குழந்தைக் கடத்தல் நெட்வொர்க்கை ஐந்து மாதத் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடித்திருக்கிறது மதுரை போலீஸ்.

மதுரை அரசு மருத்துவமனையில், பிறந்த சில நாள்களில் காணாமல் போன தன் குழந்தையை மீட்டுத்தரும்படி வாடிப்பட்டியைச் சேர்ந்த மீனாட்சி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தாக்கல் செய்தார். நான்கு வருடங்களுக்கு முன்பு போட்ட இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை நடத்தியும் இன்றுவரை குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தொடர்ந்து பல குழந்தைகள் காணாமல் போன சம்பவங்கள் மதுரையில் நிகழ்ந்து கொண்டிருந்தன. இந்த நிலையில்தான், ஐந்து மாதங்களுக்குமுன் காணாமல் போன மூன்றரை வயதுக் குழந்தையை மீட்டு, கடத்தல் கும்பலையும் கைதுசெய்தது மதுரை மாநகரக் காவல்துறை. இதன்மூலம், இதுவரை நடந்துள்ள குழந்தைக் கடத்தலின் நெட்வொர்க்கை நெருங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் போலீஸார்.

மதுரை கல்மேடு நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர்கள் வானவராயன் - சிவகாமி தம்பதியினர். மதுரை அரசு ராசாசி மருத்துவமனை வாசலில் பாசிமாலைகள் விற்றுப் பிழைத்து வந்தனர். இவர்களுடைய மகள் பவித்ராதான் காணாமல்போய்,இப்போது மீட்கப்பட்டிருக்கிறார். இதுபற்றி நம்மிடம் பேசிய சிவகாமி, ‘‘மே மாசம் 19-ம் தேதி ஆஸ்பத்திரி வாசலில் வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருந்தப்போ, எங்களோட ரெண்டாவது பொண்ணு பவித்ரா காணாம போயிட்டா. எங்கே தேடியும் கிடைக்கலை. அப்புறம்தான் போலீஸ்ல புகார் கொடுத்தோம். புள்ள மறுபடி கிடைக்குமா, கிடைக்காதானு கவலையில இத்தனை நாள் தவிச்சிட்டு இருந்தோம். எங்க கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு, போலீஸ்காரங்க தென்காசியில இருந்த எங்க புள்ளையக் கண்டுபிடிச்சு ஒப்படைச்சுட்டாங்க. இந்தத் தீபாவளி எங்க வாழ்க்கையில மறக்க முடியாததுங்க. எங்க பவித்ரா கெடைச்ச மாதிரி, காணாம போன எல்லா புள்ளைகளும் பெத்தவங்களுக்குக் கிடைக்கணும். புள்ளைங்களைத் தொலைச்சவங்க படுகிற பாடு என்னான்னு எனக்குத் தெரியும்’’ என்றார்.

நம்மிடம் பேசிய மதுரை காவல்துறை துணை கமிஷனர் சசிமோகன், ‘‘ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டியைச் சேர்ந்த பரமன் மனைவி மீனா, ஜனனி என்ற பெண்ணோடு பாண்டி கோயிலுக்குச் சென்றுவிட்டு மதுரை அரசு மருத்துவமனை பக்கம் வந்துள்ளனர். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த பவித்ராவை இருவரும் கடத்திச் சென்றுள்ளனர். பத்து நாள்கள் அவர்கள் வீட்டில் வைத்திருந்து, நல்ல விலைக்கு விற்க பலரிடமும் பேசியுள்ளனர். கடைசியில் தென்காசி ராமன் தம்பதியிடம் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். இது திருட்டுக் குழந்தை என்பது தெரியாமல், இவர்களின் குழந்தை என நம்பி வாங்கி வளர்த்துள்ளனர்.

பவித்ரா காணாமல்போனதும், குழந்தைத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனி டீம் அமைத்தோம். குழந்தையின் படத்தை போலீஸ் இணையதளம், சமூக வலைதளங்களில் வெளியிட்டோம். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பிறகு, சம்பவம் நிகழ்ந்த நாளில் மருத்துவமனை வாசல் பகுதியில் செல்போனில் பேசியவர்கள் விவரத்தைச் சேகரித்தோம். அந்தப் பட்டியலுடன் ஒப்பிட்டு, பழைய குற்றவாளிகள் சிலரைப் பிடித்து விசாரித்தபோது, சில க்ளூக்கள் கிடைத்தன. அதன் பிறகு, குழந்தை திருடுவதையே தொழிலாகச் செய்துவரும் மீனா உள்பட சிலரைப் பிடித்து விசாரித்தோம். அப்போது கிடைத்த தகவல்களை வைத்துக் குழந்தையை மீட்டோம். இதற்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனையில் காணாமல் போன மற்ற குழந்தைகள் விஷயத்தில் இவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

மீட்கப்பட்ட குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைக்கும்போது, தீபாவளி கொண்டாட பட்டாசு மற்றும் இனிப்புகளையும் போலீஸார் வழங்கினர். குழந்தையைத் தொலைத்தவர்கள் மிகவும் எளியவர்கள் என்றபோதிலும், காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்து மீட்டுள்ளதை மக்கள் பாராட்டினார்கள்.

இந்தக் கடத்தலில் தொடர்புடைய மீனா, கடந்த 12-ம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூரில் செந்தில்குமார் என்பவரின் மூன்று வயது குழந்தை பிரியதர்ஷினியைக் கடத்தி விற்க முயற்சி செய்துள்ளார். இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ், மீனா உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இவர்கள் தொடர்ந்து மதுரை, திருச்செந்தூர் என்று ஊர் ஊராகச் சென்று குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. ‘‘இவர்களுக்கு புரோக்கர்களாக தமிழகம் முழுவதும் இருபதுக்கும் மேற்பட்டோர் செயல்பட்டு வருகிறார்கள். இப்போது அனைவரைப் பற்றியும் விசாரித்து வருகிறோம்’’ என்கிறது மதுரை போலீஸ்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனை மருத்துவரையும், தொண்டு நிறுவனம் நடத்தும் பெண்மணியையும் கைது செய்தது போலீஸ். அதற்குப்பிறகு இப்போது மீனா பிடிபட்டிருக்கிறார்.

குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்