ஜெயலலிதாவின் கைரேகை வழக்கு, திடுக்கிடும் திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. ‘திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றது செல்லாது’ என அறிவிக்க வேண்டும் என தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் தாக்கல்செய்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கக் கோரும் ஃபார்ம் பி விண்ணப்பத்தில் வைக்கப்பட்ட கைரேகை ஜெயலலிதாவுடையதுதானா... அது உண்மை எனில் அவர் சுயநினைவுடன்தான் அதை வைத்தாரா... அதற்கு சான்றொப்பமிட்ட டாக்டர் பாலாஜிக்கு அதற்கான உத்தரவை யார் வழங்கினார்கள்... இது, சட்ட விதிகளின்படி வீடியோ பதிவு செய்யப்பட்டதா... அரசு அதிகாரிகள் உடன் இருந்தார்களா... கைரேகையைத் தேர்தல் கமிஷன் ஆய்வு செய்ததா? எனப் பல கேள்விகளை, வழக்கில் ஆஜரான திருப்பரங்குன்றம் தேர்தல் அலுவலர் ஜீவா, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் ஆகியோரிடம் சரவணனின் வழக்கறிஞர் அருண்குமார் ஏற்கெனவே கேட்டுள்ளார்.

இந்த நிலையில், வழக்கின் முக்கிய நபரான டாக்டர் பாலாஜி, விசாரணையில் ஆஜரானார். அப்போது அவரிடம் நடந்த குறுக்கு விசாரணை அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றதாகச் சான்று கையெழுத்திட்ட அதே தேதியில் தான், பாலாஜியும் நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்தார் என்பது குறிப்பிடும்படியான ஒற்றுமை.

குறுக்கு விசாரணையில் பாலாஜி அளித்துள்ள பதில்கள், சரவணன் தரப்புக்கு வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி பாலாஜி என்ன சொன்னார்?

‘‘ஜெயலலிதாவிடம் கைரேகை பதிவுசெய்வதற்கு, அரசின் அனுமதி வழங்கப்பட்டதா?’’ என்ற கேள்விக்கு, ‘‘இல்லை’’ என்ற பாலாஜியிடம், ‘‘ஜெயலலிதாவிடம் 20 கைரேகைகள்தானே வாங்கியிருக்க வேண்டும். ஆனால், 28 கைரேகைகள் வாங்கியிருக் கிறீர்கள். அந்த 28 கைரேகைகளுக்கும் சான்றொப்பம் போடாமல், வேட்புமனுவில் வைக்கப்பட்ட கைரேகைக்கு மட்டும்தான் போட்டீர்களா?’’ என்றதற்கு, ‘‘இல்லை, எல்லா கைரேகைகளுக்கும் சேர்த்து ஒரே சான்றொப்பம் போட்டிருக்கிறேன்’’ என்றார் பாலாஜி. உடனே, ‘‘மீதி படிவங்களெல்லாம் எங்கே?’’ என்ற கேள்விக்கு ‘‘தெரியவில்லை’’ என்றார்.

‘‘கைரேகைக்குச் சான்றாவணம் கொடுத்த தேதியில், அப்போதைய அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட யாரையாவது சந்தித்தீர்களா?’’ எனக் கேட்டதற்கு, ‘‘நான் கையெழுத்துப் போடுவதற்கு உள்ளே சென்றபோது, ஜெயலலிதாவின் படுக்கையின் அருகில் சசிகலா நின்று கொண்டிருந்தார். மற்ற யாரையும் சந்திக்கவில்லை’’ என்றவர், ‘‘ஜெயலலிதாவிடம் கைரேகைகளை வாங்கியது யார் என எனக்குத் தெரியாது, கைரேகை பெற்ற படிவங்களை அப்போலோ மருத்துவர்களிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்’’ என்றார்.

