Published:Updated:

“தேங்காய் விலை இன்னும் எகிறும்!”

“தேங்காய் விலை இன்னும் எகிறும்!”
பிரீமியம் ஸ்டோரி
“தேங்காய் விலை இன்னும் எகிறும்!”

“தேங்காய் விலை இன்னும் எகிறும்!”

“தேங்காய் விலை இன்னும் எகிறும்!”

“தேங்காய் விலை இன்னும் எகிறும்!”

Published:Updated:
“தேங்காய் விலை இன்னும் எகிறும்!”
பிரீமியம் ஸ்டோரி
“தேங்காய் விலை இன்னும் எகிறும்!”

மையல் மட்டுமின்றி, சாமி வழிபாடும் நம் ஊரில் தேங்காய் இல்லாமல் முழுமை பெறாது. ஆனால், தேங்காய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்திருக்க... தீபாவளி நோன்புக்குத் தேங்காய் வாங்கும் பலரும் தவித்துப் போகிறார்கள். ஹோட்டல்களில் தேங்காய் சட்னியை அளந்து வைக்கிறார்கள். திருமணத் தாம்பூலங்களில் தேங்காய்க்குப் பதிலாக சாத்துக்குடி இடம்பெறுகிறது. ஏன் இந்த விலையேற்றம்?

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்காய் விளைகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் விளைச்சல் அதிகம். கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக நிலவிய வறட்சி, தென்னை மரங்களை அதிகமாகக் காவு வாங்கியது. வறட்சியால் அதிகப்படியான தோப்புகள் அழிக்கப்பட்டன. இன்னும் சில தோப்புகள் அழியும் நிலையில் இருக்கின்றன. மொத்தமாகத் தமிழ்நாட்டில் 50 சதவிகித தென்னை மரங்கள் இந்த ஆண்டு காய்ப்புக்கு வரவில்லை. அதன் காரணமாக, சமீபகாலமாகக் கணிசமாக உயர்ந்து வந்த தேங்காய் விலை, இப்போது உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஒரு தேங்காய் 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றத்துக்கான காரணம் குறித்து தென்னை விவசாயிகள், வியாபாரிகள் சங்கத்தினரிடம் பேசினோம்.

“தேங்காய் விலை இன்னும் எகிறும்!”

‘‘இன்னும் சில நாள்களில் ஒரு தேங்காய் விலை 50 ரூபாயைத் தாண்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்கிறார், உடுமலைப்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி நித்தியானந்தம். “தென்னந்தோப்பில் 450 முதல் 500 கிராம் வரைக்கும் உள்ள தேங்காய்கள் மட்டும்தான் சமையலுக்குப் போகும். மீதமுள்ள காய்கள் கொப்பரைக்குத்தான் போகும். கடந்த மூன்றாண்டுகளாகவே போதிய மழை இல்லை. அதனால், தென்னை சாகுபடி பரப்பு குறைந்துகொண்டே வந்தது. கொங்கு மண்டலத்தில் சுமார் 10 சதவிகித தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் முற்றிலுமாக அழிந்துவிட்டன. 40 சதவிகித மரங்கள் இப்போது பெய்த தென்மேற்குப் பருவமழையில் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்துள்ளன. ஒரு தென்னைப் பாளையில் தேங்காய் வருவதற்கு, குறைந்தது 10 மாதங்களாகும். அதனால், 40 சதவிகித மரங்களில் இப்போதைக்குக் காய் வரும் வாய்ப்புகள் இல்லை. விலை ஏறியதற்கு இது முக்கியமான காரணம்.

