்டே...''

கதவோரம் நின்று கலவரமாகப் பார்த்தாள் சுதா.

''ஆனந்த்... இப்பயும் சொல்றேன். தப்பான முடிவுகளை நீ எடுக்கறே. நல்ல பொண்டாட்டியை சந்தேகப்படற. உன் கம்பெனி லாக் அவுட். உன் கால்ல நிக்கற தெம்புகூட உனக்கில்லை. துர்கா மாதிரி உன்னைப் புரிஞ்சுக்கிட்டு தாங்கிப் பிடிக்கற ஒருத்தி, இனி உன் வாழ்க்கையில வரப் போறதில்லை. ஈகோ, ஆணாதிக்கம், சந்தேகம் இதெல்லாம் இனி எடுபடாது. எந்த ஒரு திராணியுள்ள மனைவியும் இதுக்கெல்லாம் தலைசாய்க்கமாட்டா!''

- நடேசன் படபடக்க...

''நிறுத்துங்க. அக்கா புருஷனுக்காக கட்டின புருஷனை ஒருத்தி தூக்கி வீசினா, இவன் எதுக்கு மானங்கெட்டு அவகூட வாழணும்?'' என்று பதிலுக்கு சீறினாள் ராஜம்.

''ராஜம்... நீ உசுப்பிவிட்டு, பிரிவை நிரந்தரமாக்காதே. பெத்தவங்க, பிள்ளைங்களை வாழவைக்க முயற்சி செய்யணும். கேவலமான அம்மாவா மாறி, உன் பிள்ளையை நாதியில்லாம ஆக்கிடாதே. உங்கிட்ட கோடிக்கணக்கா பணம் வெச்சுருக்கியா? இவனைக் காலம் முழுக்க உன்னால ரட்சிக்க முடியுமா..?''

''ஏன்? என் பிள்ளைக்கு தன் கால்ல நிக்கற சக்தி இல்லையா?''

''அது இருந்திருந்தா... அவ வெளிநாட்டுக்குப் போகணும்னு ஏன் யோசிச்சிருப்பா?''

''அவ செய்யறதெல்லாம் அவ குடும்பத்துக்கு.''

''மனசாட்சி இல்லாம பேசாதே ராஜம்.''

''அப்பா நிறுத்துங்க. நான் இந்த வீட்ல இருக்கலாமா... கூடாதா?''

- கூச்சலிட்டான் ஆனந்த்.

''நீ இருடா என் ராஜா. அம்மா வீட்ல பிள்ளை இருக்கக்கூடாதுனு சொல்ல யாருக்கு அருகதை?''

- நடேசனை உஷ்ணமாகப் பார்த்தபடி சொன்ன ராஜம், ''நீ குளிச்சிட்டு வா ஆனந்த். காபி தர்றேன். அவ ஆடற ஆட்டத்துக்கு உன் கால்ல வந்து விழுவா. அப்பவும் அவ தேவையில்லை!'' என்று பாட, ஆனந்த் மௌனத்தைத் தொடர்ந்தான்.

''அவளை விவாகரத்து பண்ணிடு. அந்த சனியன் ஒழிஞ்சாத்தான், உன் வாழ்க்கையில நிம்மதி வரும்.''

ஆனந்த் உள்ளே போக, நடேசன் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டார்.

''என்ன... அவ வீட்டுக்கா?''

''இல்லடி... சுடுகாட்டுக்கு.''

வேகமாக நடேசன் வெளியேறினார். ஆனந்த் குளிக்கப் போக, ராஜம் சமையல் கட்டுக்குள் நுழைய, சுதா உள்ளே வந்தாள்.

''அம்மா... இது சரியில்லை!''

''எதுடி?''

''அண்ணனை, அண்ணிகிட்டேயிருந்து நீ பிரிக்காதே!''

''வாடி... என் மகளே! அந்த அன்வரை துர்கா திசை திருப்பிடுவாளோனு பயமா ஒனக்கு?''

''நான் அதுக்காக சொல்லலம்மா!''

''அந்த அன்வரை நீ கட்டிக்க ஒருக்காலும் நான் சம்மதிக்கப் போறதில்லை. என்னை மீறி அது நடந்தா, நான் உயிரை விட்டுருவேன்!''

சுதா அதிர்ந்தாள்.