‘‘ஜெயலலிதாவைச் சென்று பார்த்ததற்குப் புகைப்படமோ, வீடியோவோ எடுக்கப்பட்டதா... மருத்துவமனைப் பதிவேட்டில் குறிப்பு இருக்கிறதா... இதற்காக அப்போலோ வழங்கிய ஆவணம் எதுவும் உள்ளதா?’’ என்ற கேள்விகளுக்கு, ‘‘எதுவுமில்லை” என்றார்.

இந்த நேரத்தில்தான், முக்கியமான கேள்வியைக் கேட்டார் வழக்கறிஞர். ‘‘நீங்கள் மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவைப் பார்க்கவே இல்லை. அதற்கான எந்த ஆவணங்களும் தங்களிடம் இல்லை. நீங்கள் உள்ளே போகவே இல்லை. போயிருந்தால் உங்களால் ஆவணத்தைக் கொடுத்திருக்க முடியுமே. அடையாறில் உங்களின் பத்மப்ரியா நர்சிங் ஹோமுக்குச் சிலர் வந்து, உங்களிடம் இந்தக் கைரேகை படிவத்தில் கையெழுத்து வாங்கிப் போயிருக்கிறார்கள்” என மடக்கினார் வழக்கறிஞர்.

‘‘இல்லை, நான் அப்போலோ மருத்துவமனையில்தான் கையெழுத்திட்டேன்’’ என்ற பாலாஜியிடம், ‘‘ஜெயலலிதா நுரையீரல் செயல்பட முடியாத நிலையில் மோசமான சுவாசக் கோளாறில் இருந்தாரா... அவர் வென்டிலேஷனில் வைக்கப் பட்டிருந்தாரா... அவருக்குத் தொண்டை துளைக் குழாய் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்ததா?’’ என்றதற்கு, ‘‘வென்டிலேஷனில்தான் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு டிரக்யாஸ்டமி செய்யப்பட்டிருந்தது’’ என்றார்.

‘‘ஜெயலலிதாவின் கைரேகையைப் பதிவு செய்வதற்காக இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதற்கு, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக உங்களை நியமிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதா...அப்போது இருந்த தலைமைச் செயலாளருடன் இதுபற்றி நீங்கள் பேசிய பிறகுதான் கைரேகையைப் பதிவு செய்தீர்களா?’’ என அடுத்த கேள்வி வீசப்பட்ட போது, ‘‘இல்லை. எனக்கு அந்தப் பதவி முறையாகத்தான் வழங்கப்பட்டது’’ என்றார்.

‘‘சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் நட்பாக இருந்ததால் இந்தப் பதவி நியமனத்துக்கு வேண்டிய விதிகள் மீறப்பட்டதா?’’ என்றதற்கு, ‘‘இல்லை’’ என்றவரிடம், ‘‘உயிருடன் இருப்பவர் வைக்கும் கைரேகையில், ரேகைகளின் ஓட்டத்தை எளிதாகப் பார்க்க முடியும். ஜெயலலிதா வைத்த கைரேகையில் ரேகை ஓட்டம் தெளிவாக தெரியவில்லை. வெறும் புள்ளி புள்ளியாய் இருப்பதால், அது உண்மையில் ஜெயலலிதா இறந்தபிறகு எடுக்கப்பட்டது. நீங்கள் கைரேகை பெறுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். அவர் இறந்து சில நாள்கள் கழித்துதான் இந்த ரேகை எடுக்கப்பட்டிருக்கிறது?’’ என்றார் வழக்கறிஞர். ‘‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என்றார் பாலாஜி.

‘‘ஜெயலலிதா இறந்த பிறகு கைரேகை வாங்கப்பட்டதா?’’ போன்ற கேள்விகள் கேட்கப்பட்டபோது, அ.தி.மு.க தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்தடுத்து விசாரணை நடைபெற உள்ளது. வழக்கு, பல மர்மங்களை உடைக்கலாம்.

- செ.சல்மான்