Published:Updated:

ஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி!

ஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி!

நீதிமன்ற உத்தரவை மதிக்காத திருச்சி போலீஸ் கமிஷனர் அருண்

ஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி!

நீதிமன்ற உத்தரவை மதிக்காத திருச்சி போலீஸ் கமிஷனர் அருண்

Published:Updated:
ஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி!

டப்பாடியும் பன்னீரும் செருப்பு கால்களோடு நடக்கும் ஆளுயுர கட் அவுட்களுக்குக் கீழே எம்.ஜி.ஆர் படத்தை வைத்து, அந்தத் தலைவரைப் புதுக்கோட்டையில் அவமதித்தனர். திருச்சியிலோ, நீதிமன்ற உத்தரவையே புறக்கணித்துள்ளனர்.

ஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி!

‘உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர்கள் வைக்கக் கூடாது’ என அக்டோபர் 24-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  அந்த உத்தரவு வந்து 48 மணி நேரம்கூட கடக்காத நிலையில், திருச்சியில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், நீதிமன்ற உத்தரவை ஆட்சியாளர்கள் துளியும் மதிக்கவில்லை. 30-ம் தேதி நடப்பதாக இருந்த விழாவை என்ன காரணத்துக்காகவோ, முன்கூட்டியே நடத்தினார்கள். நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் தினகரன், ஸ்டாலின் ஆகியோர் நடத்திய கூட்டத்தைவிட, அதிகக் கூட்டத்தைக் காட்ட நினைத்தார்கள். அதனால், ஏற்பாடுகள் மிக பிரமாண்டம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி!

திருச்சி விமான நிலையம் முதல் நீதிமன்றம் வரை, சாலையின் இருபக்கங்களிலும் சென்டர் மீடியனிலும் கட் அவுட்களும் வளைவுகளும் அடைத்துக்கொண்டு நின்றன. நிகழ்ச்சி நடைபெற்ற ஜி.கார்னர் மைதானம் அருகில், சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் பொன்மலை சாலையை பேனர்கள் ஆக்கிரமித்திருந்தன. அ.தி.மு.க மாவட்டக் கழகம் சார்பில் வைக்கப்பட்ட பேனர்களுக்கு இணையாக ஜவஹர் என்பவர், ‘சிங்கம்’ சூர்யா பாணியில் மீசையுடன் பிரமாண்டமான கட் அவுட்டுகளை வைத்து அதகளப்படுத்தியிருந்தார். இந்த ஜவஹர் வேறுயாருமல்ல... அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன். திருச்சி அரசியல், அரசு நிர்வாகங்களில் ஜவஹர் மூக்கை நுழைத்து வருகிறார் என விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், திரும்பிய பக்கமெல்லாம் ஜவஹரின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி!

‘உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட் வைக்கக் கூடாது’ என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையிலும் எடப்பாடி, பன்னீர்செல்வம் ஆகியோரின் கட் அவுட்களும் பேனர்களும் அகற்றப்படவில்லை. திருச்சி போலீஸ் கமிஷனர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் வழக்கறிஞர் கென்னடி புகார் மனு கொடுத்தார். ஆனாலும், கட் அவுட்டுகள் அகற்றப்படவில்லை. அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம், பத்திரிகையாளர்கள் இதுபற்றி கேட்டபோது, ‘`அகற்றப்படும்’’ என ஒற்றை வார்த்தையுடன் எஸ்கேப் ஆனார். அன்றைய இரவுதான் முன்பைவிட கூடுதலான பேனர்கள் முளைத்தன. எடப்பாடி பழனிசாமி, வரும் பாதைகளில் இருந்த வேகத் தடைகள் அகற்றப்பட்டு, சாலைகள் சீரமைக்கப்பட்டன.

“விழா நடக்கும் இடத்தில் அப்படி பேனர் எதுவும் இல்லையே” எனச் சமாளித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அமைச்சர் கடம்பூர் ராஜுவோ ஒருபடி மேலே போய், “பேனர் வைப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவு இறுதித் தீர்ப்பல்ல” என்றார். விழா நடந்த அன்று விவகாரம் நீதிமன்றம் போனது. ‘அனுமதி பெற்றே 220 பேனர்கள் வைத்துள்ளோம்’ என நீதிமன்றத்தில் சொன்னது தமிழக அரசு. விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்களை அடுத்த நாளுக்குள் அகற்ற நீதிமன்றம்  உத்தரவிட்டதால் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர் ஆளுங்கட்சியினர்.

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க சார்பில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடந்த நேரத்தில், நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல் பரவின. ஆனால், அப்படி எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, ஸ்டாலின் தங்கியிருந்த ஹோட்டலுக்கே நேரில் சென்று, ‘கூட்டம் நடத்த அனுமதியில்லை’ எனக் கூறி, அனுமதி மறுப்புக் கடிதத்தை வழங்கினார் திருச்சி போலீஸ் கமிஷனர் அருண். அன்றைக்குக் கடமையாற்றுவதில் ‘கறார்’ காட்டிய அருண்தான், இன்றைக்கு உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட் வைக்கக் கூடாது என்கிற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் எடப்பாடிக்கு ஏற்ற ஜாடி ஆனார்.

ஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி!
ஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி!

எடப்பாடியை வரவேற்கவும், கூட்டத்தைத் திரட்டவும் ஆங்காங்கே குத்தாட்டம் வேறு. ஜி.கார்னர் மைதானத்தை நிரப்பிக் காட்ட வேண்டும் என்பதில் அரசுப் பணியாளர்களும் போலீஸாரும் போர்க்கால அடிப்படையில் வேலை பார்த்தார்கள். ஆட்களைத் திரட்டுவதில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும் கலெக்டர் ராசாமணிக்கும் கடும் போட்டி. குடிசைமாற்று வாரியத்தின் சார்பாக அடுத்த மாதம் ஆயிரம் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்க இருந்தார்கள். அந்தப் பயனாளிகளிடம் ‘குடும்பத்துக்கு ஐந்து பேருடன் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் வீடு’ என ராசாமணி கறார் காட்டினார். அதனால், ஆயிரக்கணக்கானோர் கூடினர். ஆனாலும், மைதானம் நிரம்பவில்லை. சிவகாசி விழாவில் நடந்ததுபோல், தீக்குளிப்பு முயற்சிகள் நடந்துவிடக் கூடாது என போலீஸ் நிறைய கெடுபிடிகளைச் செய்தது. ‘‘நிகழ்ச்சிக்கு வருபவர்கள் கையில் எதையும் கொண்டுவரக் கூடாது’’ என போலீஸ் சொன்னதால், வந்த கும்பலும் நடையைக் கட்டியது.

பேனர்களிலும் கட் அவுட்களிலும் பிரமாண்டம் காட்டிய அவர்கள், கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க தவறினார்கள். தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்தாலும், மைதானத்தில் ஆட்கள் அதிகமாக உட்காரவில்லை. விழா மேடைக்கு எடப்பாடி பழனிசாமி வந்து சேர்ந்தபோது, கூட்டம் கலையத் தொடங்கியது. ஓ.பி.எஸ் பெயரைச் சொல்லும்போதெல்லாம் அப்ளாஸ் அள்ளியது. எடப்பாடி மட்டும்தான் ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். மற்றவர்கள் எம்.ஜி.ஆர் பற்றி மட்டுமே பேசினர். அந்தப் பேச்சுகளிலும் சுவாரஸ்யமில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பேசியபோது, மேடையின் முன்வரிசையைத் தவிர மைதானம் காலியாகவே கிடந்தது.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்