Published:Updated:

ஜூ.வி. நூலகம்: தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்!

 ஜூ.வி. நூலகம்: தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்!
பிரீமியம் ஸ்டோரி

திராவிட இயக்கம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள், திராவிட கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து 50 ஆண்டுகள், தி.மு.க தலைவர் கருணாநிதி சட்டமன்றத்துக்குள் நுழைந்து 60 ஆண்டுகள் - இம்மூன்றையும் அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட தொகுப்பு நூல்தான், ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’. தலைப்பின் மூலமாக இருந்து இந்தப் புத்தகம் சுற்றி வருவது மொத்தமும் கருணாநிதியையே.

 ஜூ.வி. நூலகம்: தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்!

திராவிட இயக்கத்துக்கும், கருணாநிதிக்கும் இதுவரை ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் அவர்கள் வெளியிட்டவை; அவர்களின் ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டவை. முதன்முதலாக, திராவிட இயக்கத்துக்கு ‘வெளியில்’ இருந்து வந்துள்ளது இந்தப் புத்தகம். இதுதான் திராவிட இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றியாகவும் சொல்லிக்கொள்ளலாம். பொத்தாம் பொதுவாக, ‘ஐம்பது ஆண்டுகளாக நாடு கெட்டுப் போய்விட்டது’ என்று சொல்வது ஒருவகையான மேட்டிமைத்தனம். இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட, தமிழகம் எந்த வகையிலெல்லாம் மேம்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களின் குவியல் இந்த நூலில் இருக்கிறது.

‘குறைந்த காலகட்டத்துக்குள் மிக விரைவான வளர்ச்சியை எட்டிய சில மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று’ எனச் சொல்பவர் அமர்த்தியா சென். இலவசத் திட்டங்கள் என்று கொச்சைப்படுத்தப்படும் திட்டங்களுக்குள் இருக்கும் சமூக நோக்கத்தை, அமெரிக்க அறிஞர் பிரேர்ணா சிங் சொல்கிறார். யோகேந்திர யாதவ், சமூகநீதிப் போராட்டங்களை வியக்கிறார். கூட்டாட்சி முழக்கத்துக்குத் தமிழகம் எப்படி முன்னோடியாக இருந்தது என்பதைப் பஞ்சாப் பத்திரிகையாளர் அமந்தீப் சிங் சந்து ஒப்புக்கொள்கிறார். மொழி உரிமைகளைக் காக்கும் விவகாரத்தில் வங்காளிகளுக்கும் கருணாநிதி முன்னோடி என்று மகுடம் சூட்டுகிறார் கர்க சட்டர்ஜி. வடவர் எதிர்ப்பை மராத்தி அறிஞர் வைபவ் ஆப்னாவே புரிந்துகொள்கிறார். இப்படி தமிழ்நாட்டுக்கு வெளியே இருப்பவர்கள், தமிழ்நாட்டையும் திராவிட இயக்கத்தையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் ஆவணம் இது.

‘தலைவராகவும் அப்பாவாகவும் இருந்த கருணாநிதி பற்றிய ஸ்டாலின் பேட்டியும், அப்பா எப்போதும் அரசியல்வாதியாகவே இருந்தார் எனும் கனிமொழி கட்டுரையும், கருணாநிதியின் நிழலான சண்முகநாதனின் வாழ்க்கைப் பாதையும் இதில் சுவாரஸ்யமான பகுதிகள்.

“கருணாநிதி இதுநாள்வரை கட்டிக்காத்த திராவிட இயக்கத்தின் மூலஉணர்வுகள்மீது எந்த மாசும் படியாமலும், கடல் கொள்ளையர்களால் அவை கைப்பற்றப்படாமலும், திராவிட இயக்கம் அதன் இளைய தலைமுறையால் கரை சேர்க்கப்பட வேண்டும்” எனக் காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி சொல்வது தி.மு.க-வினருக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவே கொண்டுவந்த தொகுப்பாக இது தெரிகிறது.

- புத்தகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ் திசை,
கஸ்தூரி பில்டிங்,
859 அண்ணா சாலை, சென்னை-2
விலை : ரூ.200