Published:Updated:

மிரட்டும் டெங்கு... துரத்தும் மருத்துவமனை... அலட்சிய அரசு கொறடா!

மிரட்டும் டெங்கு... துரத்தும் மருத்துவமனை... அலட்சிய அரசு கொறடா!
பிரீமியம் ஸ்டோரி
மிரட்டும் டெங்கு... துரத்தும் மருத்துவமனை... அலட்சிய அரசு கொறடா!

மிரட்டும் டெங்கு... துரத்தும் மருத்துவமனை... அலட்சிய அரசு கொறடா!

மிரட்டும் டெங்கு... துரத்தும் மருத்துவமனை... அலட்சிய அரசு கொறடா!

மிரட்டும் டெங்கு... துரத்தும் மருத்துவமனை... அலட்சிய அரசு கொறடா!

Published:Updated:
மிரட்டும் டெங்கு... துரத்தும் மருத்துவமனை... அலட்சிய அரசு கொறடா!
பிரீமியம் ஸ்டோரி
மிரட்டும் டெங்கு... துரத்தும் மருத்துவமனை... அலட்சிய அரசு கொறடா!

‘‘டெங்கு ஒரு பக்கம் மிரட்டுகிறது... டெங்குவுக்குச் சிகிச்சை பெற்றுக் கொள்ள மருத்துவமனைக்குப் போனால்,  அங்கே அதைவிட மிரட்டுகிறார்கள்’’ என அலறுகிறது அரியலூர் மாவட்டம். அரியலூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை பணியாளர்களின் அலட்சியத்தைக் கண்டித்து, நோயாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மிரட்டும் டெங்கு... துரத்தும் மருத்துவமனை... அலட்சிய அரசு கொறடா!

போராட்டத்தில் ஈடுபட்ட சுலோச்சனாவிடம் பேசினோம். “எதிர்த்துக் கேள்வி கேட்டேன் என்பதற்காக  டெங்குவால் பாதிக்கப்பட்ட என் மகளை வெளியே பிடித்துத் தள்ளிவிட்டார்கள்” என்று அழுகையோடு பேசத் தொடங்கினார். “கடந்த 5-ம் தேதி எனது மகள் சுபாவுக்குக் கடுமையான காய்ச்சல். அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தோம். அவசரச் சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்தார்கள். 6-ம் தேதி ‘உங்க பொண்ணுக்கு ரத்தத் தட்டணுக்கள் எண்ணிக்கை ரொம்ப கம்மியா இருக்கு. உடனே டெங்கு வார்டுக்கு போங்க’ என அனுப்பிவிட்டார்கள். அங்கு ஒவ்வொரு பெட்டிலும் மூன்று பேரைப் படுக்க வைத்திருந்தார்கள். ‘காய்ச்சலில் பரிதவிக்கும் குழந்தையைக் கீழே படுக்க வைத்தால் என்னவாகும்’ என்று மருத்துவர்களிடம் கேட்டதற்கு, ‘உனக்கு பெட்டு முக்கியமா... உன்னோட பொண்ணு முக்கியமா?’ என்றார்கள். சகித்துக்கொண்டு வீட்டிலிருந்து எடுத்துவந்த பாயைப் போட்டுப் படுக்க வைத்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘என் மகளுக்கு என்ன சார்’ என டாக்டர்களிடம் கேட்டால், ‘நர்ஸ் சொல்லுவாங்க’ என்பார்கள். ‘தலைவலிச்சா இந்த மாத்திரை...

கை கால் வலிச்சா இந்த மாத்திரை போடு’ என நர்ஸுகள் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். டெங்கு வார்டில் நர்ஸ்கள் இல்லாததால், பொது மருத்துவ வார்டிலிருந்த நர்ஸ் ஷண்முகபிரியா என்பவரை அவசரத்துக்கு அழைத்தோம்.

மிரட்டும் டெங்கு... துரத்தும் மருத்துவமனை... அலட்சிய அரசு கொறடா!

