“இந்தப் பகுதியில, 500 குடும்பங்களுக்கு மேல இருக்கோம். நாங்க இல்லைன்னா ஊரே நாறிடும். ஆனா, எங்களை எவ்வளவு நாத்தத்துல வெச்சிருக்காங்க பாருங்க. ‘குப்பை அள்ளுறவங்க தானே... குப்பைக்குள்ளே குடியிருக்க மாட்டாங்களா’னு நெனைக்கிறாங்க. எங்களை யாருமே மனுஷங்களா மதிக்கிறது இல்லைங்க. டெங்குவை ஒழிக்க இங்கே எந்த நடவடிக்கையும் எடுக்கலை” என்று குமுறுகிறார்கள், கோவை சி.எம்.சி. காலனியில் வசிக்கும் மக்கள்.

கோவை கலெக்டர் அலுவலகத்துக்குப் பின்புறம் சி.எம்.சி காலனி உள்ளது. இது, துப்புரவுப் பணியாளர்கள் வசிக்கும் பகுதி. ஒட்டுமொத்த ஊரின் சுகாதாரத்தையும் பராமரிக்கிற தொழிலாளர்களின் குடும்பங்கள், குப்பையும் சாக்கடையும் சூழ்ந்த பகுதியில் வசிக்கிறார்கள். அந்தப் பகுதியில் டெங்கு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அறிந்து, அங்கு விரைந்தோம்.

“சி.எம்.சி காலனி மட்டுமில்லைங்க... உக்கடம், காமராஜபுரம், காந்திபுரம், சித்தா புதூர், சாய்பாபா காலனி என எங்க மக்கள் வசிக்கிற எல்லா பகுதிகளிலும் இதுதான் நிலைமை. அரை கிலோ மீட்டருக்குக் கொசு பறக்கும்ங்கிறாங்க. அப்படின்னா, இங்கே உற்பத்தியாகுற கொசுக்களெல்லாம் கலெக்டர் ஆபிஸுக்குப் போகாதா? அந்த அறிவுகூட அவங்களுக்கு இல்லையா? அதுக்காகவாவது இந்தப் பகுதியில கொசுமருந்து அடிக்க மாட்டாங்களா? ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? இவங்க அடிக்கிறது, கொசுமருந்தே இல்லை. இது, எங்களுக்கு மட்டும்தானே தெரியும்’’ என்று ஒருவர் சொல்ல, நமக்குத் தூக்கிவாரிப்போட்டது.

‘‘ஆமாங்க. எல்லாம் பித்தலாட்டம். உட்கார்ந்திருக்குற கொசுக்களை எழுப்பிவிடுற வேலையை மட்டும்தான் இவங்க செய்யுறாங்க. இந்த மருந்தால, எந்தக் கொசுவும் சாகாது. லார்வாக்களை அழிக்கிறதுக்கு வீடுவீடா போய், நல்ல தண்ணி தேங்கியுள்ள இடங்கள்ல அபேட்ங்கிற மருந்தைத் தெளிக்கணும். அது விலை அதிகம். ஒரு லிட்டர் ஆயிரம் ரூபாய். ஒரு லிட்டர் தண்ணிக்கு ரெண்டு மில்லி அபேட் கலந்து தெளிச்சா போதும். லார்வாக்கள் அழிஞ்சிரும். அதை மாநகராட்சி செய்றதில்லை. நான் ரெண்டு வருஷமா மலேரியா டிபார்ட்மென்ட்ல இருக்கேன். இதுவரை, அந்த மருந்தை என் கண்ணுலகூட காட்டுனது இல்லை. அந்த மருந்துக்குப் பதிலா, வெறும் ப்ளீச்சிங் பவுடர்களைத்தான் தர்றாங்க. ரெண்டும் வெள்ளையாத்தான் இருக்கும். ப்ளீச்சிங் பவுடரைத் தண்ணியில கலக்கி அபேட் மருந்துனு பொய் சொல்லி மக்களை ஏமாத்துறாங்க. இதுல ஹெல்த் இன்ஸ்பெக்டர்களும், எஸ்.ஓ-க்களும் எக்கச்சக்கமான கமிஷன் அடிக்கிறாங்க. மருந்தை வாங்காமலேயே வாங்கின மாதிரி கணக்குக் காட்டுறது, வாங்கின மருந்தை பிரைவேட் கம்பெனிகள்கிட்ட காசு வாங்கிகிட்டு கொடுத்துடுறதுனு இவுங்க தில்லுமுல்லுகளைச் சொன்னா ஊரே நாறிடும்.

சில சானிட்டரி இன்ஸ்பெக்டர்களோ, சினிமா தியேட்டர், மால், கல்யாணம் மண்டபம் மாதிரியான இடங்கள்ல கொசுமருந்து அடிக்கிறாங்க. அதுக்காக, ஆயிரக்கணக்குல பணம் வாங்குறாங்க. ஆமாம் சாமி போடுற துப்புரவுப் பணியாளர்களை வெச்சி, ராத்திரியோட ராத்திரியா அந்த வேலையை முடிச்சிடுறாங்க. அங்கெல்லாம் ஒரிஜினல் மருந்து போகுது. மக்களோட பணத்துல சம்பளம் வாங்கிட்டு, பொதுமக்கள் பணத்துல வர்ற மருந்தைப் பொது மக்களுக்குப் பயன்படுத்தாம தனியார் கம்பெனிகளுக்குக் கொடுத்துக் காசு பாக்குறாங்க. டெங்கு இவ்வளவு தீவிரமாகியும், இவ்வளவு பேர் செத்தும், இவுங்க திருந்தவே இல்லை. இதுதான், வேதனையா இருக்கு. இதை வெளியில சொன்னா எங்க வேலை போயிடும்’’ என்றார்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் சிலர்.

மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயனிடம் பேசினோம். “அப்படியெல்லாம் இல்லையே. நான் தினமும் விசிட் போகும்போது மருந்து தெளிக்கிறாங்களே’’ என்றவர், மேற்கொண்டு நகர சுகாதார அதிகாரியிடம் பேசிக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு, தொடர்பைத் துண்டித்தார்.

கோவை தலைமைச் சுகாதார அதிகாரி சந்தோஷிடம் பேசினோம். “நீங்க சொல்ற மாதிரியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. இந்தச் சமயத்துல இப்படி சொன்னா பரபரப்பாகும்னு இப்படி யாரோ கிளப்பிவிட்ருக்காங்க. டெங்கு கொசுவைக் கன்ட்ரோல் பண்ண, நாங்க உயிரைக் கொடுத்துப் போராடிக்கிட்டு இருக்கோம். கோவையில மட்டும் இதுவரை 28 லட்சம் அபராதம் வசூலிச்சிருக்கோம். அபராதத்துக்குப் பயந்துகிட்டாவது சுற்றுப்புறங்களை மக்கள் சுத்தமா வெச்சுக்குவாங்க. அதுக்காகத்தான், இந்த நடவடிக்கை. கொசுமருந்து அடிச்சவுடன், கொசு ஒழிஞ்சிரும்னு எதிர்பார்க்குறது தப்பு. நீங்க சொல்ற மாதிரி அந்த மருந்து விலை அதிகம் என்பதால, தேவையான பகுதிகளுக்கு மட்டும் கொடுத்துக்கிட்டு இருக்கோம்’’ என்றார்.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்