Published:Updated:

“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்!”

“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்!”

ஆர்.கே.நகர் வாக்காளர்கள் ஆவேசம்

“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்!”

ஆர்.கே.நகர் வாக்காளர்கள் ஆவேசம்

Published:Updated:
“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்!”

ஓர் இடைத்தேர்தல், ஒரு பொதுத்தேர்தல், ஓர் இடைத்தேர்தல் ரத்து எனக் கடந்த மூன்றாண்டுகளாக அதகளப்படுகிறது, ஆர்.கே.நகர் தொகுதி.

ஆர்.கே.நகரின் எம்.எல்.ஏ-வான ஜெயலலிதா இறந்துவிட்டதால், ஆறு மாதங்களுக்குள் அந்தத் தொகுதிக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத் ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வருமானவரித் துறை ஆவணங்களைக் கைப்பற்ற... இடைத்தேர்தல் ரத்தானது.

‘ஆர்.கே. நகரில் தேர்தல் நடத்தும் சூழல் வந்ததும் தேர்தல் நடத்தப்படும்’ என முன்பு சொல்லியிருந்த தேர்தல் ஆணையம், இப்போது, ‘டிசம்பர் 31-க்குள் தேர்தல் நடத்தப்படும்’ என அறிவித்திருக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதி எப்படி இருக்கிறது... தொகுதி மக்களின் மனநிலை என்ன? என்பதை அறிந்துகொள்ள தொகுதிக்குள் வலம்வந்தோம்.

தண்ணீருக்காக குடங்களுடன் காத்திருக்கும் பெண்கள், குவிந்துகிடக்கும் குப்பைகள், நாற்றமெடுக்கும் கால்வாய்கள் என ஆர்.கே.நகருக்கே உரிய அடையாளங்களில் எந்தவித மாற்றங்களும் இல்லை.

“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்!”

‘‘அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை!’’

அப்பாசாமி தோட்டம் பகுதியில் இருந்தவர்களிடம் பேசினோம். “ராத்திரியில கொசுக்கடி தாங்க முடியல. என் பேரனுக்குக் காய்ச்சல். தெனம் ஊசிபோடக் கூட்டிட்டுப் போறேன். பைப்ல வர்ற தண்ணி ஒரே நாத்தம். லாரிலதான் தண்ணி வருது. எப்ப வருதுன்னே தெரியாது” என்கிறார் மீனாட்சி சுந்தரம்.

மீன்பாடி வண்டி ஓட்டும் செல்வம், “இந்தப் பகுதியில இருக்கிறவங்க சேர்ந்து  கொசுமருந்து அடிக்கச் சொல்லி மாநகராட்சியில புகார் கொடுத்தோம். இதுவரைக்கும் கொசுமருந்து அடிக்கலை. ஜெயலலிதா அம்மா இருந்திருந்தாங்கன்னா, பெட்டிஷன் கொடுத்த உடனே நடவடிக்கை எடுத்திருப்பாங்க. இப்போது அதிகாரிங்க கண்டுக்கறதே இல்லை” என்றார்.

“எங்க வீட்டுக்காரர் ஸ்டீல் பட்டறைல வேலை செய்தார். ஜி.எஸ்.டி வரி வந்ததால, ஸ்டீல் பட்டறையில முன்னமாதிரி வேலையே இல்ல. அவர், வீட்ல சும்மா குந்திகினு இருக்காரு” என்கிறார் சாந்தா.

நாறும் குப்பை!

வெங்கடேசன் என்பவர், “குப்பை அள்ளணும்னு மனுக்கொடுத்தா, ‘எடுக்கிறேன்’னு சொல்றாங்க. ஆனா, எடுக்கிறதில்ல. எங்க தொகுதிக்குன்னு ஒரு எம்.எல்.ஏ இருந்தா இந்தக் குறையெல்லாம் இருக்காது” என்றார்.

செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர், “பணம் கொடுத்தால் தான் ஓட்டுப் போடுவார்கள் என்ற நிலையை அரசியல்வாதிகள் ஏற்படுத்திட்டாங்க.தேர்தல் வரைக்கும்தான் நாம் நன்றாக இருக்கமுடியும். அதன்பிறகு நம்மை கண்டுகொள்ள மாட்டார்கள் என வாக்காளர்களும் நினைக்க ஆரம்பித்து விட்டனர்” என்றார்.

“எங்க வீட்டுக்கு முன்னாடி குப்பைத்தொட்டியில் குப்பை நெறஞ்சு வழியுது. அள்ளிட்டே போகல. நாத்தம் அடிக்குது. வீட்டுக் கதவைக் கூடத் தெறக்க முடியல” என்று ஆதங்கப் பட்டார் டேங்க் தெருவைச் சேர்ந்த லதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்!”

‘‘ஆட்சியைக் கலைக்க வேண்டும்!’’

அப்பாசாமி தோட்டம் 19-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த நடராஜன், “வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததால இடைத்தேர்தலை நிப்பாட்டினாங்க. ஆனா, பணம் கொடுத்தவங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்கல. பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டுத் தேர்தல் நடத்த வேண்டும்” என்கிறார் ஆணித்தரமாக.

“தேர்தல் நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால், நடக்குமா என்பதே சந்தேகமா இருக்கு. தேர்தல் நடக்காததால தொகுதியில எந்த வேலையும் நடக்கமாட் டேங்குது”என்கிறார் சிகரண்டபாளையம் ராஜூ.

