பிரீமியம் ஸ்டோரி
உப்பு நீலம் - அனார்

திருட்டுச் சிரிப்பொன்றின்
குறுகுறுப்பிலிருந்த
ரகசியத்தை வரைகிறேன்
பலகோடி மகரந்தங்களால் சூழப்பட்ட
நீலத்தேன் துளை நிரம்பி
காத்திருப்பில் தழும்புகின்ற நாளில்

உப்பு நீலம் - அனார்எதனாலும் வரைந்து
முடித்துவிட முடியாத அரூபத் திடலை
வரைவதற்கான
ரகசிய வண்ணம் வளரும்
உப்புத் தீ தூரிகை ஆகிறாய்

உப்பு நீலத்தின் வெம்மை
நீலப்பாளத்தின் கண்ணாடியில்
பட்டு நெளியும் சுனையருகே
நாசியின் உஷ்ணத்திலிருந்து
என் விலா எலும்புகளில் தாவும்
மந்திரித்த சுடர் நீ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு