Published:Updated:

“மூட நினைக்கும் மத்திய அரசு... வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!”

“மூட நினைக்கும் மத்திய அரசு... வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!”
பிரீமியம் ஸ்டோரி
“மூட நினைக்கும் மத்திய அரசு... வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!”

தூத்துக்குடி அனல்மின் நிலையம்...

“மூட நினைக்கும் மத்திய அரசு... வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!”

தூத்துக்குடி அனல்மின் நிலையம்...

Published:Updated:
“மூட நினைக்கும் மத்திய அரசு... வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!”
பிரீமியம் ஸ்டோரி
“மூட நினைக்கும் மத்திய அரசு... வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!”

ந்திய அளவில் மின் உற்பத்தியில் சிறந்து விளங்கியதற்காக 30-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றது தூத்துக்குடி அனல்மின் நிலையம்.  உற்பத்தி செய்யும் ஐந்து யூனிட்கள் இதில் உள்ளன. அவை, தலா 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடியவை. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் சொந்தமான இந்த அனல்மின் நிலையத்தை, தனியாருக்குத் தாரை வார்க்க மத்திய அரசு முயற்சி செய்வதாகவும், இதற்குத் தமிழக அரசு துணை போவதாகவும் அனல் கக்குகிறது தூத்துக்குடி மாவட்டம். ‘அனல்மின் நிலையத்தை மூடிவிடாமல் அரசு தொடர்ந்து இயக்க வேண்டும்’ என தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கீதாஜீவன் போராட்டம் நடத்தியுள்ளார்.

“மூட நினைக்கும் மத்திய அரசு... வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!”
“மூட நினைக்கும் மத்திய அரசு... வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கீதாஜீவனிடம் பேசினோம். ‘‘அனல்மின் நிலையத்தில் மூன்று யூனிட்களை இரண்டு மாதங்களாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். முதலில் ‘தண்ணீர் இல்லை’ என்றார்கள். இப்போது தண்ணீர் வந்தபிறகு ‘நிலக்கரி தட்டுப்பாடு’ என்று காரணம் சொல்கிறார்கள். பழைமையான இந்த மின் நிலையங்களைச் சீரமைக்காததால், ஒவ்வொரு யூனிட்டையும் நிரந்தரமாக மூடுவதற்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தேதி அறிவித்துள்ளது. இதைக் கண்டித்து நான் அறிக்கைவிட்ட பிறகுதான், யூனிட் சீரமைப்புச் சம்பந்தமான ஃபைலை மின்துறை சேர்மனுக்கு அனுப்பினார்கள். சீரமைப்பில் இந்த அரசு ஆர்வம் காட்டவில்லை.  தனியார் அனல்மின் நிலையங்களில் மின்சாரம் வாங்கினால் கமிஷன் கிடைக்கும் என்பதுதான் அதற்குக் காரணம்’’ என்றார்.

“மூட நினைக்கும் மத்திய அரசு... வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!”

ஆளும் அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன், ‘‘அனல்மின் நிலையத்திலுள்ள சில யூனிட்களின் ஆயுள்காலம் முடிந்தும் தொடர்ந்து இயங்கிவருகின்றன. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இதன் கழிவுச் சாம்பலிலுள்ள மாசுக்களின் அளவைக் குறைக்கச் சொல்லியுள்ளது. அதன்படி, யூனிட்களைச் சீரமைப்பதற்காக அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகமாகும்போது இங்கு மின் உற்பத்தியை நிறுத்திவைப்பது வழக்கம். சுயவிளம்பரத்துக்காகவும், தி.மு.க-வினருக்கு கான்ட்ராக்ட் கிடைக்காத ஆதங்கத்தாலும் பொய் செய்திகளை கீதாஜீவன் பரப்பிவருகிறார். விரைவில் யூனிட்கள் சீரமைக்கப்படும். அனல்மின் நிலையம் தொடர்ந்து இயங்கும்’’ என்றார்.

தூத்துக்குடி அனல்மின் நிலைய தொழிலாளர் முன்னேற்றச் சங்க (தி.மு.க) செயலாளர் பிரான்சிஸிடம் பேசினோம். ‘‘இதிலுள்ள ஐந்து யூனிட்டுகள் மூலம், நாள் ஒன்றுக்கு 1,050 மெகா வாட் மின் உற்பத்தி செய்யலாம். ஆனால், அதைவிடக் கூடுதலாக 50 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருக்கும் பெரிய பொதுத்துறை நிறுவனம் இதுதான். பழமையான அனல்மின் நிலையங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதி வகுத்துள்ளது. இதன்படி, 2003-ம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட அனல்மின் நிலையங்களில் புகையோடு வெளிவரும் சாம்பலில் உள்ள மாசு 100 mg/Nm3 என்ற அளவைவிடக் குறைவாக இருக்க வேண்டும். இதைத் தாண்டும் அனல்மின் நிலையங்களை மூடிவிட வேண்டும்.

இந்த விதிப்படி, இங்குள்ள ஐந்து யூனிட்களையும் மூடிவிட தேதியையும் அறிவித்துவிட்டார்கள். இவற்றிலுள்ள மாசுக்கட்டுப்பாடு அமைப்பைச் சீரமைக்கும் பணியை இந்த அனல்மின் நிலையத்தைத் துவக்கிய பெல் (BHEL) நிறுவனம்தான் செய்ய வேண்டும். அப்படி சீரமைக்க அவர்களுக்கு ஓராண்டு தேவை. ஆனால், இதற்கான டெண்டரை இறுதி செய்யாமல் வைத்துள்ளனர். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த தேதிப்படி, முதல் யூனிட்டை 2018, நவம்பர் 31-ம் தேதி மூட வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த மாதத்துக்குள்  பெல் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தால் மட்டும்தான், ஓராண்டுக்குள் சீரமைத்து,  முதல் யூனிட்டை மூடாமல் காப்பாற்ற முடியும். இதேபோல, எல்லா யூனிட்களுக்கும் கெடு உள்ளது. துறை அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என மொத்தம் 5,000 பேர் இதை நம்பியிருக்கிறார்கள். ஒவ்வொரு யூனிட்டையும் மூட மூட ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள். தமிழகமும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும்’’ என்றார்.

“மூட நினைக்கும் மத்திய அரசு... வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!”

அனல்மின் நிலைய முதன்மைப் பொறியாளர் நடராஜனிடம் பேசினோம். ‘‘ஐந்து யூனிட்களும் இயங்கும் நிலையில்தான் உள்ளன. வடமாநிலங்களில் ஏற்பட்ட மழையால் நிலக்கரி வரத்து குறைவாக இருக்கிறது. அதனால், மின் உற்பத்தி குறைவாக நடக்கிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு என்பது தூத்துக்குடிக்கானது மட்டுமல்ல. 2003-ம் ஆண்டுக்குமுன் தொடங்கப்பட்ட இந்தியாவிலுள்ள எல்லா அனல்மின் நிலையங்களுக்குமானது. சீரமைப்பதற் கான ஃபைலை சென்னைக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்ததும் சீரமைப்புப் பணிகள் தொடங்கிவிடும்’’ என்றார்.

விழிப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இது. இல்லாவிட்டால், இருளே சொந்தமாகிவிடும்.

- இ.கார்த்திகேயன்
படங்கள்: ஏ.சிதம்பரம்