ஜீவா நகரைச் சேர்ந்த ஆறுமுகம், “இப்போது நடக்கும் அரசியல் சரியில்லை. மக்கள் வெறுப்பில் இருக்கின்றனர். சூழல் சரியில்லை. ஆட்சியைக் கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என்றார் கோபமாக.
“ஆர்.கே.நகருக்கு இப்போது இருக்கும் ஆட்சி ஒன்றுமே செய்யவில்லை. ரோடு சரியில்லை. தண்ணீர் வசதி இல்லை. மக்களின் வீக்னஸை புரிந்து கொண்டு, காசு கொடுத்து ஓட்டுப் போட வைத்து விடுகின்றனர். அந்த அலட்சியத்தால்தான் நாங்கள் போய் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்” என்கிறார் ஜீவா நகர் 8வது தெருவைச் சேர்ந்த தீன் முகமது.

“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்!”

போலி வாக்காளர்கள்!

கோபம், வேதனை, ஆத்திரம் என ஆர்.கே.நகர் வாக்காளர்கள் இருக்க இன்னொருபுறம் போலி வாக்காளர்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறது தி.மு.க.  அதுகுறித்து தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்
ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம். “கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பொதுத் தேர்தலின்போது  ஆர்.கே.நகரில் 45,000 போலி வாக்காளர்கள் இடம் பெற்றிருப்பதாக  புகார் கொடுத்தோம்.

17,000 போலி வாக்காளர்கள் இருப்பது உண்மைதான் எனத் தேர்தல் ஆணையமும் ஒப்புக் கொண்டது. ஆனால், அவர்களை நீக்கவில்லை.

போலி வாக்காளர்களை நீக்க வாக்காளர் அட்டையுடன், ஆதார்  எண்ணை இணைக்க வேண்டும் எனக் கேட்கிறோம்.  கொளத்தூர் தொகுதியில் மட்டும் ஆதார் எண்களை இணைத்து சரிபார்க்கின்றனர். ‘இதே முறையை
ஆர்.கே.நகரில் ஏன்  கடைப்பிடிக்கவில்லை’ என்று கேட்டோம். ‘உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது’ எனச் சொல்கின்றனர். ‘வழக்கு நிலுவையில் இருக்கும்போது கொளத்தூர் தொகுதியில் மட்டும் எப்படி லிங்க் செய்கிறீர்கள்’ எனக் கேட்டோம். அதற்குச் சரியான பதிலில்லை. இப்போது மீண்டும்  தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் தெரிவித்திருக்கிறோம்” என்றார்.

“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்!”

‘‘நடவடிக்கை எடுக்கிறோம்!’’

இது குறித்து ராஜேஷ் லக்கானியிடம் பேசினோம். “ஆர்.கே.நகரில் டிசம்பர் 31-க்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி, தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்கும். தி.மு.க சார்பில் 45,000 போலி வாக்காளர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். சரிபார்க்கும்போது 17,000 போலி வாக்காளர்கள் இருப்பதாகத் தெரியவந்தது. 17,000 பெயர்களை நீக்கிவிட்டோம். மீண்டும் 23,000 போலி வாக்காளர்கள் இருப்பதாகச் சொல்லியுள்ளனர். தேர்தலுக்கு முன்பு, வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் சூழ்நிலை இருக்கிறதா என்பது குறித்துத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யணும். அதன்பிறகே தேதி அறிவிக்கப்படும்”என்றார்.

- கே.பாலசுப்பிரமணி, படங்கள்: தி.குமரகுருபரன்

ஆர்.கே.நகரில் யாருக்குப் பலம்?

ஆர்
.கே.நகரில் போட்டியிடுவதில் தினகரன் உறுதியாக இருக்கிறார் எனத் தெரிகிறது. தேர்தலுக்குள் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற எடப்பாடி - பன்னீர் அணி முயன்று வருகிறது. இதை நன்கு உணர்ந்த தினகரன், இரட்டை இலை எதிரணிக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

‘‘இரட்டை இலை எதிரணிக்கு  கைக்குக் கிடைத்தாலும் ஒரு பலனும் கிடையாது. அந்தச் சின்னம் யாரிடம் இருக்க வேண்டுமோ, அவர்களிடம் இருக்கும்போதுதான் மரியாதை’’ எனச் சொல்லியிருக்கிறார் தினகரன். கடந்த முறை தினகரனுக்குத் தேர்தல் வேலை பார்த்த வட சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.வெற்றிவேல், ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர் சந்தானம் ஆகியோர் அதே கட்சிப் பதவிகளில்  தினகரன் ஆதரவாளர்களாகவே இன்னும் தொடர்கிறார்கள்.

இந்தமுறையும் அவர்கள் தினகரனுக்காகவே  தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர். கடந்த முறை கிடைத்த தொப்பி சின்னத்தையே தினகரன் மீண்டும் கேட்டு வாங்க உள்ளதாக தொகுதி ர.ர.க்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் இங்கு  இரட்டை மின்விளக்கு சின்னத்தில் போட்டியிட்ட மதுசூதனன், மீண்டும் போட்டியிடும் மூடில் இருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக அவர் கருத்து சொன்னபோது, ‘‘தொகுதியைச் சேர்ந்தவரே ஆர்.கே.நகர் வேட்பாளர்’’ எனச் சொன்னார்.

 மதுசூதனன்தான் வேட்பாளர் என்கிற ரேஞ்சில் பூத் ஸ்லிப் கொடுப்பது, வாக்காளர்களைச் சரி பார்ப்பது என வீதிக்கு வீதி  ஆட்களைப் போட்டு, கடந்த இரண்டு மாத காலமாக வேலை பார்த்து வருகிறார்கள்.  தினகரன் அணி, இன்னும் பணிகளைத் தொடங்கவேயில்லை. மொத்த மந்திரிகளோடு, ஆட்சியும் அதிகாரமும்  சேர்ந்திருப்பது மதுசூதனனுக்கு ப்ளஸ். 

 - ந.பா.சேதுராமன்