Published:Updated:

காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்? - கொலை முயற்சி வழக்கில் துணைவேந்தர்கள்...

காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்? - கொலை முயற்சி வழக்கில் துணைவேந்தர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்? - கொலை முயற்சி வழக்கில் துணைவேந்தர்கள்...

காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்? - கொலை முயற்சி வழக்கில் துணைவேந்தர்கள்...

காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்? - கொலை முயற்சி வழக்கில் துணைவேந்தர்கள்...

காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்? - கொலை முயற்சி வழக்கில் துணைவேந்தர்கள்...

Published:Updated:
காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்? - கொலை முயற்சி வழக்கில் துணைவேந்தர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்? - கொலை முயற்சி வழக்கில் துணைவேந்தர்கள்...

ல்கலைக்கழகங்கள் அரசியல் கழகங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.கொலை முயற்சி வழக்கில் சிக்கிய முன்னாள், இந்நாள் துணைவேந்தர்களைக் காப்பாற்ற நினைக்கிறது அரசு.

 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் சீனிவாசனைக் கொலைசெய்ய முயன்ற வழக்கில், முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் மற்றும் இந்நாள் துணைவேந்தர் செல்லத்துரை ஆகியோர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை, மூன்றரை ஆண்டுகளாக மதுரை மாவட்ட போலீஸ் ஆறப்போட்டிருந்தது. இதை உடனே விசாரித்து அறிக்கை தரும்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை போலீஸார் மிரட்டுவதாகப் புகார் கிளம்பியுள்ளது.

காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்? - கொலை முயற்சி வழக்கில் துணைவேந்தர்கள்...

இதுபற்றி நம்மிடம் பேசிய முன்னாள் பேராசிரியர் சீனிவாசன், ‘‘கல்யாணி மதிவாணன் துணைவேந்தராக இருந்தபோது, பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல், முறைகேடுகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தினோம். 16-05-2014 அன்று, நான் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கல்யாணி மதிவாணன் மற்றும் செல்லத்துரை ஏற்பாடுசெய்த கூலிப்படையால் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளானேன். கூலிப்படையை ஏவிய கல்யாணி மதிவாணன், செல்லத்துரை உள்ளிட்ட குற்றவாளிகளிடம் எந்த விசாரணையும் செய்யவில்லை. எனவே, உயர் நீதிமன்றத்தில் முறையிட்டோம். அதன்பின் விசாரிக்க நியமிக்கப்பட்ட டி.எஸ்.பி சாந்தசொரூபனும், ‘இதுவரை சரியாக விசாரணை செய்யவில்லை’ என நீதிமன்றத்துக்கு அறிக்கை அளித்தார். இந்நிலையில், ‘எஸ்.பி கண்காணிப்பில், ஒரு மூத்த டி.எஸ்.பி இவ்வழக்கை விசாரித்து, ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 அதன்பின், ஒரு எஸ்.ஐ என்னை விசாரிக்க வந்தார். ‘டி.எஸ்.பி லெவலில் உள்ளவர்கள்தான் விசாரிக்க வேண்டும்’ என்ற உயர் நீதிமன்ற உத்தரவைச் சொன்னபிறகு, மதுவிலக்கு டி.எஸ்.பி முருகேஷ் விசாரித்தார். அவருக்கு வழக்குப் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. வழக்கின் மூன்றாவது குற்றவாளியான துணைவேந்தர் செல்லத்துரை, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கை முடிக்க நினைக்கிறார் என்று தெரிகிறது. எனக்காக சாட்சி சொன்ன பேராசிரியர்களிடமும், ‘இந்த வழக்குக்கும் செல்லத்துரைக்கும் சம்பந்தமில்லை என்று எழுதிக்கொடுங்கள்’ என டி.எஸ்.பி முருகேஷ் மிரட்டிவருகிறார். செல்லத்துரையும், பதிவாளர் சின்னையாவும் சாட்சிகளை நேரடியாக மிரட்டிவருகிறார்கள்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்? - கொலை முயற்சி வழக்கில் துணைவேந்தர்கள்...

வழக்கின் முக்கிய சாட்சியான பல்கலைக்கழக ஊடக ஆய்வு மையத்தில் பணியாற்றும் முத்துபாண்டி, ‘‘நான் கொடுத்த வாக்குமூலத்தை வாபஸ்பெறுவதாக எழுதி கையெழுத்திடும்படி துணைவேந்தர் உள்பட பல்கலைக்கழகத்தின் முக்கிய அலுவலர்கள் மிரட்டி வருகிறார்கள்’’ என்றார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், முன்ஜாமீன்கூட வாங்காமல், விசாரணைக்கும் செல்லாமல், அதே காவல் நிலையம் அருகில் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். சாட்சிகளைக் கலைக்கிறார்கள். வழக்கை விரைவாக விசாரிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை சுணக்கம் காட்டுகிறது. சாட்சிகளை மிரட்டி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கை முடிக்கப்பார்க்கிறார்கள். எனவே, சி.பி.சி.ஐ.டி விசாரணை கேட்டு உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்’’ என்றார்.

காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்? - கொலை முயற்சி வழக்கில் துணைவேந்தர்கள்...

துணைவேந்தர் செல்லத்துரையிடம் பேசினோம். ‘‘யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் இந்தப் பல்கலைக்கழகத்தை உலகத்தரத்துக்கு உயர்த்துவதற்குப் பாடுபடுகிறேன். சிலர் தேவையற்ற காழ்ப்புணர்ச்சியில் என்மீது அவதூறு பரப்புகிறார்கள். பேராசிரியர் சீனிவாசனைத் தாக்கியவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது. அவர் என்னைத் தேவையில்லாமல் வழக்கில் சேர்த்துள்ளார்’’ என்றார்.

மதுரை மாவட்ட எஸ்.பி மணிவண்ணனிடம் கேட்டபோது, ‘‘இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் நான் எதுவும் பேச முடியாது’’ என்றார்.

கல்வி நிலையங்கள் கன்னாபின்னா சர்ச்சைகளில் சிக்குவது வேதனை!

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

ஆகாத ஊருக்கு வழிகாட்டும் திசைகாட்டி!

துரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டார் மற்றும் நாடகத்துறைகளில் 37 ஆண்டுகள் பணியாற்றியவர், பேராசிரியர் மு.ராமசாமி. நாடகங்கள், திரைப்படங்கள் மூலம் புகழ்பெற்ற இவர், ‘ஆகாயத்தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழிகாட்டும் திசைகாட்டிகளும்’ என்ற நூலை, சமீபத்தில் வெளியிட்டுள்ளார். காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வில் நடந்தவற்றை இந்த நூல் அம்பலப்படுத்துகிறது.

இதுபற்றி மு.ராமசாமி, ‘‘நண்பர்கள் பலர் கூறியதால் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடுதல் குழுவில் நானும் பங்கு பெற்றேன். குழுவின் கன்வீனராக நியமிக்கப்பட்ட முருகதாஸின் நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே சரியில்லை. அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் மற்றும் ஆளுநர் அலுவலகத்துடன் தொடர்புள்ளவராக அவர் இருந்தார். சிறந்த கல்வியாளர்களைப் பின்தள்ளி தகுதியில்லாத செல்லத்துரையை முடிவுசெய்துவிட்டார்கள். எதிர்த்தும் பலன் இல்லாததால், குழுவிலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன். தேர்வுக் குழுவில் நடந்த உண்மைகளை உலகுக்குச் சொல்வோம் என்று அனைத்து ஆதாரங்களையும் இணைத்து நூலாக வெளியிடுகிறேன்’’ என்றார்.