தமிழ் ஆய்வுக்காக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், ‘சங்கத் தமிழ் இருக்கை’ அமைக்க, தமிழக அரசு 10 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் விஷால் என அடுத்தடுத்துப் பலரும் நிதியுதவி வழங்கி வருகிறார்கள். தமிழ் இருக்கை அமைக்க தேவையான 39 கோடி ரூபாயில் 30 கோடி ரூபாய் திரண்டுள்ள நிலையில், ஹார்வர்டு தமிழ் இருக்கையை வரவேற்றும், விமர்சித்தும், விவாதம் நடந்துவருகிறது.

போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியரும் எழுத்தாளருமான தமிழவன், “உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்றவையெல்லாம் உலக அளவிலான தமிழாய்வு நிறுவனங்களாக அமையவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டவை. தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்ற பல்கலைக்கழகங்களைப் போல முதுநிலை பட்டப்படிப்பைக் கற்பிக்கும் நிறுவனம் என்கிற அளவில் சுருங்கிவிட்டது. தமிழைச் செம்மொழியாக அறிவிப்பதற்கு முன், அதற்கான ஆவணங்களை மத்திய அரசிடம் அளித்தவர் அமெரிக்கப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட். அவர் பணியாற்றும் பெர்க்கிலி பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை மூடப்படும் நிலைமையில் இருக்கிறது. அந்தத் துறைக்கு, இப்படியான உதவிகளைச் செய்தால், தமிழ் உயராய்வுக்கு நிச்சயம் பயன்படும். அதைவிட்டுவிட்டு, ஹார்வர்டு இருக்கையைப் பெரியளவில் கொண்டாடுகிறார்கள். இங்கு நடந்துள்ள தமிழாய்வின் தொடர்ச்சியாகத்தான் எந்த அயல்நாட்டு ஆய்வுகளும் இருக்கமுடியும். தமிழ் இருக்கை, தமிழைக் கற்பிக்கும் அளவுக்குத்தான் இருக்கப்போகிறதா, அல்லது வேறு புதிய தன்மையில் தமிழாய்வுத் துறையாக இருக்கப்போகிறதா என்பதைத் தெளிவுபடுத்திவிட்டு, நிதி எனும் பேச்சுக்கு வரவேண்டும்” என்கிறார்.

இளம் தமிழியல் ஆய்வாளர்களிடம் பேசுகையில் மகிழ்ச்சியையும், எச்சரிக்கை உணர்வையும் ஒருசேர வெளிப்படுத்துகிறார்கள்.

“தமிழ் உயராய்வு என்பது ஆழமாகச் செல்லும்போது இயல்பாகவே மொழியினம், தேசிய இனம் தொடர்பான புதுப்புது வெளிப்பாடுகளைக் கொண்டுவரும். கடந்த 65 ஆண்டுகளாக, தமிழ் உயராய்வில் மத்திய - மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை. வெளியிலிருந்துதான் முயற்சி நடக்கவேண்டும் எனும் நிலையில், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குத் தமிழக அரசு நிதியுதவி அளித்திருப்பது பயனுள்ளது. இதன் மூலம், ஆழமான முறையியலும் பல்துறை அறிவும் சார்ந்த உலகத்தரமான ஆய்வுகள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டாகும்” என்கிறார் தமிழியல், பண்பாட்டியல் ஆய்வாளர் கஜேந்திரன்.

செம்மொழித் தமிழை உலக அளவுக்குக் கொண்டுபோவதில் ஒரு புள்ளியை நகர்த்தினாலும், ஹார்வர்டு தமிழ் இருக்கையால் நிச்சயம் பலன் உண்டு.

- இரா.தமிழ்க்கனல்