ஃப்ளெக்ஸ் பேனர் கலாசாரத்தில் மூழ்கிப்போன தமிழக அரசியலுக்கும், திரைத் துறைக்கும் மொத்தமாக ரிவீட் அடித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

‘உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களுடன் பொது இடங்களில் பேனர் வைக்கக் கூடாது. குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்து அதன் அழகைக் குலைக்கக்கூடாது. உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் ஃப்ளெக்ஸ், பேனர் களில் இடம்பெறக் கூடாது. இதை மீறும்பட்சத்தில் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இப்படியான உத்தரவுக்கு காரணமானவர் சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த திருலோச்சன குமாரிதான். இவர் உயர் நீதிமன்றத்தில் போட்ட வழக்கில்தான், இப்படி அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது நீதிமன்றம்.

திருலோச்சனகுமாரியிடம் பேசினோம். ‘‘அரும்பாக்கம், ராணி அண்ணா நகரில் எங்களுக்கு 375 சதுரஅடி நிலம் இருந்துச்சு. அதுல, 200 சதுரஅடி நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவர் பல வருஷத்துக்கு முன் ஆக்கிரமித்துக் கொண்டார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போனோம். 2013-ம் ஆண்டு அதில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், அந்த இடம் எனக்குச் சொந்தமானது. அதனை விற்கும் அதிகாரமும் எனக்குத்தான் உள்ளது என்று சொன்னது. அதன்பிறகும் அந்த இடத்தை என்னால் மீட்க முடியவில்லை. மீதமிருந்த 175 சதுரஅடி நிலத்தையாவது காப்பாற்றிக்கொள்ளலாம் என நினைத்து, அந்த இடத்தில் நான்கு புறமும் சுற்றுச்சுவர் எழுப்பி, தகர ஷெட் போட்டு ஒரு மெக்கானிக் கடைக்காரருக்கு வாடகைக்கு விட்டேன். பிரச்னை இன்னும் அதிகமானது. சேட்டோட சொந்தக்காரர் மதி என்கிற மதியழகன், அந்த இடத்தையும் எப்படியாவது அபகரிக்கணும்னு நெனச்சாரு. எங்களுக்குப் பல வகையில அவரு பிரச்னை கொடுக்க ஆரம்பிச்சாரு.

ஒருகட்டத்துல, அவங்க கட்சியோட ஃப்ளெக்ஸ் மற்றும் பேனர்களை என் ஷெட் வாசல்ல வெச்சாரு. அதோட வாசல்ல பந்தல் போட்டுக் கயிறுகட்டி துணியைக் காயவைக்கிறது, பென்ச் போட்டு கட்டப் பஞ்சாயத்து செஞ்சாரு. எவ்வளவோ சொல்லிப்பார்த்தோம். ‘வேணும்னா இந்த இடத்தைக் காலிபண்ணிட்டுப் போங்க’னு மிரட்ட ஆரம்பிச்சாரு. இதுபற்றி அரும்பாக்கம் காவல் நிலையத்துல புகார் கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கல. கார்ப்பரேஷனுக்கு மனு கொடுத்தோம். அவங்க இந்த ஃப்ளெக்ஸ் போர்டை எடுக்க உத்தரவிட்டாங்க. ஆனாலும், மதியழகன் எடுக்கல. ஒரு கட்டத்துல கார்ப்பரேஷன் ஆளுங்க வந்து ஃப்ளெக்ஸ் போர்டை எடுக்கப்போனாங்க. அப்போ மதியழகன், கட்சி ஆளுங்கள கூட்டிட்டு வந்து கார்ப்பரேஷன் ஆளுங்கள மிரட்டினாரு. அதனால கார்ப்பரேஷனே காவல்துறை உதவியோட ஃப்ளெக்ஸ் போர்டை நீக்கச் சொல்லுச்சி. ஆனா, அரும்பாக்கம் காவல் நிலையத்துல இருந்து ஒரு போலீஸ்காரங்களும் வரவில்லை. அதனால, ஃப்ளெக்ஸ் போர்டை எடுக்க முடியல. அதன்பின், மதியழகன்கிட்ட இருந்து மிரட்டல்கள் அதிகமா வர ஆரம்பிச்சுது. இதுக்கு, அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் கண்ணனும் உடைந்தையா இருந்தாரு. ‘ஒழுங்கா கேஸை வாபஸ் வாங்கு’னு பயமுறுத்துனாங்க.

