Published:Updated:

மதுவுக்கு தமிழகம் அடிமை... மதுவருவாய்க்கு தமிழக அரசு அடிமை!

மதுவுக்கு தமிழகம் அடிமை... மதுவருவாய்க்கு தமிழக அரசு அடிமை!
பிரீமியம் ஸ்டோரி
மதுவுக்கு தமிழகம் அடிமை... மதுவருவாய்க்கு தமிழக அரசு அடிமை!

மதுவுக்கு தமிழகம் அடிமை... மதுவருவாய்க்கு தமிழக அரசு அடிமை!

மதுவுக்கு தமிழகம் அடிமை... மதுவருவாய்க்கு தமிழக அரசு அடிமை!

மதுவுக்கு தமிழகம் அடிமை... மதுவருவாய்க்கு தமிழக அரசு அடிமை!

Published:Updated:
மதுவுக்கு தமிழகம் அடிமை... மதுவருவாய்க்கு தமிழக அரசு அடிமை!
பிரீமியம் ஸ்டோரி
மதுவுக்கு தமிழகம் அடிமை... மதுவருவாய்க்கு தமிழக அரசு அடிமை!
மதுவுக்கு தமிழகம் அடிமை... மதுவருவாய்க்கு தமிழக அரசு அடிமை!

மிழகமே டெங்கு பீதியில் தவித்த நேரத்தில் அவசரமாக தமிழக அமைச்சரவை கூடியது. ‘மக்களின் அவதி பற்றி விவாதிக்கப் போகிறார்கள்’ என நினைத்தால், மதுபானங்களின் விலையை உயர்த்தியிருக்கிறார்கள். ஒரு பாட்டில் விலை 12 ரூபாய் முதல் 48 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கூடுதலாக சுமார் 5,320 கோடி ரூபாய் அரசுக்கு நேரடியாக வருமானம் கிடைக்கும்.

மதுவுக்கு தமிழகம் அடிமை... மதுவருவாய்க்கு தமிழக அரசு அடிமை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகத்தில் மொத்தம் 6,823 டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்தன. 2016-ல், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மது விற்பனைக்கு எதிரான போராட்டங்களைப் பொதுமக்கள் நடத்தினர். மக்கள் எழுச்சியைப் பார்த்து மிரண்டுபோன அன்றைய முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், ‘டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும்’ என்று அறிவித்தார். மீண்டும் முதல்வர் ஆனவுடன், 2016 மே 23-ம் தேதி, முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடுவதற்கான உத்தரவில் ஜெயலலிதா கையெழுத்திட்டார். எடப்பாடி பழனிசாமி, மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக 2017 பிப்ரவரி 24-ம் தேதி அறிவித்தார்.

மூடித் திறந்த கடைகள்!


இந்த நிலையில், பா.ம.க-வின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் கே.பாலு உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் காரணமாக, இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் 3,321 மதுபானக் கடைகள், 2017 மார்ச் 31-ம் தேதியுடன் மூடப்பட்டன. ஏற்கெனவே மூடப்பட்ட 1,000 கடைகளையும் சேர்த்தால், மொத்தம் 4,321 கடைகள் மூடப்பட்டன. இதனால், தமிழகத்தில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை 2,502 ஆகக் குறைந்து, டாஸ்மாக் வருமானமும் குறையத் தொடங்கியது. எனவே, மூடப்பட்ட கடைகளை மாற்று இடங்களில் திறக்கும் முயற்சிகளை டாஸ்மாக் மேற்கொண்டது. மாவட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமச் சாலைகளில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு மாநில அரசு, அரசாணை பிறப்பித்தது. உடனடியாக இப்படி 1,190 கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிகளில் இறங்கி, மதுக்கடைகளை அடித்து நொறுக்கினர்.