''நீ யாரையுமே நிம்மதியா வாழவிட மாட்டியா?''

''என்னடி பேசறே? நான் உன் அம்மா!''

''அம்மானு சொல்லிக்கிட்டா மட்டும் போதாது. புள்ளைங்க மனசைப் புரிஞ்சுகிட்டு அவங்களை சந்தோஷமா வாழ வைக்கணும்.''

'''கண்டவன்கூட வாழ நினைக்கறது சந்தோஷமா? அதுக்கு கொம்பு சீவி விடறவ நல்ல மருமகளா? அவகூட சேர்ந்தா... உன் வாழ்க்கை சீரழியும்டி.''

ராஜம் உள்ளே போய்விட, சுதா அப்படியே உடைந்துபோய் உட்கார்ந்தாள். அதேநேரம் துர்காவின் வீட்டுக்குள் நுழைந்தார் நடேசன்.

''வாங்க மாமா!''

''என்னம்மா... அடிச்ச பந்து மாதிரி ஆனந்த் திரும்பி வந்துட்டானே?''

தான் பேசிய சகலத்தையும் துர்கா சொன்னாள்.

''நீ தப்பா ஒரு வார்த்தைகூட சொல்லலையேம்மா!''

''உங்களுக்குப் புரிஞ்சுது உங்க பிள்ளைக்கு புரியலியே மாமா?''

''கஷ்டப்படப் போறது அவன்தான்மா. போகட்டும். நாதியில்லாமப் போனா, உன்னைத் தேடி வருவான். சரி... நீ வெளிநாட்டுக்குப் போகலை இல்லையா?''

''இனி முடியாது மாமா. ஒரு மனைவி எடுக்கற முடிவுக்கு அவ புருஷன் பக்கபலமா இருந்தாத்தான் சாதிக்க முடியும்; தனிச்சும் போராட முடியும். இந்தக் குழந்தைங்க அடிபடுமே மாமா..?''

''அம்மாடி... நான் சொல்றேன்னு கோவப்படாதே. ராஜாவை அனுப்பிடு. பாலாஜி பார்த்துக்கட்டும்.''

''சரி மாமா. அஞ்சு?''

''நான் இங்கே இருக்கேன்மா.''

''வேண்டாம் மாமா. அத்தை அசிங்கப்படுத்துவாங்க. நீங்க அவமானப்படக் கூடாது. ஆயா மாதிரி யாரையாவது பிடிக்கறேன். பசங்களைப் பார்த்துக்கட்டும். வீட்டு வேலைகளுக்கும் உதவியா இருக்கும்.''

''கணிசமா சம்பளம் தர வேண்டி வருமே துர்கா... முடியுமா உன்னால?''

''கஷ்டம்தான். சனி, ஞாயிறுகூட ஏதாவது பார்ட் டைம், வாரக் கடைசி வேலைனு புடிக்கணும்.''

''சந்தோஷமா வாழவேண்டிய வயசுல, இப்படி எந்திரமா மாறினா எப்படீம்மா?''

''வேற வழியில்லையே மாமா. கணவன் - மனைவி ரெண்டு பேரும் புரிஞ்சுக்கிட்டு பொறுப்புகள சரிசமமா தோள்ல ஏந்திக்கிட்டா, தாம்பத்யம் சொர்க்கமா இருக்கும். இல்லைனா கஷ்டப்பட்டுத்தான் ஆகணும்.''

''தலையெழுத்தும்மா!''

காலிங் பெல் அடித்தது. பாலாஜி வெளியே நின்றார்.

''வாங்க அத்தான்!''

''அப்பா... எப்ப வந்தீங்க?''

பாலாஜியை உட்கார வைத்து ஒன்று விடாமல் நடேசன் சொல்ல, முகம் வெளுத்துப் போனது பாலாஜிக்கு!

''ஐயோ! துர்கா என்னம்மா இது? ராஜாவை இப்பவே நான் கூட்டிட்டுப் போறேன். என்னால உன் வாழ்க்கை பாழாகக் கூடாது. ஆனந்த்கிட்ட நான் போய்ப் பேசி, அவர் கால்ல விழுந்து, அவரை இங்கே கூட்டிட்டு வர்றேன் துர்கா!''

