உணவுப் பாதுகாப்பு (இல்லாத) சட்டத்தில் தலையைக் கொடுத்திருக்கும் தமிழக அரசு, மானிய விலையில் வழங்கும் சர்க்கரையின் விலையை இரண்டு மடங்காக்கி, கசப்பை விழுங்க வைக்கிறது. சர்க்கரையில் தொடங்கி, பிறகு ஒவ்வொரு பொருளுக்கும் மாறி, இறுதியில் பொது விநியோகத் திட்டத்தையே முற்றிலும் ரத்துசெய்துவிடும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது தமிழக அரசு.

உறுதியாக எதிர்த்த ஜெயலலிதா!

உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ம் ஆண்டில் முந்தைய காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்பட்டது. இது சட்டமாக்கப்படுவதற்கு முன்பே, இதைக் கடுமையாக எதிர்த்த ஜெயலலிதா, 2011-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், “மக்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தும் மாநில அரசுகளுக்கு எதிராக, அவர்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் செயல்படக்கூடாது” என்றார். அதன் தொடர்ச்சியாக, 2013 ஆகஸ்ட் 24, 2014 ஜூன் 3, 2015 ஆகஸ்ட் 7 ஆகிய தேதிகளில் எழுதிய கடிதங்களிலும், “அதிகளவு தானியங்களை, தொடர்ந்து வழங்க வேண்டும். கிலோ மூன்று ரூபாய்க்கு அரிசி தர வேண்டும்” என்றும் கூறியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கைகளை மன்மோகன் சிங் அரசும், பிறகு வந்த மோடி அரசும் கண்டுகொள்ளவில்லை. மாறாக, ‘உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் தமிழக அரசு கையெழுத்துப் போடவேண்டும்’ என்றார்கள். ஜெயலலிதாவோ, அதை ஏற்கவில்லை. எனவே, மானிய விலையில் தரும் ரேஷன் அரிசியின் விலையை மத்திய அரசு உயர்த்தியது. அப்போதும்கூட, அரிசி, பருப்பு, உளுந்து போன்ற பொருட்களை மானிய விலையில் ரேஷன் கடைகளில் வழங்கினார் ஜெயலலிதா. இதெல்லாம், ‘அம்மா வழியில் நடக்கும் அரசு’ என்று சொல்லும் இன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெரியுமா?

மண்ணைப்போடும் திட்டம்!

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோதுதான், தமிழகத்தின் நலன்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசிடம் அடகுவைக்கப்பட்டன. 2016 அக்டோபரில் ஜெயலலிதா, அப்போலோவில் இருந்த நேரத்தில்தான், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. அதன்பின் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அப்போது முதல்வரின் பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவது என முடிவெடுத்தார்கள். அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்தும்போது கூடுதல் செலவினம் ஏற்பட்டாலும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் தொடர்ந்து பயன்பெறும் வகையில் இச்சட்டம் செயல்படுத்தப்படும்’’ என உறுதியளித்தார்கள். அந்த வாக்குறுதியை, பின்னர் வந்த மாதங்களில் தமிழக அரசு மீறியது.

பருப்புக்கு கல்தா!

உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில நாள்களிலேயே சிறப்பு விநியோகத் திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவை நிறுத்தப்பட்டன. இப்போது, மைசூர் பருப்புதான் வழங்கப்படுகிறது. உளுந்தம் பருப்பு வழங்கப்படவே இல்லை.

20 கிலோ அரிசிக்குப் பதில், நகர்ப்புறங்களில் பத்து கிலோ அரிசியும், பத்து கிலோ கோதுமையும் வழங்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் 15 கிலோ அரிசியும், ஐந்து கிலோ கோதுமையும் தருகின்றனர். ‘எந்தவிதப் பாதிப்பும் வராது’ என்றவர்கள், அரிசியைக் குறைத்து கோதுமையை வழங்குவது ஏன்?

ஸ்மார்ட் கார்டு திட்டம் அமலுக்கு வந்தபோது அரசு வெளியிட்ட அரசாணையில், பல்வேறு பிரிவினருக்கு இனிமேல் ரேஷன் பொருள்கள் வழங்கப்படாது என்றார்கள். அரசு ஊழியர்களாக இருந்தாலோ,சொந்த வீடு இருப்பவர்களுக்கோ, ரேஷன் பொருள்கள் இல்லை எனச் சொன்னார்கள். உடனே, இதை அவசர அவசரமாக மறுத்தார்கள்.

இப்போது சர்க்கரை!

இப்போது ரேஷன் சர்க்கரை விலை இரண்டு மடங்குக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. ‘ஆபத்து வருகிறது’ என அரசாணையைக் கசியவிட்டு, பிறகு அதை மறுப்பது இந்த அரசுக்கு வழக்கமாகிவிட்டது. வேறு பிரச்னைகளில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, முந்தைய அரசாணையை அமல்படுத்துவது என்பதுதான் இந்த அரசின் வாடிக்கை.

