டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்ததைப்போலவே மிக மோசமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் இந்தச் சிறுமி. ஆனால், நடந்த கொடூரத்தை மூடி மறைக்கப் பார்ப்பதோடு, குற்றவாளிகளையும் காப்பாற்ற போலீஸ் முயற்சி செய்வதுதான் கொடுமை.

“துணிக்கடையில வேலை வாங்கித் தர்றதா சொல்லி ஆரணிக்குக் கூட்டிட்டுப்போய், என்னைச் சீரழிச்சிட்டாங்க. ஒரு நாளைக்கு ஆறேழு பேர்கூட வருவாங்க. வலி தாங்க முடியாம அழுதிருக்கேன்... அந்த நரகத்துல இருந்து தப்பிக்க முடியாம, ‘செத்துப் போயிடலாமா’னுகூட நினைச்சிருக்கேன். ஆனா, அதுக்கும் என்னை விடலை” என்று கதறுகிறார் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

விபசாரக் கும்பலிடம் சிக்கிய கவிதாவுக்கு 15 வயதே ஆகிறது. தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர் விவரிக்க விவரிக்க, நமக்கு நெஞ்சம் பதைபதைத்தது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குக் கவிதாவுடன் சென்ற அவருடைய தாய் ராணி, ‘மயக்க ஊசி போட்டு என் மகளைச் சீரழித்துவிட்டார்கள்’ என்று புகார் மனு அளித்தார். புகாரை விசாரிக்குமாறு கமிஷனர் உத்தரவிட்டதையடுத்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகா விசாரணையைத் தொடங்கினார். இரண்டாவது நாளே, ஆரணியைச் சேர்ந்த சுரேஷ், சித்ரா, கோட்டீஸ்வரி ஆகிய மூவரைக் கைதுசெய்தனர். ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயப்பிரகாஷ், மருத்துவமனை பணியாளர் பாண்டியன் ஆகியோரையும் சென்னைக்கு வரவழைத்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு, டாக்டர் ஜெயப்பிரகாஷின் பெயர், முதல் தகவல் அறிக்கையில் 4-வது பெயராகச் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை... ஜெயப்பிரகாஷும் பாண்டியனும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

உண்மையைக் கண்டறிய களமிறங்கிய நாம், சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு முதலில் சென்றோம். அங்கு, ஒரு பூட்டிய கடையின் வாசல்தான் ராணியின் வசிப்பிடம். அவருக்கு அங்குள்ள ஒரு பொதுத்துறை வங்கியின் கழிப்பறை மற்றும் கடைகளைச் சுத்தம் செய்யும் பணி. கூலித் தொழிலாளியான கணவர் இறந்துவிட்டதால், தனி மனுஷியாகத் தன் இரு மகள்களை வளர்க்கப் போராடிவரும் நிலையில், இப்படியொரு துயரத்தைச் சந்திக்க வேண்டியதாகிவிட்டது.

“எனக்கு எழுதப்படிக்கத் தெரியாதுங்க. நிறைய வெள்ளை பேப்பர்கள்ல போலீஸ்காரங்க கையெழுத்து வாங்குனாங்க. ‘எதுக்கு’னு கேட்டதுக்குப் பதில் சொல்லாம மிரட்டினாங்க” என்றார் ராணி. இந்தச் சம்பவத்துக்குப்பிறகு, ‘கழிப்பறையைச் சுத்தம்செய்ய வரவேண்டாம்’ என்று வங்கியில் சொல்லிவிட்டார்களாம்.

இன்ஸ்பெக்டர் மல்லிகாவைத் தொடர்புகொண்டோம். அவர், நம்மிடம் பேசுவதைத் தொடர்ந்து தவிர்த்தார். உதவி கமிஷனர் கமீல் பாஷாவிடம் பேசியபோது, “மூன்று பேரைக் கைதுசெய்துள்ளோம். விசாரணையில், டாக்டர் ஜெயப்பிரகாஷ் குற்றவாளி இல்லை என்பது தெரிய வந்தது. அவரை விசாரித்து அனுப்பிவிட்டோம். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம்’’ என்றார்.

அடுத்ததாக, ஆரணிக்குச் சென்றோம். அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சில ஊழியர்களிடம் பேசினோம். “டாக்டர் ஜெயப்பிரகாஷ் மயக்க மருந்தியல் நிபுணர். இங்கு 15 வருஷங்களா இருக்கார். பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே கிடப்பார். கூடவே சுரேஷும் இருப்பார். டாக்டருக்கும் சுரேஷுக்கும் என்ன தொடர்புன்னே தெரியலை. ஆஸ்பத்திரி வாசல்ல ரெண்டு ஆம்புலன்ஸ் நிக்கிறதைப் பார்த்திருப்பீங்க. அந்த ரெண்டும், சுரேஷுடையதுதான். இந்த ஆஸ்பத்திரியில இருந்து பிரேதங்களை ஏத்திட்டுப்போறதுக்கு இந்த ஆம்புலன்ஸ்களைத் தான் அதிகமா பயன்படுத்துவாங்க. சுரேஷைக் கைது செய்தபிறகு, டாக்டரும் பாண்டியனும் சென்னைக்கு போலீஸ் விசாரணைக்குப் போயிட்டு வந்தாங்க. அதுக்கப்புறம் பாண்டியனைச் செங்கம் ஆஸ்பத்திரிக்கு டிரான்ஸ்ஃபர் போட்டிருக்காங்க” என்றனர்.