உள்ளூர் வியாபாரிகள், தோப்புக்கு வந்து தேங்காய்களை வாங்கிக்கொண்டு போய் பெரிய வியாபாரிகளிடம் விற்பனை செய்வார்கள். அந்தப் பெரிய வியாபாரி, கமிஷன் ஏஜென்ட்களுக்கு அனுப்புவார். கமிஷன் ஏஜென்ட்கள்தான் அந்தந்த ஊர் சிறு வியாபாரிகளுக்குத் தேங்காயை அனுப்புவார். அவர்களிடமிருந்துதான் மக்கள் கைகளுக்கு வருகிறது. விவசாயியான எங்களிடம் தேங்காய் எடுக்கும்போது 7 ரூபாய், 10 ரூபாய், 15 ரூபாய் எனத் தரத்தைப் பொறுத்து விலை தருகிறார்கள். வியாபாரிகளின் கைகளுக்குச் சென்று, அங்கிருந்து விற்பனைக்குப் போகும்போதுதான் விலையேறி விடுகிறது. இந்த இடைத்தரகர்களால்தான் அதிக விலையேற்றம் இருக்கிறது. இதற்குப் போக்குவரத்து, ஆள்கூலி எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தேங்காய் விலை இன்னும் எகிறும்!”

ஆனால், இந்த விலையேற்றத்துக்கு தேங்காய் சாகுபடி குறைந்ததுதான் முக்கியமான காரணம். இப்போது வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அதுவும் ஏமாற்றினால், அடுத்த வருடமும் இந்த சீசனுக்கு விலை அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், தென்னை விவசாயிகள் கைக்கு இந்த லாபம் நிச்சயமாக வராது. எல்லாம் இடைத்தரகர்களுக்குத்தான்” என்றார்.

“தேங்காய் விலை இன்னும் எகிறும்!”

தேங்காய் விலையேற்றம் குறித்துப் பேசிய கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்கத் துணைத்தலைவர் சுகுமாரன், “கடந்த ஒரு மாதமாகத் தேங்காய் விலை உச்சத்தில்தான் இருக்கிறது. கோயம்பேடு சந்தையில் ஒரு காயின் விலை 30 முதல் 35 வரை வடிவத்துக்கு ஏற்றதுபோல இருக்கும். கோயம்பேடு சந்தையிலிருந்து சில்லறைக் கடைகளுக்கு வரும்போது விலை இன்னும் அதிகமாகிவிடுகிறது. வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு, பொள்ளாச்சி மற்றும் கர்நாடகாவின் மாண்டியாவிலிருந்து தேங்காய் வரும். இந்த ஆண்டு மாண்டியாவிலிருந்து ஒரு தேங்காய் லாரிகூட வரவில்லை. கேரளா, கர்நாடகா என எல்லா மாநிலங்களிலுமே தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. பொள்ளாச்சியிலிருந்தும் தேங்காய் வரத்துக் குறைவாக உள்ளது. இப்போது கும்பகோணம் பகுதியிலிருந்துதான் கொஞ்சம் தேங்காய் வருகிறது. அதனால்தான் விலை 35 ரூபாய் வரை இருக்கிறது. கும்பகோணம் தேங்காய் வருவது குறைந்தால், இன்னும் விலை எகிறும்” என்றார்.

“தேங்காய் விலை இன்னும் எகிறும்!”

சூப்பர் மார்க்கெட்களில் தேங்காயை எடைக்கு விற்கும் பழக்கம் தொடங்கியதிலிருந்து, முற்றாத தேங்காய்கள் விற்பனைக்கு வருவதாக சில வியாபாரிகள் சொல்கிறார்கள். 90 நாள்கள் மரத்தில் இருக்கும் தேங்காய், நன்கு முற்றி நல்ல சுவையோடு இருக்கும். ஆனால், எடை குறைந்துவிடும். 60 நாள்களில் பறிக்கப்படும் தேங்காய் சுவை குறைவாக இருக்கும். ஆனால், நிறைய எடை இருக்கும். எடை அடிப்படையில் விலை என்பதால், இரண்டையும் கலந்து கடைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். அதிக விலை கொடுத்து, சுவையில்லாத தேங்காயை வாங்க வேண்டிய நிலைமை மக்களுக்கு!

இந்த நிலை மாற எத்தனை நாளாகுமோ!

- துரை.நாகராஜன்