கடைமடையான தஞ்சை மண்டலத்தை உலகின் மிகச் சிறந்த வேளாண் பூமியாக்கியதில் சோழர்களின் பங்கு முக்கியமானது. ஒருங்கிணைந்த தஞ்சையில், நரம்புமண்டலத்தைப்போல பிணைந்துகிடக்கிற பெரும்பாலான கிளை ஆறுகளையும், வாய்க்கால்களையும் உருவாக்கியது ராஜராஜ சோழன்தான். தம் ஆட்சிக்காலத்தில், பிற வணிகங்களுக்குத் தந்த முக்கியத்துவத்தைவிட, வேளாண்மையைப் பிரதானத் தொழிலாக அங்கீகரித்து, பல்வேறு சலுகைகளை அளித்து, வளர்த்தெடுத்தவன் ராஜராஜன்.

“ராஜராஜ சோழனுக்காக நடத்தப்பட்ட 1,032-வது சதய விழாவுக்கு, வேளாண் பூமியிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை உறிஞ்சி, தஞ்சை மண்டல வேளாண்மையை அழிக்கத் துடிக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடமிருந்து ஏழு லட்சம் ரூபாய் நன்கொடை வாங்கி, ராஜராஜனை மட்டுமின்றி, ஒட்டுமொத்த விவசாயிகளையும் அரசு அவமானப்படுத்திவிட்டது” எனக் குமுறுகிறார்கள் டெல்டா விவசாயிகள்.

ராஜராஜனின் சதய விழா அக்டோபர் 29, 30 தேதிகளில் தஞ்சைப் பெரியகோயில் வளாகத்தில் நடைபெற்றது. கோயிலைச் சுற்றி எல்லா இடங்களிலும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விளம்பரங்கள் இடம்பெற்றிருந்தன. ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தஞ்சைப் பெரியகோயில் மீட்புக்குழுவினர், இந்த விளம்பரங்களைக் கண்டு கொதித்துவிட்டார்கள்.

தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மிகுந்த ஆதங்கத்தோடு நம்மிடம் பேசினார். “ராஜராஜன், தன் ஆட்சிக்காலத்தில் எவ்வளவோ மானியங்களையும் நிவந்தங்களையும் அள்ளிக் கொடுத்திருக்கிறான். தன் தேசத்தின் பிரதானத் தொழிலாக வேளாண்மையை அங்கீகரித்தவன் ராஜராஜன். அதற்கு ஏற்பட்டத் தடைகளையெல்லாம் வென்று விவசாயிகளைக் காத்தவன். அதெற்கெல்லாம் தான் எழுப்பிய பெரிய கோயிலிலேயே ஆதாரங்களைப் பதிந்துவிட்டுச் சென்றிருக்கிறான். அவனுடைய சதய விழாவைக் கொண்டாட தமிழக அரசால் நிதி ஒதுக்க முடியவில்லை என்பது மிகப் பெரும் அவமானம்.

ஓ.என்.ஜி.சி நிறுவனம், நிலத்தடிநீரையும், விவசாயத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிப்பதாக தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மக்கள் போராடி வருகிறார்கள். நெடுவாசலிலும், கதிராமங்கலத்திலும் 100 நாள்களைக் கடந்து போராட்டம் நடக்கிறது. போராட்டக்காரர்களை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்புகிறது ஓ.என்.ஜி.சி. விவசாயத்தை வளர்த்தெடுத்த தஞ்சை மண்டலத்து வேந்தனுக்காக நடத்தப்பட்ட விழாவுக்கு, விவசாயத்தை அழிக்கத் துடிக்கிற ஒரு நிறுவனத்திடம் கையேந்தி நன்கொடை வாங்கியது மிகப்பெரியக் கேலிக்கூத்து. பெரியகோயிலைச் சுற்றிலும் அந்த நிறுவனத்தின் செயலை நியாயப்படுத்துவதுபோல விளம்பரப் பதாகைகளை வைக்கவும் அனுமதித்திருக்கிறார்கள்.

‘ராஜராஜனுக்குச் சதய விழா கொண்டாட எங்களிடம் நிதியில்லை... நிதி தாருங்கள்’ எனக் கேட்டிருந்தால், எங்கள் விவசாயிகள் லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுத்திருப்பார்கள். அரசு, உடனடியாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் அளித்த ஏழு லட்சம் ரூபாயைத் திருப்பி அளிக்க வேண்டும். நான்கே நாள்களில், நாங்கள் விவசாயிகளிடமிருந்து அந்தத் தொகையைத் திரட்டி அரசுக்கு அளிப்போம். இதை ஏற்காதபட்சத்தில், தமிழக அரசு மிகப்பெரும் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்” என எச்சரித்தார் மணியரசன்.

இதுபற்றி சதய விழாக்குழுத் தலைவர் துரை திருஞானத்திடம் பேசினோம். “சதய விழா நடத்தணும்னு சொன்னாங்க... மற்றபடி, நான் எதுலயும் கலந்துக்கலை. இதுபத்தி எனக்கு எதுவும் தெரியாது. யார்கிட்ட பணம் வாங்கினாங்கன்னும் தெரியாது” என்றவரிடம், “ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடம் நன்கொடை பெறும் புகைப்படத்தில் நீங்களும் இருக்கிறீர்களே” என்றோம். “இல்லைங்க... அது பத்தி எனக்கு எதுவும் தெரியாது” எனத் தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

“இதுபோன்ற விழாக்களுக்கு நன்கொடை வாங்குவது வழக்கமான நடைமுறைதான். ஓ.என்.ஜி.சி-யிடம் நன்கொடை பெற்றதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. அரசு வழிகாட்டுதலின்படியே நன்கொடை பெறப்பட்டது” என்கிறார் கலெக்டர் அண்ணாதுரை.

அமைச்சர் துரைக் கண்ணுவைத் தொடர்பு கொண்டோம். அமைச்சரின் பி.ஏ., “எது குறித்துப் பேச வேண்டும்?” என விவரம் கேட்டுவிட்டு, திரும்ப அழைப்பதாகச் சொன்னார். அதன் பிறகு நம் அழைப்பையும் அவர் ஏற்கவில்லை.

தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க கதிராமங்கலத்தில் குழந்தைகளுடன் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களைப்போய் ஒரு எட்டுப் பார்த்துவிட்டு வர நேரமில்லை. அவர்கள் யாரை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார்களோ, அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, போஸ் கொடுக்க மட்டும் உங்களுக்கு நேரமிருக்கிறதோ?

கொற்ற வேந்தன் ராஜராஜனின் ஆன்மா உங்களை மன்னிக்கட்டும்!

- வெ.நீலகண்டன்
படங்கள்: கே.குணசீலன்