''இல்லை அத்தான். நீங்க அவர் கால்ல விழுந்தாலும், அவமானப்பட்டாலும், எந்த மாற்றமும் வரப்போறதில்லை. அவரா உணரணும். என்னைப் புரிஞ்சுக்கணும். அப்பதான் தாம்பத்யம் கண்ணியமா இருக்கும். நம்பிக்கையும், பொறுமையும்தான் மனுஷ வாழ்க்கையோட ஆணிவேர். அது ரெண்டும் விடுபட்டா, வாழ்க்கை நரக மாயிடும்.''

''இல்லை... ராஜாவை நான் கூட்டிட்டுப் போயிடறேன். இனி, நான் இங்கே வரல. முடிஞ்சா, மாற்றல் வாங்கிட்டு ஊரைவிட்டே போயிடறேன்.''

''நான் சந்தேகப்பட்டது சரியாப் போச்சுனு அவர் சொல்லிக்கறதுக்காகவா?''

''துர்கா?''

''வேண்டாம் அத்தான். யாருக்கும் பயந்து, நம்மை மாத்திக்க வேண்டாம். மாமா... இன்னிக்கு ஒருநாள் பிள்ளைங்கள நீங்க பார்த்துக்கோங்க. நான் ஆபீஸுக்குப் போயிட்டு, அப்படியே ஒரு ஆயாவுக்கும் ஏற்பாடு செஞ்சுட்டு சீக்கிரமா வந்துடறேன். உங்க ரெண்டு பேருக்கும் டிபன் தயார் பண்றேன்.''

''வேண்டாம்மா...''

''வயித்தைக் காயப்போட்டா, போராட ஒடம்புல சக்தி இருக்காது...'' என்றபடி துர்கா சமையல்கட்டுக்குள் நுழைய, நடேசனின் கண்கள் கலங்கியது - 'எத்தனை பிரச்னைகள் இருந்தாலும், சிரித்த முகத்துடன் எப்படி இயல்பாக இவளால் தாங்க முடியுது?’

பாலாஜிக்கு மட்டும் குற்ற உணர்ச்சி உச்சத்தில் இருந்தது- 'என் திடீர் மயக்கம் - அதன் விளைவாக துர்கா மேல் நான் சாய்ந்தது - துர்காவின் தாம்பத்யத்தையே சாய்த்துவிட்டதே! கல்யாணி என்னை மன்னிப் பாளா?’

துர்கா மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்ப, நடேசன் மட்டும் இருந்தார். ஆறு மணிக்கு அவர் புறப்படும் நேரம், அன்வர் வந்தான். டெலிபோன் மூலம் நடேசன் சகலமும் சொல்லியிருந்தார்.

''விடுக்கா. எல்லாத்தையும் சமாளிச்சுக்கலாம். தப்பு செஞ்சவங்களை அல்லா விடமாட்டார். ஆயாவை நான் ஏற்பாடு செஞ்சு தர்றேன். பணப்பற்றாக்குறையை நான் சரிகட்டறேன்.''

துர்கா நெகிழ்ந்து சிரிக்க,

''அக்கா... வாப்பா எனக்காக ஒரு பொண்ணைப் பார்த்துட்டார். அவ பேரு மும்தாஜ்!''

''அன்வர்... என்ன பேசற நீ? உன்னை விரும்பற சுதாவுக்கு நீ என்ன பதில் சொல்லப் போறே?''

''ஸாரிக்கா! உங்க குடும்பத்துல பெண் எடுக்க எனக்கு விருப்பமில்லை. மன்னிச்சுடு.''

நடேசன் குறுக்கே வந்தார்.

''ஆமாம்பா. உன்னை மாதிரி ஒரு நல்லவன் வாழ்க்கை பாழாகக் கூடாது.''

''மாமா... நீங்களுமா?''

''இதப்பாருக்கா... என் வாழ்க்கையைப் பாழாக்க நான் தயாரா இல்லை. மும்தாஜ்கிட்ட நான் பேசிட்டேன். உன்னைப் பற்றி எல்லாம் சொல்லிட்டேன். அவ உன்னைப் பார்க்கத் துடிக்கறா. நாளைக்குக் காலையில இங்கே கூட்டிட்டு வர்றேன்!''

- அன்வர் பதிலுக்குக் காத்திராமல் புறப்பட்டுவிட்டான்!