இந்த நிலையில் ‘மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைகளுக்குள் மாநில மற்றும் மாவட்டச் சாலைகள் இருந்தால், அந்தப் பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்கலாம்’ என்று நீதிமன்றம் கூறியது. இதைச் சாக்காக வைத்துக்கொண்டுதான் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்தார்கள். இந்த நிலையில்தான், மதுபானங்களின் விலையை திடீரெனத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

மதுவுக்கு தமிழகம் அடிமை... மதுவருவாய்க்கு தமிழக அரசு அடிமை!

விலை உயர்வின் பின்னணி!

மதுபான நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் பேசினோம். ‘‘ஒரு பாட்டிலுக்கு இவ்வளவு ரூபாய் என்று எங்களுக்கு அரசு தருகிறது. மூலப்பொருள்கள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி வரி எனப் பல்வேறு பிரச்னைகளை நாங்கள் சந்திக்க வேண்டிருக்கிறது. ஆனால், அரசு தரும் ரூபாயை இதுவரை உயர்த்தவில்லை. மதுபான விலையை உயர்த்தியிருக்கும் அரசாங்கம், அதில் எங்களுக்கு எவ்வளவு தரப்போகிறது என்று இதுவரை சொல்லவில்லை. உயர்த்திக்கொடுப்பார்கள் என்று காத்திருக்கிறோம். ஏனென்றால், தமிழகத்தில் 11 மதுபான நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் இரண்டு நிறுவனங்கள்

மதுவுக்கு தமிழகம் அடிமை... மதுவருவாய்க்கு தமிழக அரசு அடிமை!

நிதிச்சுமையால் தத்தளிக்கின்றன. இன்னொரு நிறுவனம் விற்கப்பட்டுவிட்டது. அதை வாங்கியது இன்னொரு மதுபான நிறுவனம். மற்றவர்களும் நிம்மதியாக தொழில் நடத்தமுடியவில்லை. எங்கள் தொழிற்சாலைகளில் பல ஆயிரம் பேர் வேலைசெய்கிறார்கள். எங்களின் பிரச்னைகளை, சங்கம் சார்பில் பலமுறை அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றுள்ளோம். தீர்வு கிடைக்கும் என்று காத்திருக்கிறோம்’’ என்றார்.

சி.ஐ.டி.யூ டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் திருச்செல்வத்திடம் பேசினோம். “டாஸ்மாக் மது விலைகளை, 2009-ல் தி.மு.க ஆட்சியின்போது உயர்த்தினர். பிறகு, 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விலை உயர்த்தப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்து நவம்பர் மாதத்தில் மீண்டும் விலையை ஏற்றினர். அதன் பிறகு, மூன்று வருடங்கள் கழித்து இப்போது விலையை உயர்த்தியுள்ளனர்.

இந்த விலை உயர்வுக்கு, மது தொழிற்சாலை உரிமையாளர்கள் செய்த லாபிதான் முக்கியக் காரணம். ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியதால், மது உற்பத்தியாளர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள், 18 சதவிகிதம்வரை ஜி.எஸ்.டி வரி செலுத்துகின்றனர். மேலும், மதுபானத் தயாரிப்புக்குத் தேவையான மொலாசஸ் விலை ஆறு மடங்கு அதிகரித்துவிட்டது. இதையெல்லாம் காரணம் காட்டி அவர்கள் விலை உயர்வுக்குக் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம், கடந்த மாதம் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியது. அதன் பின்னர்தான், இப்போது மது வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் பயனடையப்போவது அரசாங்கமும், மது ஆலை உரிமையாளர்களும்தான். டாஸ்மாக் கடைகளில் டிகிரி முடித்து, சூப்பர்வைசராக இருப்பவர்களுக்கு 9,500 ரூபாய் சம்பளம் தருகிறார்கள். இதை வைத்து ஒரு குடும்பத்தை நடத்த முடியுமா? டாஸ்மாக் ஊழியர்களின் வேலையை முறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் தர வேண்டும் என்று கேட்கிறோம். அரசு கண்டுகொள்வதே இல்லை” என்றார்.