மருத்துவமனை வாசலில் நின்றுகொண்டு, டாக்டர் ஜெயப்பிரகாஷின் செல்போனுக்குத் தொடர்புகொண்டோம். “சிறுமி கேஸ் சம்பந்தமா உங்ககிட்ட பேசணும். உங்க மருத்துவமனை வாசலில்தான் நிற்கிறோம்” என்று நாம் சொன்னதும், “அப்படியா? எங்க இருக்கீங்க... சரி... சரி... சொல்லுங்க...” என்று பேச்சை இழுத்தபடியே வேறொரு போனில் யாரிடமோ அவர் பேசுவது தெரிந்தது. சில நிமிடங்களில் நான்கைந்து ஆசாமிகள் நம்மைச் சூழ்ந்தனர். அவர்களிடமிருந்து லாகவமாகத் தப்பித்து பிரதான சாலைக்கு வந்தோம். அதுவரை நம்மிடம் பேசாமல் லைனிலேயே இருந்தார் டாக்டர் ஜெயப்பிரகாஷ். நிலைமை சீரியஸாவதை உணர்ந்து உடனே சென்னைக்குப் புறப்பட்டோம்.

சென்னைக்கு வந்து ராணியையும் சிறுமி கவிதாவையும் சந்தித்தோம். தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீருடன் விவரித்தார், கவிதா.

“சித்ரா, எங்களுக்குச் சொந்தக்காரங்க. ‘ஆரணியில ஒரு துணிக்கடையில வேலைக்குச் சேர்த்துவிடுறேன்’னு சொல்லி மூணு மாசத்துக்கு முன்னால, என்னைக் கூட்டிட்டுப்போனாங்க. சொன்னமாதிரி துணிக்கடையில சேர்த்து விட்டாங்க. சித்ரா வீட்ல தங்கியிருந்து வேலைக்குப் போனேன். சித்ராவோட கணவர் லாரி டிரைவர். அவர் சரியாக வீட்டில் இருக்கறதில்லை. அந்த வீட்டுக்கு சுரேஷ் அடிக்கடி வருவாரு. அவருக்கும் சித்ராவுக்கும் நெருக்கம்.

ஒருநாள் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தப்போ, ஒரு ஆளும் ஒரு பொம்பளையும் அந்த வீட்டுல தப்பு செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. பார்த்து அதிர்ச்சியா யிட்டேன். அதுக்கப்புறம், அந்த வீட்டுல அடிக்கடி அதுமாதிரி காட்சி நடக்கும். ஒரு நாள் நான் கடையில இருந்தேன். திடீர்னு சுரேஷ் எனக்கு போன் செஞ்சு, ‘வயித்த வலிக்குதுனு சொல்லிட்டு வீட்டுக்கு வா’ன்னு அவசரமா கூப்பிட்டாரு. ஏதோ பிரச்னைன்னு நானும் வீட்டுக்குப் போனேன். வீட்டுக்குள் வெச்சு கதவைச் சாத்திட்டு, என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டாரு. ‘என்னை விட்டுருங்க’னு சொல்லிக் கதறினேன். அவர் வலுக்கட்டாயமா என்னைக் கெடுத்தார். என்னால தப்பிக்க முடியலை. அதுக்கப்புறம் அந்தக் கொடுமை தினமும் நடக்க ஆரம்பிச்சது. யார்கிட்ட சொல்றதுன்னே எனக்குத் தெரியலை. வலி தாங்காம கதறினா கண்மூடித்தனமா அடிப்பாங்க. என்னை அதுக்குப் பிறகு வெளியில விடலை. சித்ராவும் சுரேஷும் அவங்க கண்காணிப்புலேயே என்னை வெச்சிருந்தாங்க.

