Published:Updated:

“வன்னியர்களுக்கு எதையும் செய்யாதவர் ராமதாஸ்!” - ‘அச்சமில்லை’ ந.இறைவன் ஆவேசம்

“வன்னியர்களுக்கு எதையும் செய்யாதவர் ராமதாஸ்!” - ‘அச்சமில்லை’ ந.இறைவன் ஆவேசம்
பிரீமியம் ஸ்டோரி

‘வரலாற்றில் வன்னியர் மகாவம்சம்’ என்ற 4,500 பக்கங்கள் கொண்ட நூலை ஏழு தொகுதிகளாகக் கொண்டுவந்துள்ளார் ந.இறைவன். ‘அச்சமில்லை’ பத்திரிகையின் ஆசிரியரான இவருக்கு, 80 வயது. இந்தத் தொகுப்பின் நோக்கம் குறித்தும், இன்றைய அரசியல் சூழல் குறித்தும் அவரிடம் பேசினோம்.

“வன்னியர்களுக்கு எதையும் செய்யாதவர் ராமதாஸ்!” - ‘அச்சமில்லை’ ந.இறைவன் ஆவேசம்

‘‘இந்த நூலுக்குத் தேவை இப்போது எதனால் வந்தது?’’

‘‘பெரியார் பிறப்பதற்கு முன்பே சுயமரியாதைக் கொள்கையைப் பரப்பிய அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயக்கர், மறைமலையடிகளைத் தனித்தமிழில் எழுதுமாறு அறிவுறுத்திய சூளை சோமசுந்தர நாயக்கர், பாவேந்தர் பாரதிதாசனைத் தனித்தமிழில் எழுதத் தூண்டிய தமிழ் மறவர் பொன்னம்பலனார், 1938-லேயே இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற சான்றோர்களைக் கொண்டது வன்னியர் சமூகம். வள்ளல்கள் செங்கல்வராய நாயக்கர், கோவிந்தப்ப நாயக்கர், கந்தசாமிக் கவுண்டர் போன்றோர் இன்றைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கள் சொத்துகளைக் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணித்துள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் அதிக காலம் சிறைத்தண்டனை அனுபவித்த பெண் போராளி கடலூர் அஞ்சலையம்மாள் போன்றோர் மறக்கப்பட்டுள்ளனர். மறைக்கப்பட்ட தங்கள் வரலாற்றையும், மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளையும் வன்னியர் சமூகம் உணர்ந்து விழித்தெழ வேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம்.

இதை டாக்டர் ராமதாஸ் செய்திருக்க வேண்டும். ஆனால், அவரது நோக்கம், குடும்ப அரசியல் மட்டுமே. ஓர் உதாரணம். அவருடைய மகன் அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, பல மருத்துவக் கல்லூரிகளில் அவருக்கு எம்.பி.பி.எஸ் சீட் கொடுத்தார்கள். அவற்றை வன்னியர்களுக்கு இலவசமாக ஒதுக்கியிருந்தால், இன்று ஆயிரக்கணக்கில் வன்னிய மருத்துவர்கள் உருவாகியிருப்பார்கள்.வன்னியர்களுக்கு பெரிதாக எதையும் செய்யாதவர் ராமதாஸ்.”

‘‘இன்னமும் சாதி அடையாளம் பேசுவது தேவைதானா?’’

‘‘ஒரே அடையாளத்தில் மனித குலம் முழுவதையும் எந்தச் சூழலிலும் ஒருங்கிணைத்துவிட முடியாது. ஒரு வெளிநாட்டவர் பார்வையில் நாம் இந்தியனாகவும், வெளி மாநிலத்தவர் பார்வையில் தமிழராகவும், தமிழ்நாட்டுக் காரர்கள் பார்வையில் நாம் சாதியாகவும் இருக்கிறோம். உலகமயச் சூழலிலும் எப்படி தேசிய அடையாளங்கள் அழிக்கப்பட முடியாதோ, அவ்வாறே சாதிய அடையாளங்களும் அழிக்கப்பட முடியாது. சாதியாகத் திரள்வதே சமூக நல்லிணக்கம். அவரவர், அவரவர் சொந்த சாதி மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடுங்கள். அது சீரான வளர்ச்சியை உண்டாக்கும்.’’

- சே.த.இளங்கோவன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!