Published:Updated:

“மோகன் பார்த்துக் கொள்வான்!”

“மோகன் பார்த்துக் கொள்வான்!”
பிரீமியம் ஸ்டோரி
“மோகன் பார்த்துக் கொள்வான்!”

“மோகன் பார்த்துக் கொள்வான்!”

“மோகன் பார்த்துக் கொள்வான்!”

“மோகன் பார்த்துக் கொள்வான்!”

Published:Updated:
“மோகன் பார்த்துக் கொள்வான்!”
பிரீமியம் ஸ்டோரி
“மோகன் பார்த்துக் கொள்வான்!”

ணியில் உள்ள பத்திரிகையாளர் இறந்தால், அவரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த 50,000 ரூபாயை, இரண்டு லட்சம் ரூபாய் என 2001-ல் உயர்த்தினார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. ஆரவாரத்துடன் வெளியான அந்த அறிவிப்பு,  செயல்படுத்தப்படாமலேயே இருந்தது. நிதியுதவி கேட்டு 10 பத்திரிகையாளர்களின் குடும்பங்கள் காத்துக்கிடந்தன. அந்த விஷயத்தை அன்றைக்கு நம்மிடம் தெரிவித்த சென்னைப் பத்திரிகையாளர்கள் சங்க (எம்.யூ.ஜே)பொதுச் செயலாளர் மோகன், ‘‘அரசிடம் பல முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் பயனில்லை. இதுபற்றி ஜூ.வி-யில் எழுதுங்கள்’’ என்றார்.

“மோகன் பார்த்துக் கொள்வான்!”

அந்த 10 குடும்பங்களில், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளேட்டில் பணியாற்றிய முருகேசனின் குடும்பமும் ஒன்று. அந்தக் குடும்பத்தினரின் கருத்துகளுடன் மோகனின் பேட்டியையும் சேர்த்து, ‘நடுத்தெருவில் நிற்கும் நமது எம்.ஜி.ஆர் நிருபர் குடும்பம்!’ என 30.3.2005 தேதியிட்ட ஜூ.வி-யில் எழுதினோம். அதையடுத்து, பத்திரிகையாளர் குடும்ப நிதியை வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டார். சில குடும்பங்களுக்கு நிதி கிடைத்தது.  ‘நிதி கிடைத்தது’ என 20.4.2005 தேதியிட்ட இதழில் எழுதினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“மோகன் பார்த்துக் கொள்வான்!”

இதுபோல எண்ணற்ற போராட்டங்களைப் பத்திரிகையாளர் நலனுக்காக முன்னெடுத்த மோகன், நவம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். பத்திரிகையாளர் நலனையே உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்ட மோகன், நேர்மையான பத்திரிகையாளர் எனப் பெயரெடுத்தவர். சென்னை பிரஸ் கிளப்பில் மோகன் மறைவுக்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய ‘நக்கீரன்’ கோபால், ‘‘பத்திரிகையாளர்களின் பிரச்னைகளையெல்லாம் தன் தோள்மீது போட்டுக் கொள்வார் மோகன். ‘நம்ம பிரச்னையை மோகன் பார்த்துக் கொள்வான்’ எனக் கவலைப்படாமல் நம் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம்’’ என்றார் வேதனையுடன்.

போலி பத்திரிகையாளர்களுக்கு எதிராக செயல்பட்டது முதல் பத்திரிகையாளர் சங்கங்களின் தேர்தல்களை நடத்தி, அவற்றை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பதுவரை அவருடைய போராட்டம் ஓயவில்லை. மோகன் மறைவுக்கு, பிரதமர் மோடி  இரங்கல் தெரிவித்தார் என்றால், மோகனின் செயல்பாடுகள் அப்படி!

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி