Published:Updated:

காதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்!

காதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்!
பிரீமியம் ஸ்டோரி
காதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்!

கோவை பயங்கரம்

காதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்!

கோவை பயங்கரம்

Published:Updated:
காதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்!
பிரீமியம் ஸ்டோரி
காதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்!

காதலனை நம்பிச்சென்ற காதலி, தன் காதலனாலேயே கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் கோவையை உலுக்கியிருக்கிறது.

கோவையை அடுத்துள்ள கோயில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹைதர் ஷெரீஃப். இவருடைய 21 வயது மகள் ருக்‌ஷானாவை, தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் காணவில்லை. ஒரு வாரம் கழித்து, அக்டோபர் 23-ம் தேதி, கோவையை அடுத்த கல்லாறு பகுதியில் நிர்வாண நிலையில் ருக்‌ஷானாவின்  சடலம் மீட்கப்பட்டது. ருக்‌ஷானாவைக் கொலை செய்ததாக அவருடைய காதலன் பிரசாந்த்தை கைது செய்திருக்கிறது, போலீஸ். சினிமாவைப் போல விரிகிறது இந்தக் கொலையின் பின்னணி.

காதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்!

அழுகிய நிலையில், பாலிதீன் கவரில் சுற்றப்பட்ட மகளின் உடலைப் பார்க்க முடியாமல் ஹைதர்ஷெரீஃப் கதறிக்கொண்டிருந்தார். “என் பொண்ணு, பி.எஸ்.சி., ஐ.டி முடிச்சிருக்கா. அக்டோபர் 16-ம் தேதி, ‘நோட்டு வாங்கிக்கிட்டு வர்றேன்’னு சொல்லிட்டுப் போனவ, திரும்பி வரவே இல்ல. நாங்களும் தேடாத இடமில்லை. அவளோட செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருந்துச்சு. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ல ‘ஐ யாம் இன் பெங்களூர்’னு இருந்துச்சு. சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம். என் பொண்ணோட செல்ஃபோனை போலீஸ் ட்ரேஸ் பண்ணினாங்க. அப்போ, கடைசியா பிரசாந்த் என்ற பையன்கிட்ட பேசியிருக்கான்னு தெரிஞ்சது. எங்களுக்குப் பகீர்னு இருந்துச்சு. ஏன்னா, அவன் ஏற்கெனவே எம் பொண்ணைக் காதலிச்சவன். அவனோட கேரக்டர் சரியில்லைன்னு தெரிஞ்சு, என் பொண்ணு விலகிட்டா. அவன், விடாமல் தொந்தரவு பண்ணிக்கிட்டிருந்தான். ஒரு நாள் குடிச்சிட்டு, எங்க வீட்டுக்கே வந்து தகராறு செஞ்சான். விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை போனது. இனிமேல் என் பொண்ணு வாழ்க்கையில தலையிட மாட்டேன்னு எழுதிக்கொடுத்தான். என் பொண்ணுக்கு மாப்பிள்ளையெல்லாம் பாத்துட்டோம். அடுத்த மாசம் நிச்சயதார்த்தம். கல்யாண கோலத்துல பார்க்க வேண்டிய என் மகளை, இப்படி பண்ணிட்டான். அவனைச் சும்மா விடக்கூடாது” என்று ஆத்திரமும் அழுகையுமாகச் சொல்லிமுடித்தார்.

போலீஸாரிடம் பேசினோம். “கல்லாறுல அந்தப் பொண்ணோட சடலத்தைப் பார்த்து அதிர்ந்துட்டோம். முகமெல்லாம் சிதைஞ்சி, நிர்வாண நிலையில் இருந்துச்சு. சடலத்தை யாரும் கண்டுபிடிக்கக் கூடாதுங்கிறதுக்காகக் கல் இடுக்கு உள்ளே திணித்து, அதுமேல நிறைய கற்களைப் போட்டு மூடியிருந்தான். பிரசாந்த், ஒரு ஐ.டி கம்பெனியில சாஃப்ட்வேர் என்ஜினீயரா வேலை பார்க்கிறான். நாலு வருஷமா ரெண்டு பேரும் காதலிச்சிருக்காங்க. பலமுறை கல்லாறுக்கு அந்தப் பெண்ணைக் கூட்டிக்கிட்டுப் போயிருக்கான்.  இவங்களோட காதல், அந்தப் பொண்ணோட வீட்டுக்குத் தெரிஞ்சு, பிரச்னை ஆகியிருக்கு. அவங்க வீட்ல வேறொரு பையனோடு திருமண ஏற்பாடு பண்ணியிருக்காங்க. இதைத் தெரிஞ்சிக்கிட்ட பிரசாந்த், ‘எனக்குக் கிடைக்காதவ யாருக்கும் கிடைக்கக் கூடாது’னு நினைச்சிருக்கான். ‘கடைசியா உன்கிட்ட தனியா பேசணும்’னு சொல்லி, அந்தப் பொண்ணைக் கல்லாறுக்குக் கூட்டிட்டுப் போயிருக்கான். ரெண்டு பேரும் தனிமையில் இருந்திருக்காங்க. அப்போ, ‘நாம ரெண்டு பேரும் பிரிஞ்சிடலாம்’னு அந்தப் பெண் சொல்லியிருக்கா. ஆத்திரத்தில் கல்லால் அடித்தே அந்தப் பெண்ணைக் கொலை செய்திருக்கிறான். முகம் மட்டும் பலமாகச் சிதைக்கப்பட்டிருக்கிறது. தான் காதலித்த பெண்ணைக் கொலை செய்துவிட்டு, எந்தப் பதற்றமும் இல்லாமல் வீட்டுக்கு வந்து தீபாவளி கொண்டாடியிருக்கிறான். ஃபேஸ்புக்கில் ஆக்டிவ் ஆக இருந்திருக்கிறான். அவனுடைய மனநிலையை யோசித்தே பார்க்க முடியவில்லை” என்றார்கள் பதற்றம் விலகாமல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்!

கல்லாறு பகுதி மக்கள் சிலரிடம் பேசினோம். “இங்க நடக்கிற அக்கிரமங்கள் சொல்லிமாளாது. காட்டையொட்டின ஆளரவமற்ற பகுதி இது. அதனால, லவ்வர்ஸ் இதை ஓப்பன் லாட்ஜா பயன்படுத்துறாங்க. தினமும் ஜோடி ஜோடியா வந்துட்டுப் போறாங்க. காலேஜ் படிக்கிற வயசுலதான் இருக்காங்க. போலீஸும் இதைக் கண்டுக்க மாட்டேங்குது. இங்க வர்ற லவ்வர்ஸை மிரட்டுறதுக்குன்னே ஒரு கும்பலும் சுத்திக்கிட்டு இருக்கு. ஒரு பையனும் பொண்ணும் மறைவான இடத்துல இருக்கும்போது, அந்தக் கும்பல் அங்கே ஆஜராகும். அந்த ஜோடிக்கிட்ட பணம், நகை எல்லாத்தையும் பறிச்சுக்கிட்டுப் போயிருவாங்க. பொண்ணு சம்பந்தப்பட்ட பிரச்னை. அதனால, யாரும் புகார் பண்றதில்லை. இனியும் போலீஸ் கண்டுக்காம இருந்தா, இதுபோன்ற கொலைகள் தொடரும்” என்று எச்சரித்தார்கள்.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: க.விக்னேஸ்வரன்