மதுவுக்கு தமிழகம் அடிமை... மதுவருவாய்க்கு தமிழக அரசு அடிமை!

தீர்ப்புக்கு மாறான செயல்!

 மதுக்கடைகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் கே.பாலுவிடம் பேசினோம். “செப்டம்பர் 15-ம் தேதி, சண்டிகர் உள்ளாட்சி அமைப்பு தொடர்ந்த வழக்கில், ‘மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குள் வரும் சாலைகளில் கடைகளைத் திறக்கலாம்’ என்று சொன்னார்கள். இதை, ‘தமிழக அரசுக்கு’ என்று அவர்கள் சொல்லவில்லை. ஆனால், தமிழக அரசு இதையே தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு சுமார் 2,000 கடைகளை மீண்டும் திறந்துள்ளது. இது தீர்ப்புக்கு மாறான செயல். எனவே, தமிழக அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டேன். அதற்குத் தமிழக அரசு அளித்த பதிலில், ‘நாங்கள் அவ்வாறு திறக்கவில்லை’ என்று சொல்லியுள்ளனர். பொய் சொல்ல இவர்கள் தயங்குவதில்லை.

பொதுவாக, மது அல்லது சிகரெட் விலை அதிகரித்தால் வாங்குவது குறையும். தமிழகத்தைப் பொறுத்தவரை, பலர் மதுவுக்கு அடிமைகளாகிவிட்டனர். விலை அதிகரித்தாலும், மது வாங்குவதை அவர்கள் குறைக்கவோ, நிறுத்தவோ மாட்டார்கள். முன்பு, வீட்டிலேயே பணத்தைத் திருடி பலர் குடித்தார்கள். விலையை உயர்த்தியதால், இனிமேல் வழிப்பறி செய்து அவர்கள் குடித்தாலும் ஆச்சரியமில்லை.

அரசுக்கு வருமானம் இல்லையென்றால், பேசாமல் அவர்கள் கஞ்சா விற்கலாம். மது விற்பனையில்தான் ஓர் அரசு இயங்க வேண்டும் என்ற நிலை இருக்கக் கூடாது. கிரானைட், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தினால், அரசின் வருமானம் அதிகரிக்கும். இதற்கு இந்த அரசு தயாராக இல்லை” என்றார் அவர் வேதனையோடு.

மதுவுக்குத் தமிழகத்தை அடிமையாக்கிவிட்ட அரசு, மது வருவாய்க்கு அடிமையாகிக் கிடக்கிறது.

- கே.பாலசுப்பிரமணி
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ப.சரவணகுமார், ஆர்.எம்.முத்துராஜ்

மதுவுக்கு தமிழகம் அடிமை... மதுவருவாய்க்கு தமிழக அரசு அடிமை!

வருமானம் குறையவில்லை!

‘மதுவிலக்குப் படிப்படியாக அமல்படுத்தப்படும்’ என அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, 500 டாஸ்மாக் கடைகளை ஜெயலலிதா மூடினார். அதன்பின் எடப்பாடி பழனிசாமி, தன் பங்குக்கு 500 கடைகளை மூடினார். இப்படி ஆயிரம் கடைகளை மூடியதால் டாஸ்மாக் நிறுவனத்துக்குக் கணிசமாக வருமானம் குறைந்திருக்க வேண்டும்தானே?

ஆனால், அதுதான் இல்லை. கடந்த 2015-16 நிதியாண்டில் டாஸ்மாக்கின் வருமானம் ரூ.25,845 கோடி. ஆயிரம் கடைகளை மூடியபிறகு 2016-17 நிதியாண்டில் வருமானம் ரூ.26,995 கோடி. கடைகளை மூடியும் வருமானம் ரூ.1,150 கோடி உயர்ந்துள்ளது. ‘‘கடைகள் மூடப்பட்டாலும்கூட, பார்களைக் குத்தகைக்கு எடுத்த நபர்களின் ஆதரவுடன் 24 மணி நேரமும் மறைமுகமாக மது விற்பனை நடைபெற்றது. சட்டவிரோதமாக, பார்களின் உரிமையாளர்களுக்குப் பெட்டி பெட்டியாக மதுபானங்களைக் கொடுத்துவைத்து இப்படி விற்றார்கள்’’ எனக் குற்றம் சாட்டுகிறார்கள், மது எதிர்ப்புப் போராளிகள்.

