Published:Updated:

“தியாகத் தாயே வருக என்று போஸ்டர் ஒட்டுகிறார்களே!” - கோப ராமதாஸ்

“தியாகத் தாயே வருக என்று போஸ்டர் ஒட்டுகிறார்களே!” - கோப ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி

பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் மேடை என்றாலே தலைவர்களின் பேச்சில், அழுத்தமும் ஆவேசமும் அனலடிக்கும். ஆனால், கடந்த 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ‘பாட்டாளிச் சொந்தங்களே’ புத்தக வெளியீட்டு விழா, வேற லெவல்.

தான் கடந்து வந்த பாதையைப் பற்றி ஒரு வார இதழில் தொடராக எழுதிவந்தார் ராமதாஸ். அது புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் கீழ்சிவிரியில் பிறந்து வளர்ந்து, பின்னாளில் மருத்துவப் படிப்பு முடித்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்த காலத்திலிருந்து பொதுவாழ்க்கை, போராட்டம், சிறைச்சாலை என்று விரிந்து பரவிய ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றைச் சுருங்கச் சொல்லும் ஆவணப்படம் முதலில் திரையிடப்பட்டது. அதன்பிறகு, தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்.

“தியாகத் தாயே வருக என்று போஸ்டர் ஒட்டுகிறார்களே!” - கோப ராமதாஸ்

பா.ம.க மேடைகளில், ராமதாஸைக் கட்சியின் தலைவராக மட்டுமே பாவித்துப் பேசிவந்த அன்புமணிக்கு இந்த மேடை விதிவிலக்கு. தந்தையின் கண்டிப்பும் பாசமும் குறித்துப் பேசினார். ‘‘விளையாட்டும் படிப்புமாகத்தான் நாங்கள் வளர்ந்தோம். எனக்கு ப்ளஸ் டூ பாடத்தை விடுமுறையில் இரண்டே மாதங்களில் அப்பா சொல்லிக்கொடுத்தார். அந்த இரண்டு மாதங்களுக்குள் நான் படித்துமுடித்த பாடங்களையெல்லாம் அடுத்த ஒரு வருடம் முழுக்க ரிவிஷன்தான் செய்துகொண்டிருந்தேன். மருத்துவப் பணி முடிந்து இரவு 11 மணிக்குத்தான் வீடு திரும்புவார். ஆனால், இரவு 1 மணி வரையிலும் விழித்திருந்து பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி என்று பாடம் எடுப்பார். அன்று அவர் காட்டிய அக்கறைதான், விழுப்புரம் மாவட்டத்தில் என்னை முதல் மாணவனாக வரச்செய்தது’’ என அன்புமணி சிலாகித்துப் பேச, உணர்ச்சிமயமானார் ராமதாஸ்.

நிறைவாகப் பேசிய ராமதாஸ், ‘‘நான் எழுதிய இந்தப் புத்தகத்தை இப்போது படித்தாலும் தேம்பித் தேம்பி அழுதுவிடுவேன். அந்தளவுக்கு ஆரம்பக் காலங்களில் வறுமையில் வாடியிருக்கிறேன். மனதறிந்து நான் யாருக்கும் கெடுதல் செய்ததில்லை...’’ எனத் தழுதழுத்தவர், அடுத்து அரசியலுக்குத் திருப்பினார்.

‘‘தமிழகம் ஊழல் புரையோடிப் போய்க் கிடக்கிறது. அதைக் குணப்படுத்தும் மருத்துவராக அன்புமணி வந்திருக்கிறார். ஊழலை ஒழிப்பதற்கான வழிமுறைகள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் எனப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த விழாவுக்கு வரும் வழியில் தி.நகர் தெருக்களில், ‘தியாகத் தாயே வருக... வருக...’ என்ற வரவேற்பு போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்’’ என்று கோபமாகச் சொல்லி இடைவெளிவிட... அர்த்தம் புரிந்து கூட்டம் மொத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தது.

விறுவிறு அரசியல் கூட்டங்களையே பார்த்துப் பழகியத் தொண்டர்களுக்கு இந்த விழா வேற லெவல்!

- த.கதிரவன், படம்: கே.ஜெரோம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!