2016 நவம்பர் 1-ம் தேதி உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியபோது, ‘எந்தவிதப் பாதிப்பும் வராது’ எனச் சொன்னவர்கள்தான், ஓர் ஆண்டு கழித்து இப்போது சர்க்கரைக்கான மானியத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவை அமல்படுத்தத் துணிந்துவிட்டார்கள். இப்போதும் உணவு அமைச்சர் காமராஜ், “அந்தியோதயா, அன்னயோஜனா திட்டத்தில் உள்ளவர்களுக்குத் தொடர்ந்து 13.50 பைசா விலையில் சர்க்கரை வழங்கப்படும்” என்கிறார். ஆனால், இந்தத் திட்டத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை, மொத்தக் குடும்ப அட்டைகளில் பத்து சதவிகிதம்தான்.

ரேஷன் கடைகளைப் படிப்படியாக அரசு மூடப்போகிறது என்பதை ‘ரேஷன் கடை இனி இருக்குமா?’ என்ற தலைப்பில் 15.3.2017 தேதியிட்ட ஜூவி இதழில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். இப்போது அதை நோக்கிதான் அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது.

‘‘நுகர்வோருக்குப் பாதிப்பு!’’

சர்க்கரை விலை உயர்வு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என சி.ஐ.டி.யு-வின் கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். “உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தபோதே இதனால் நன்மை இருக்காது என்றோம். சர்க்கரை கசக்கப்போகிறது எனச் சொன்னோம். அந்தியோதயா அன்னயோஜனா திட்டப் பயனாளிகளுக்கு மட்டும்தான் மானிய விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. அரசே மானியத்தைக் கூடுதலாகக் கொடுக்க முடியும். ஆனால், இப்போது நிதி நிலைமை சரியில்லை. அதனால்தான் சர்க்கரை விலையை உயர்த்தியிருக்கின்றனர். இதனால், பெரும்பாலானவர்கள் வெளிச்சந்தையில் சர்க்கரை வாங்கிவிடுவார்கள். இப்படி ரேஷன் கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை, குறைக்கத்தான் அரசு இப்படிச் செய்கிறது. மானிய விலையில் உணவுப் பொருள்கள் வழங்குவதை முற்றிலும் கைவிடுவதுதான் அரசின் திட்டம். எந்த மாநிலத்துக்கும் மத்திய அரசு, சர்க்கரைக்கு மானியம் வழங்கவில்லை. கேரளாவில் அந்த மாநில அரசே சர்க்கரையை மானிய விலையில் வழங்குகிறது.அடுத்த கட்டமாக, ‘சர்க்கரைக்கான மானியத்தை வங்கியில் போட்டுவிடுகிறோம். நீங்கள் வெளிச்சந்தையின் வாங்கிக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லப்போகிறார்கள். ஒட்டு மொத்தமாக ரேஷன் திட்டத்தைக் காலிசெய்யப்போகிறார்கள்.

மூன்று அறைகள் கொண்ட வீடு, ஆண்டுக்கு ஒரு லட்சம் வருமானம் உள்ளவர்கள், அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர் ஆகியோருக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பிறகு அதை மறுத்தனர். ஆனால், படிப்படியாக அதை நோக்கித்தான் மக்களை இந்த அரசு நகர்த்துகிறது” என எச்சரிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

உலக வர்த்தக ஒப்பந்தம்!

ஏ.ஐ.டி.யூ.சி கூட்டுறவுத் தொழிலாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த, வி.முத்தையாவிடம் பேசினோம். “உலக வர்த்தக ஒப்பந்தப்படி, உணவுதானியச் சந்தையைத் தனியார் நிறுவனங்கள் கைப்பற்ற வசதியாக, பொதுவிநியோகத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். மத்திய அரசு, அரிசி விலையை உயர்த்தியபோது, தமிழகத்தில் அரசே அரிசியைக் கொள்முதல் செய்து வழங்கியது. அதேபோல் சர்க்கரையையும் வழங்க வேண்டும். தமிழகத்தில் ரேஷன் கடை சிறப்பாக செயல்படுவதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில்தான் சிறப்பு பொது விநியோகத் திட்டம் என்ற பெயரில் மானிய விலையில் பருப்பு வகைகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில், 18 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் தனியார் சர்க்கரை ஆலைகளும் இருக்கின்றன. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டாலும்கூட, இந்த ஆலைகளில் சர்க்கரையை அரசே கொள்முதல் செய்து, வழக்கமான மானிய விலையில் கொடுக்கலாம். ஆனால், மத்திய அரசை எதிர்க்கத் துணிவில்லாமல் இப்போதைய அரசு இருக்கிறது. தமிழக அரசு நினைத்தால், மக்களுக்குச் சேவை செய்ய முடியும். மக்கள் நலன் அரசாக, அம்மாவின் அரசாக இருந்தால் இதைச் செய்ய வேண்டும்” என்றார்.

சர்க்கரை கசக்க ஆரம்பித்துள்ளது.

- கே.பாலசுப்பிரமணி
படங்கள்: ப.பிரியங்கா