‘நெடுஞ்சாலை மதுபானக் கடைகளை மூட வேண்டும்’ என்ற நீதிமன்ற உத்தரவை ஏற்று 2017 மார்ச்சில், 3,321 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இவற்றில் 1,190 கடைகளைச் சில வாரங்களிலேயே வேறு இடங்களில் திறந்துவிட்டார்கள். இதனால் வருமானத்தில் மாற்றம் நிகழ்ந்ததா என்பது இனிமேல்தான் தெரியும். 

மிடாஸுக்கு ‘கட்டிங்’ போட்ட எடப்பாடி!

.தி.மு.க ஆட்சியில், மதுபான ஆலைகள் மத்தியில் ராஜநடை போட்டு வந்தது மிடாஸ் நிறுவனம். தமிழகத்தில் மொத்தமுள்ள 11 நிறுவனங்களில், மிடாஸ் நிறுவனத்தில்தான் அதிக மதுபான அயிட்டங்களைக் கொள்முதல் செய்வார்கள். அவற்றையே டாஸ்மாக் கடைகளில் விற்கச் சொல்லி பிரஷர் கொடுப்பார்கள். விருப்பமே இல்லாவிட்டாலும், மிடாஸ் அயிட்டத்தை வேறு வழியில்லாமல் வாங்கிக் குடித்து வந்தனர் பலர். டாஸ்மாக் அதிகாரிகள் மத்தியில் மிடாஸ் நிறுவனத்துக்கு எப்போதும் ராயல் சல்யூட் கிடைக்கும். காரணம்... சசிகலாவின் குடும்பத்தினர்தான் இதன் நிர்வாகத்தைக் கவனித்தனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்வரானபிறகு, சசிகலா குடும்பத்துக்கும் அரசுக்கும் உரசல் வந்தது. உடனே, மிடாஸுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார் எடப்பாடி. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையைக் கவனிக்கும் அமைச்சர் தங்கமணியை அழைத்து, ‘ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எவ்வளவு மதுபான பாட்டில்கள் மிடாஸிடம் வாங்கப்பட்டன’ என்ற விவரங்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ‘‘குடிபிரியர்கள் எந்த அயிட்டத்தை விரும்பிக் குடிக்கிறார்களோ, அதற்கே அதிக ஆர்டர் கொடுங்கள். இந்த நிறுவனத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்புச் சலுகைகள் எதையும் இனி தரவேண்டாம். இதனால், மற்ற நிறுவனத்தினர் பாதிக்கப்படுகிறார்கள். மற்ற நிறுவனங்களைப் போலவே மிடாஸையும் நடத்துங்கள்’’ என்று கறாராகச் சொல்லிவிட்டராம்.

இந்தத் தகவல் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, சுமார் 30 லட்சம் மதுபான பெட்டிகளைக் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மிடாஸில் வாங்கினர். இதைப் படிப்படியாகக் குறைத்து இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 23 லட்சத்து 70 ஆயிரமாகக் குறைத்துவிட்டனர். தொடர்ந்து படிப்படியாக இந்த எண்ணிக்கையும் குறையும் என்று அதிகாரிகள் பேசிக்கொள்கிறார்கள்.

அதே நேரத்தில், இன்னொரு நிறுவனப் பிரமுகருக்கு டாஸ்மாக் அதிகாரிகள் மத்தியில் திடீரென ஏக மரியாதை. இதன் பின்னணியும் மர்மமாக இருக்கிறது.

- ஆர்.பி