''என்ன மாமா இது? சுதாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டு போயிட்டானே அன்வர்?''

''சும்மாரும்மா. உனக்காக யாரும் பேசாதப்ப, சுதாவுக்காக நீ ஏம்மா உருகறே? இப்ப நீ தனியா இருப்பியா... நான் துணைக்கு இருக்கணுமா?''

''வேண்டாம் மாமா!''

நடேசன் புறப்பட்டார்.

மறுநாள் காலை... குழந்தைகளை குளிக்க வைத்து, சாப்பிட வைத்து துர்கா நிமிர்வதற்குள் அன்வர் பைக்கில் வந்து இறங்கினான். கூடவே மும்தாஜ்! நேராக துர்காவின் காலில் விழுந்தாள்!

''அக்கா... இவர் சொல்லி எல்லாம் எனக்குத் தெரியும். உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் நான் செய்யறேன்!''

கலகலப்பாகப் பேசினாள். அழகான, அன்பான பெண்ணாக இருந்தாள்.

''அக்கா... உங்களுக்கு என்னைப் புடிச்சுருந்தாத்தான் இவர் என்னைக் கல்யாணம் செஞ்சுப்பாராம். உங்களுக்குப் புடிச்சிருக்கா?''

- வெகுளியாக அவள் கேட்க, துர்கா பதில் பேச வாய் திறக்க, வாசலில் ஆட்டோ வந்து நின்றது. பெட்டியுடன் இறங்கி வந்தாள்... சுதா! அன்வர் ஆடிப்போக, அவனையும்... அவனருகில் இருந்த பெண்ணையும் பார்த்தவள், துர்காவிடம் திரும்பினாள்.

''அண்ணி... நான் நிரந்தரமா வந்துட்டேன். இனிமே இங்கேதான் இருக்கப் போறேன். குழந்தைங்களை நான் பார்த்துக்கறேன். மனசாட்சி இல்லாத ஒரு அம்மாகூட வாழறது எனக்குப் பிடிக்கலை. என்னைப் போகச் சொல்லிடாதீங்க. உங்களையே நம்பி வந்திருக்கேன் நான்!'' என்றபடி சுதா, துர்காவின் காலில் விழ, அதிர்ச்சியுடன் சுதாவையும், மும்தாஜையும் மாறி மாறிப் பார்த்தாள்!

அடுத்து நடக்கப் போவது என்ன?
- தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம். சில்க்ஸ்,
மயிலாப்பூர்,
சென்னை

பிரஷர் குக்கர் பரிசு!

''ரொம்ப சந்தோஷம்'' என்று மிக மெல்லிய குரலில் தாலாட்டுவது போல் தன் சந்தோஷத்தைப் பதிவு செய்கிறார் கலா பாஸ்கர். ''அவள் விகடன்ல சமையல் குறிப்பு, வாசகியர் கைமணம்னு என் படைப்புகள் வரும்போது எனக்கு சந்தோஷமா இருக்கும். இப்ப அந்த சந்தோஷம் ரெட்டிப்பாயிருக்கு. நினைச்சுப் பார்க்கவே இல்ல.. இத்தன சீக்கிரம் எனக்கு இயக்குநர் நாற்காலி கிடைக்கும்னு. திறமையிருந்தா கைதூக்கி விடுறதுல 'அவள் விகடன்’ எப்பவும் மனசறிஞ்ச தோழி இல்லையா?'' என்று சந்தோஷத்தையும் சாந்தமாகச் சொன்னவர்...

''ஃப்ரீயா டியூஷன் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக்கேன். இதோ பசங்க வந்தாச்சு... ரொம்ப சந்தோஷம்'' என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி போனை வைத்தார் கலா.

வாசகிகளுக்கு சூப்பர் பரிசுப் போட்டி

இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-42890014 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லி விட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்ததாக தேர்ந்தெடுக்கும் கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக சமைக்கும் வாசகிக்கு பிரஷர் குக்கர் பரிசு!

முக்கிய குறிப்பு: செவ்வாய் விட்டு செவ்வாய் 'அவள் விகடன்' கடைக்கு வருவது உங்களுக்குத் தெரிந்ததுதான். இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் 044-42890014 எண்ணைத் தொடர்பு கொண்டு கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!