அப்புறம் வீட்டுக்குப் பல பேர் வர ஆரம்பிச்சாங்க. என்கிட்ட தப்பா நடந்துக்குவாங்க. அப்போ, என் கையில ஊசி குத்துவாங்க. நான் மயக்கமாகிடுவேன். ஒரு தடவை நான் அரை மயக்கமா இருக்கும்போது, சுரேஷ் யாருக்கோ போன் பண்ணி, ‘ஜே.பி சார் (ஜெயப்பிரகாஷ்), அந்தப் பொண்ணுக்கு ப்ளீடிங் அதிகமாயிருச்சு. மயக்கமா இருக்குறா... என்ன செய்யட்டும்?’னு கேட்டார். டாக்டர் என்ன சொன்னார்னு தெரியலை. உடனே சுரேஷ், என் கையில ஊசியைக் குத்தி குளுக்கோஸ் ஏத்தினார். அப்புறம் மயக்கமாயிட்டதால, அதுக்குமேல என்ன நடந்துச்சுனு தெரியலை.

சித்ரா வீட்டுக்கு யாராவது சொந்தக்காரங்க வந்துட்டா, பக்கத்துத் தெருவுல இருக்குற கோட்டீஸ்வரி வீட்டுல என்னைத் தங்க வெச்சிருவாங்க. அங்கேயும் ஆளுங்க வந்து, என்னை ‘சித்ரவதை’ செய்வாங்க. ஒரு நாள் மயக்கம் தெளிஞ்சு எந்திருச்சப்போ, உடம்பெல்லாம் அடிச்சுப் போட்ட மாதிரி வலிச்சது. ‘யார் யாரெல்லாம் வந்துட்டுப்போனாங்க தெரியுமா? ரெண்டு டாக்டருங்க வந்தாங்க’னு சித்ரா சொல்லிச்சு.

அங்கேயிருந்து எப்படித் தப்பிக்கிறதுனு பாத்துக்கிட்டே இருந்தேன். சித்ராவோட அண்ணன் குமார் ரொம்ப நல்லவரு. அவர், விழுப்புரத்துல இருக்கார். அவரோட செல்போன் நம்பர் கெடச்சது. அவருக்கு போன் பண்ணி எல்லாத்தையும் சொன்னேன். அவர்தான் என்னைக் காப்பாத்துனார். சென்னைக்கு வந்து, வக்கீல் சார் மூலமா போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்குப் போய் புகார் கொடுத்தோம். போலீஸ், என்னை விசாரிச்சாங்க. எல்லாத்தையும் சொன்னேன்.

டாக்டர் ஜெயப்பிரகாஷும், பாண்டியனும் போலீஸ் ஸ்டேஷன்ல என் கால்ல விழுந்து அழுதாங்க. ‘புகாரை வாபஸ் வாங்கு’னு கெஞ்சினாங்க. அப்புறம், இன்ஸ்பெக்டர் மேடத்தோட கால்ல விழுந்து அழுதாங்க. அவங்க ரெண்டு பேரையும், இன்ஸ்பெக்டர் மேடம் ரூமுக்குள்ள கூட்டிப் போனாங்க. கொஞ்ச நேரத்துல, மூணு பேரும் வெளியே வந்தாங்க. இன்ஸ்பெக்டர் மேடம் திடீர்னு, ‘ஏண்டி, டாக்டர்கிட்ட பணம் பிடுங்கத்தான் அம்மாவும் பொண்ணும் வேஷம் போடுறீங்களா’னு கேட்டு, என் கன்னத்துல பளார்னு அறைஞ்சாங்க. அப்புறம், நாலஞ்சு வெள்ளைப் பேப்பர்ல கையெழுத்துப் போடச் சொல்லி வாங்கிட்டு, ‘கேஸ் முடியற வரைக்கும் கோயம்பேடு மார்க்கெட்லயே இருக்கணும்’னு மிரட்டி அனுப்பினாங்க. ஆனா, இங்க இருக்குறதுக்கு எனக்குப் பயமா இருக்கு” என்று அழுதார் சிறுமி கவிதா.

கவிதாவுக்குச் சட்ட உதவிகள் செய்துவரும் வழக்கறிஞர் செந்திலிடம் பேசினோம். “இந்த விஷயத்தில் மறுவிசாரணை கேட்டுள்ளோம். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. கவிதாவுக்கு நீதி கேட்பதற்காக களமிறங்கியதால், நான் டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டினேன் என்று அவதூறாகப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், அந்த டாக்டர் 23 முறை எனக்குப் போன் செய்து பேசினார். குற்றமற்றவர் என்றால், என்னிடம் இத்தனை முறை ஏன் பேச வேண்டும்? என்னிடம் உள்ள ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வேன். அப்போது, அனைத்து உண்மைகளும் வெளியே வரும்” என்றார்.

சுரேஷ், சித்ரா, கோட்டீஸ்வரி ஆகிய மூவரும் தற்போது சிறையில் உள்ளனர். கவிதாவைப் போல ஏராளமான சிறுமிகளை இந்தக் கும்பல் சீரழித் துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அதுபற்றியெல்லாம் விசாரிக்க போலீஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

- ந.பா.சேதுராமன், கா.முரளி
படம்: எம்.தினகரன்