Published:Updated:

“மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைக்க முடியும்?”

“மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைக்க முடியும்?”
பிரீமியம் ஸ்டோரி
“மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைக்க முடியும்?”

“மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைக்க முடியும்?”

“மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைக்க முடியும்?”

“மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைக்க முடியும்?”

Published:Updated:
“மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைக்க முடியும்?”
பிரீமியம் ஸ்டோரி
“மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைக்க முடியும்?”

தினகரன் பக்கம் போன 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு, எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கு ஆகியவற்றோடு இன்னொரு வழக்கும் இப்போது அ.தி.மு.க ஆட்சியை ஆட்டம் காண வைத்திருக்கிறது. அது, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கு. அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போஸ் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, அவருக்குக் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தை வழங்கக் கோரும் ஃபார்ம் ஏ மற்றும் பி ஆவணங்களில், மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா வைத்ததாக சொல்லப்பட்ட கைரேகை குறித்து சர்ச்சை எழுந்தது. கைரேகையில் சந்தேகம் உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில்தான் இப்போது புதிய திருப்பம்.

“மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைக்க முடியும்?”

பொதுவாக தேர்தல் வழக்குகள் நிதானமாக விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர் தன் பதவிக் காலத்தை முடித்தபிறகே தீர்ப்பு வருவதுதான் வழக்கம். ஆனால், ஏ.கே.போஸை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் டாக்டர் சரவணன், கடந்த ஜனவரியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த இந்த வழக்கு செல்லும் வேகத்தைப் பார்க்கும்போது, மிக விரைவில் தீர்ப்பு வந்து விடும் எனச் சொல்கிறார்கள்.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் வில்ஃப்ரெட், கடந்த 13-ம் தேதி ஆஜராகி, ‘‘இதில் ஜெயலலிதா கைரேகை வைத்ததை நாங்கள் தனிப்பட்ட முறையில் நேரடி ஆய்வு செய்யவில்லை. ‘வேட்புமனுவிலுள்ள ஜெயலலிதாவின் கைரேகையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் கடிதம் எழுதியதால் ஏற்றுக்கொண்டோம்’’ என விளக்கம் அளித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி வேல்முருகன், ‘கைரேகைக்குச் சான்றளித்த டாக்டர் பாலாஜி, வரும் 27-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைக்க முடியும்?”

இந்த பாலாஜியை, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்றத் திட்டத்தின் உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தனியாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரலில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரிச் சோதனை நடைபெற்றபோது கிடைத்த ஆவணங்களில், ‘டாக்டர் பாலாஜிக்கு ஐந்து லட்ச ரூபாய் தரப்பட்டது’ எனக் குறிப்பு இருந்தது. ‘‘ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை தர வந்த லண்டன் டாக்டரின் ஹோட்டல் செலவுகளுக்காக இந்தப் பணத்தை வாங்கினேன்’’ என ஆரம்பத்தில் சொன்ன பாலாஜி, பிறகு ‘‘வாங்கவில்லை’’ எனப் பல்டி அடித்தார். கைரேகை வழக்கில் இப்போது பாலாஜியின் விளக்கமே முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

“மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைக்க முடியும்?”

டாக்டர் சரவணனிடம் பேசினோம். ‘‘தேர்தல் நடப்பதற்கு முன்பே, ஏ.கே.போஸ் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஃபார்ம் ஏ மற்றும் பி-யில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கைரேகைமீது சந்தேகம் உள்ளதாக திருப்பரங்குன்றம் தேர்தல் அலுவலர் ஜீவாவிடம் புகார் செய்தேன். அதன்பின் மதுரை கலெக்டருக்கும், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கும் புகார் அனுப்பினேன். ஆனால், எந்த  நடவடிக்கையுமில்லை. அதனால்தான் நீதிமன்றத்தை நாடினோம்.

அப்போலோவில் செயற்கை சுவாசத்தில் இருந்த ஜெயலலிதா, கைரேகை வைத்திருக்க முடியாது. மயக்க நிலையில் இருப்பவரிடம் கைரேகை வாங்கமுடியாது. அவருக்கே தெரியாமல் அப்படி வாங்குவதும் குற்றமாகும். நானே ஒரு டாக்டர் என்பதால், இதுபோன்ற நேரங்களில் நோயாளிகளிடம் கையெழுத்து, கைரேகை வாங்க எந்த மாதிரியான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதும் தெரியும். வீடியோ பதிவுசெய்ய வேண்டும், மாஜிஸ்திரேட் அந்தஸ்திலுள்ள அலுவலர் அருகில் இருக்க வேண்டும். இவற்றில் எதையுமே இங்கு பின்பற்றவில்லை. ஜெயலலிதாவின் கைரேகைக்குச் சான்று வழங்க சென்னை அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜியை நியமனம் செய்ததிலும் பல சந்தேகங்கள் உள்ளன.  எங்கள் வழக்குக்கு வலு சேர்க்கும் வகையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே, ‘ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை. பார்த்ததாகப் பொய் சொன்னோம்’ எனச் சொல்லியிருக்கிறார். இதன் மூலம், ‘ஜெயலலிதா கைரேகை வைக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறார்’ என்பது தெளிவாகிறது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால்தான் அரசே விசாரணை கமிஷனை நியமித்துள்ளது. இதுவும் எங்கள் வழக்குக்கு வலு சேர்க்கும்’’ என்றார்.

“மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைக்க முடியும்?”

திருப்பரங்குன்றம் தேர்தல் அலுவலராகப் பணியாற்றிய ஜீவா, மதுரை கலெக்டர் வீரராகவராவ், ராஜேஷ் லக்கானி ஆகியோர் சாட்சியமளித்துள்ளனர். அவர்கள் அனைவரும், ‘‘கைரேகையை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதால் ஏற்றுக் கொண்டோம்’’ எனக் கூறியுள்ளார்கள்.

ஏ.கே.போஸிடம் கேட்டபோது, ‘‘நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அதுபற்றிக் கருத்துச் சொல்வது தவறு’’ என்றார்.

எடப்பாடி அரசுக்கு எல்லா திசைகளிலிருந்தும் நெருக்கடிகள் சூழ்கின்றன.

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்