‘‘வருகின்ற வழியில் பார்த்தேன். பெய்த மழையால் வயலெல்லாம் பசுமையாகக் காட்சியளிக்கின்றன. குறை கூறுகிற அளவுக்கு நாங்கள் ஆட்சி செய்யவில்லை, மக்களுக்கு இன்று என்ன தேவையோ, அதை நேற்றே முடித்து வைப்பவர்கள் நாங்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். இதில் தொடங்கி வைக்கப்படும் திட்டங்களைப் பார்த்தால் அப்படிக் கேட்க மாட்டார்கள். எங்கள் ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது’’ - சிவகாசியில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்தான் இப்படி சொன்னார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் பேசி முடித்தவுடன் தேசிய கீதம் பாடப்பட்டது.

எல்லோரும் எழுந்து நின்றபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. மேடைக்குமுன் நிருபர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே, இரண்டு பெண்கள் தங்கள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்தவர்களும், காவலர்களும் அவர்களைக் காப்பாற்றிவிட்டனர். ‘‘என் வீட்டுக்காரரை போலீஸ் பொய் கேஸ் போட்டுப் பிடிச்சி வெச்சிருக்கு. போலீஸிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்’’ என்று அவர்களில் ஒரு பெண் அழ, மேற்கொண்டு பேசவிடாமல் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

இதையெல்லாம் மேடையிலிருந்தபடி எடப்பாடி, ஓ.பி.எஸ்., சபாநாயகர், அமைச்சர்கள் என அனைவரும் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

தற்கொலைக்கு முயன்ற அவர்கள் ராஜபாளையத்தைச் சேர்ந்த சீதாராமன் மனைவி பார்வதியும், மருமகள் கனகலட்சுமியும்தான். கனகலட்சுமியின் கணவர் முனியசாமியை ஒரு வழக்கில் போலீஸ் பிடித்து வைத்திருப்பதால், அவரைக் காப்பாற்றும்படி முதல்வரிடம் தெரிவிக்கவே இந்தத் தற்கொலை முயற்சியில் இறங்கினார்கள்.

விழா நடந்த அன்று காலையில், நெல்லையில் ஒரு குடும்பமே தீக்குளித்து, அதில் மூன்று பேர் இறந்துபோன கொடுமையை அறிந்தும், இந்த விழாவில் அதற்குச் சிறு வருத்தமும் தெரிவிக்காத முதல்வரும், துணை முதல்வரும் தங்களால் இப்போது தமிழகம் செழிப்பாக இருப்பதாகப் பேசியதுதான் கொடுமை. அதைவிட கொடுமை கண்ணுக்கு முன்னால், இரண்டு பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொள்ள முயன்றதைப் பார்த்த பிறகாவது, ‘என்ன பிரச்னை?’ என விசாரிக்காமல் போனது.

இந்தநிலையில், ‘ராஜபாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்குக் குற்றவாளி முனியசாமியைத் தப்பிக்க வைக்கவே இப்பெண்கள் தற்கொலை முயற்சியில் இறங்கினார்கள்’ எனக் காவல்துறை ஓர் அறிக்கையை இரவு வெளியிட்டது.

வழக்கம்போல் எடப்பாடி கரடிக்கதை ஒன்றைச் சொன்னார். மக்களிடம் நோ ரெஸ்பான்ஸ். மக்கள் இனி இந்தக் கரடி வித்தைகளை நம்புவதற்குத் தயாரில்லை என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

- செ.சல்மான்
படம்: ஆர்.எம்.முத்துராஜ்