Published:Updated:

கிருபாநிதியை மறந்த தி.மு.க!

கிருபாநிதியை மறந்த தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
கிருபாநிதியை மறந்த தி.மு.க!

கிருபாநிதியை மறந்த தி.மு.க!

கிருபாநிதியை மறந்த தி.மு.க!

கிருபாநிதியை மறந்த தி.மு.க!

Published:Updated:
கிருபாநிதியை மறந்த தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
கிருபாநிதியை மறந்த தி.மு.க!

“நான் தி.மு.க-வில் சேர்ந்துவிட்டேன். என் தலைவராக கலைஞரை ஏற்றுக்கொண்டுவிட்டேன். இதுதான் உண்மை” என்று பி.ஜே.பி அலுவலகத்திலேயே, அந்தக் கட்சியின் தலைவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே, பத்திரிகையாளர்கள் முன்பு துணிச்சலாகச் சொன்னவர் பி.ஜே.பி-யின் முன்னாள் மாநிலத் தலைவரான டாக்டர். கிருபாநிதி. இவர், தன் 90-வது வயதில் அக்டோபர் 20-ம் தேதி காலமானார்.

தமிழக பி.ஜே.பி-யில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய கிருபாநிதி, தமிழக பி.ஜே.பி-க்கு நியமிக்கப்பட்ட ஒரே தலித் தலைவர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பிரபல அறுவைச் சிகிச்சை நிபுணர். 2000-2003 வரை தமிழக பி.ஜே.பி-யின் தலைவராக இருந்தபோதுதான், 2001 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் பி.ஜே.பி கூட்டணி வைத்தது. பி.ஜே.பி-க்கு 23 தொகுதிகளை தி.மு.க ஒதுக்கியது. 

கிருபாநிதியை மறந்த தி.மு.க!

ம.தி.மு.க கூடுதல் தொகுதிகள் வேண்டும் என தி.மு.க-விடம் கேட்டது. அதனால், அப்போது கிருபாநிதியிடம், ‘‘இரண்டு தொகுதிகளை விட்டுக்கொடுங்கள்’’ எனக் கருணாநிதி கேட்டார். அதற்கு, “கருணாநிதி கேட்டு இந்த கிருபாநிதி மறுப்பாரா” என்று சிலேடையாகப் பதில் சொன்ன கிருபாநிதி, இரண்டு தொகுதிகளையும் திருப்பிக்கொடுத்தார். அந்தத் தேர்தலில், மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு கிருபாநிதி தோல்வியடைந்தார்.

 “1989-ம் ஆண்டு பி.ஜே.பி-யில் சேர்ந்து, மாவட்டத் தலைவர், மாநிலத் துணைத் தலைவர் எனப் பல பதவிகள் வகித்து, தலைவர் பொறுப்புக்கு வந்தார். பி.ஜே.பி-யைவிட்டு போகவேண்டும் என அவர் கடைசிவரை நினைக்கவில்லை. ஆனால், பி.ஜே.பி-யில் பல அவமானங்களைக் கிருபாநிதி சந்தித்தார். அதனால்தான், இனியும் பி.ஜே.பி-யில் நீடிக்க முடியாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அதுதான், அவரை தி.மு.க-வின் பக்கம் கரைசேர்த்தது” என்கிறார்கள் கிருபாநிதிக்கு நெருக்கமாக இருந்த பி.ஜே.பி நண்பர்கள்.

 காசி.முத்துமாணிக்கம் தலைமையில் பி.ஜே.பி கட்சியிலிருந்து விலகி, கருணாநிதி முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார் கிருபாநிதி. இணைப்புப் பட்டியலில் கிருபாநிதியின் பெயரைப் பார்த்த கருணாநிதி, “கருணாநிதி இருக்கும் இடத்துக்கு, கிருபாநிதியும் வந்துவிட்டார். இனி, நிதிக்குப் பஞ்சம் இருக்காது” என்று தனக்கே உரிய பாணியில் கருணாநிதி கமென்ட் அடித்தார். அப்போதே 80 வயதைக் கடந்துவிட்டதால், கிருபாநிதியால் ஆக்டிவாகச் செயல்பட முடியவில்லை. சிறப்புப் பொதுக்குழு உறுப்பினர் என்ற அந்தஸ்துடன் சில பொதுக்குழுக் கூட்டங்களில் பங்கெடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக ஞாபக மறதி அதிகரித்து, வீட்டிலேயே முடங்கிவிட்டார். தி.மு.க-வைச் சேர்ந்த கிருபாநிதியின் இறுதிச் சடங்கில் தி.மு.க-வினரைவிட பி.ஜே.பி-யினரின் தலைகளே அதிகமாகத் தென்பட்டன.

- அ.சையது அபுதாஹிர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!