20-09-2017 அன்று ராத்திரி ஏழரை மணிக்கு மஃப்டியில இன்ஸ்பெக்டர் கண்ணன், மதியழகன், அவங்க ஆளுங்க கொஞ்ச பேர் இந்த வீட்டுக்கு வந்து மிரட்டினாங்க. மதியழகன், என்னை அடிச்சி வெள்ளை பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டுப் போனாரு. என் பையன் போலீஸுக்குத் தகவல் கொடுத்தான். ஆனா, போலீஸ் வரல. இந்தப் பிரச்னை தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனருக்குப் புகார் அனுப்பினேன். அவரும் எந்தப் பதிலும் சொல்லலை. இது எல்லாத்துக்குமே என்கிட்ட ஆதாரம் இருக்கு. அதனால, மதியழகன், இன்ஸ்பெக்டர் கண்ணன், கார்ப்பரேஷன் கமிஷனர், ஷெனாய் நகர் போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர் இவங்க ஐந்து பேர் மேலயும் உயர் நீதிமன்றத்துல கேஸ் போட்டேன். வழக்க விசாரிச்ச நீதிபதி, உடனடியா எங்க இடத்துல இருக்குற ஃப்ளெக்ஸ் மற்றும் பேனர்களை அகற்றணும், உயிருடன் இருக்கும் கட்சித் தலைவர்களின் படங்களைப் பதித்து ஃப்ளெக்ஸ் மற்றும் பேனர் வைக்கக் கூடாது. வீட்டின் அழகைப் பாதிக்கும் எந்த விளம்பரமும் வீட்டின் சுவரில் செய்யக் கூடாது என உத்தரவிட்டார்.

இப்ப கார்ப்பரேஷன்ல இருந்து அந்த இடத்துல கட்டடம் கட்டுறத நிறுத்தச்சொல்லி ஆர்டர் வந்திருக்கு. அந்த இடத்துல கட்டடம்லாம் கட்டவே இல்லை. பல வருஷமா தகர ஷெட் மட்டும்தான் போட்டு வெச்சிருக்கோம். ஆனா, இப்படி ஓர் ஆர்டரை வாங்கி எங்களை அந்த இடத்துக்கு வர விடமா தடுத்திருக்காரு மதியழகன். என் பையன் கரிகாலன் வக்கீல். ஒரு வக்கீல் வீட்டுக்கே இந்த நிலைமைன்னா, சாதாரண பொதுமக்களா இருந்தா இன்னும் என்னவெல்லாம் பண்ணிருப்பாங்க.” என்றார்.

திருலோச்சனகுமாரி குற்றம்சாட்டிய மதியழகனிடம் பேசினோம். அவர், “நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில், அண்ணா நகர் துணைச் செயலாளராக இருக்கேன். அவங்க சொல்றதெல்லாம் சுத்தப்பொய். அவங்க வீட்டுக்கு முன்னாடி நான் பேனர் வைக்கல. பொது இடத்துல, அதுவும் ஒரு ஓரமாதான் பேனர் வெச்சேன். கட்சி சார்பாக ஒரு பேனர் வைக்கிறது தப்பா? அவங்க இருக்குற வீடுலாம் எனக்குத் தெரியாது. நானும் இன்ஸ்பெக்டர் கண்ணனும் அவங்களைத் தேடிப்போய் அடிச்சி, மிரட்டினதா சொல்றாங்க. நான் ஒரு சாதாரண ஆளு, எனக்கு எப்படி அவங்களை மிரட்டுற அளவுக்குத் தைரியம் வரும். அவங்க பையன் ஒரு வக்கீல். அதனால இப்படி ஒரு வழக்கை ஜோடிச்சிருக்காங்க. அதுவும் போலீஸ் கமிஷனர் மேலேயே கோர்ட்ல புகார் கொடுத்திருக்காங்க. கோர்ட் உத்தரவுக்குப் பிறகு, எல்லா பேனர்களையும் அப்புறப்படுத்தி விட்டேன். மற்றபடி அவர்கள் சொன்னது அத்தனையும் பொய். அவங்க இடத்துக்கு வர்றதுக்கு அவங்களை நான் ஏன் தடுக்கணும்? எனக்கு அப்படி ஒரு அவசியமும் இல்லை. இந்தப் பிரச்னை சம்பந்தமா அண்ணன் திருமாவளவன் நேரில் சந்திக்க வரச்சொல்லியிருக்கிறார். போய் பாக்கணும்” என்றார்.

ஃப்ளெக்ஸ் பிரச்னை முடிந்துவிட்டது. ஆனால், அதற்குக் காரணமான வழக்குக்குப் பின்னால் இருக்கும் பிரச்னைகள் இன்னும் முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

- ஜெ.அன்பரசன்,
படங்கள்: வீ.நாகமணி