‘லட்சம் பேர் வருவீங்க. எல்லாரும் உடனே வாங்கனு கூப்பிட்டா என்ன செய்யறது’ என்று கேட்டார். தலைமை மருத்துவர் ரமேஷ் சாரிடம் ‘டெங்கு வார்டுக்கு யாரும் வருவதில்லை’ எனச் சொன்னேன். அதற்கு ஷண்முகபிரியா நர்ஸ், ‘போட்டுக் கொடுக்கிறியா... என்னைப் பத்தி உனக்குத் தெரியுமா? அதிகமாகப் பேசினால் ஊசியை மாத்திப் போட்டு கொன்னுடுவோம். யாராவது கேட்டால், டெங்குவால் இறந்துவிட்டதாகச் சொல்லி விஷயத்தை மூடி மறைச்சுடுவோம். எங்களை யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது’ என மிரட்டினார். பயந்து போய் மறுபடியும் டாக்டர்கிட்ட சொன்னேன். டாக்டர் அந்த நர்ஸிடம் பேசினார். அதற்கு அந்த நர்ஸ், ‘என்னிடம் அதிகமாப் பேசுனா... என்னைக் கையைப் புடிச்சி இழுத்திட்டீங்கனு சொல்லி உங்க மேல கேஸ் கொடுத்திடுவேன்’னு டாக்டரையே மிரட்டினார். இப்ப நர்ஸ்களும் டாக்டர்களும் சேர்ந்துகிட்டு, ‘எங்கமேல புகார் கொடுக்கிறியா... நாங்கல்லாம் ஒண்ணு. எங்களை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது’ எனச் சொல்லி என் மகளை டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள். ‘காய்ச்சல் சரியாகிடுச்சா’ எனக் கேட்டதற்கு, ‘சரியாகிடுச்சு... சரியாகிடுச்சு... நீ முதலில் இடத்தைக் காலி பண்ணு’ எனத் துரத்திவிட்டார்கள். இன்றுவரையிலும் அவளுக்குக் காய்ச்சல் குறையவில்லை. மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்துகொண்டிருக்கிறேன்” என்றார் ஆதங்கத்தோடு.

மிரட்டும் டெங்கு... துரத்தும் மருத்துவமனை... அலட்சிய அரசு கொறடா!

மருத்துவமனையின் அலட்சியத்தைக் கண்டித்துப் போராட்டம் அறிவித்திருக்கும் தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் ராம ஜெயவேலிடம் பேசினோம். “தலைமை மருத்துவமனையில் 13 மருத்துவர்கள்தான் பொதுசிகிச்சை செய்வதற்கு இருக்கிறார்கள். மதியத்துக்கு மேல் டாக்டர்கள் இருப்பதில்லை. அரசின் தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன் இருக்கும் மாவட்டம். அவர் நினைத்தால் இந்த மருத்துவமனையைச் சிறப்பாக ஆக்கியிருக்கலாம். அவர் அந்தப் பக்கமே போவதில்லை. நோயாளிகளிடம் தரக்குறைவாகப் பேசிய செவிலியரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்” என்றார்.

மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் செல்வராஜிடம் விளக்கம் பெற முயன்றோம். ‘‘மீட்டிங்கில் இருக்கிறேன்’’ என்று சொல்லித் தவிர்த்தார். கலெக்டர் லட்சுமிப்ரியாவிடம் பேசினோம். ‘‘அந்தக் குழந்தைக்கு ரத்தத் தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. காய்ச்சலும் இல்லை. அதன்பிறகுதான் டிஸ்சார்ஜ் செய்திருக்கிறார்கள். ஷண்முகபிரியா பேசியது தவறுதான். அவர்மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்” என்று முடித்தார்.

மிரட்டும் டெங்கு... துரத்தும் மருத்துவமனை... அலட்சிய அரசு கொறடா!

‘‘அரசுக்கு எதிராக அணி திரண்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கொறடா ராஜேந்திரன் வேகம் காட்டுகிறார். இதே வேகத்தை, தன் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வசதிகள் செய்து கொடுப்பதிலும் காட்டியிருக்க வேண்டும்.  பாவம், அதைவிட அவருக்கு நிறைய வேலைகள்  போல. காமன்வெல்த் நாடாளுமன்ற கருத்தரங்கில்  கலந்து கொள்வதற்காக அவர் கனடா பறந்துவிட்டார். நாங்கள்தான் பாவப்பட்டவர்கள்’’ எனக் கொதிக்கிறார்கள் அரியலூர்வாசிகள்.

- எம்.திலீபன்
படங்கள்: கே.ராபர்ட்