Published:Updated:

அமெரிக்காவில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குகிறதா?

அமெரிக்காவில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குகிறதா?
பிரீமியம் ஸ்டோரி
அமெரிக்காவில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குகிறதா?

அடுத்தடுத்து தாக்குதல்கள்... தடுமாறும் ட்ரம்ப்!

அமெரிக்காவில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குகிறதா?

அடுத்தடுத்து தாக்குதல்கள்... தடுமாறும் ட்ரம்ப்!

Published:Updated:
அமெரிக்காவில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குகிறதா?
பிரீமியம் ஸ்டோரி
அமெரிக்காவில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குகிறதா?

வாரம் தவறாமல், ஹாலிவுட் ஆக்‌ஷன் சினிமாக்கள் போல அமெரிக்காவில் துப்பாக்கிகள் வெடிக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்பு லாஸ் வேகாஸில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு பயங்கரம் விலகாத நிலையில், நியூயார்க்கின் மான்ஹட்டன் நகர் ட்ரக் தாக்குதல் அமெரிக்கர்களை நிலைகுலைய வைத்திருக்கிறது.

பள்ளி நண்பர்களின் 30-வது வருடச் சந்திப்பை மான்ஹட்டனில் கொண்டாடியவர்களுக்கு, அடுத்த வருடக் கொண்டாட்டம் தொடர்பான திட்டமிடல்தான் நோக்கமாக இருந்திருக்கும். அதையெல்லாம், 29 வயது இளைஞன் சாய்போவ் சிதைத்துவிட்டான். இரட்டைக் கோபுரத்தின்மீது பயங்கரவாதத் தாக்குல் நடந்ததற்கு பிறகு, அமெரிக்கா, தன்னைத் தீவிரவாதிகளிடமிருந்து கவனமாகப் பாதுகாத்துக்கொண்டிருப்பதாக மார்தட்டிக்கொண்டிருந்தது. இதனை உடைத்தெறிந்தது உபேர் நிறுவனத்திலிருந்து 75 நிமிடங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட ட்ரக்!

அமெரிக்காவில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குகிறதா?

கையில் துப்பாக்கிகளுடன் ட்ரக்கில் வந்த இளைஞன், வாகனத்தை வேகமாகச் செலுத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர். பள்ளி நண்பர்களின் 30-வது வருடச் சந்திப்புக் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு போனவர்களுக்குத்தான் இப்படியொரு பரிதாப மரணம் நேர்ந்தது. ட்ரக்கை நிறுத்திவிட்டு நடந்து வந்த அந்த இளைஞனை வயிற்றில் சுட்டுப் பிடித்தது போலீஸ். இந்தச் சம்பவத்துக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்கவில்லை. ஆனால் ‘‘இது ஐ.எஸ் தாக்குதல்தான்’’ என்றது அமெரிக்கா. ட்ரம்ப் தனது ட்விட்டரில், ‘ஐ.எஸ் தீவிரவாதிகளை அமெரிக்காவைவிட்டு வெளியேறவும் விடமாட்டோம். உள்ளே நுழையவும் அனுமதிக்க மாட்டோம். அனைத்துப் பகுதிகளிலும் அவர்களைத் தோற்கடிப்போம்’ எனச் சூளுரைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்காவில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குகிறதா?

யார் இந்த சாய்போவ்? உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவன் செய்ஃபாலோ சாய்போவ். அமெரிக்காவில் 2010-ம் ஆண்டு ஒஹியோ பகுதியில் குடியேறினான். சாய்போவ் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர், ‘‘மிகவும் அமைதியான பையன். யாரிடமும் அதிகமாகப் பேச மாட்டான். வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்புவான். வெளியில் செல்ல மாட்டான்’’ என போலீஸில் தெரிவித்திருக்கிறார்.

அவனது கையில் ஒரு பெல்லட் துப்பாக்கியும், ஒரு பாயின்ட்பால் துப்பாக்கியும் இருந்துள்ளது. உபேர் வாகன சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளான் என்பதை உபேர் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குகிறதா?

ஐ.எஸ் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்காத நிலையில் சாய்போவ் தீவிரவாதிதான் என்பதற்குச் சில ஆவணங்கள் முன்வைக்கிறது அமெரிக்கா. ‘‘சாய்போவின் செல்போனில் ஐ.எஸ் தொடர்பான வீடியோக்கள் இருந்தன. ஐ.எஸ் இயக்கத்தால் பெரிதும் தூண்டப்பட்டவனாக இருந்திருக்கிறான். ட்ரக்கில் ஐ.எஸ் கொடியை வைத்திருந்திருந்தான். அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும்கூட ‘ஐ.எஸ் கொடியை அறையில் பறக்கவிட வேண்டும்’ என்றான். தாக்குதல் முழுவதுமே ஐ.எஸ் தாக்குதல் விதிகளின்படி நடந்துள்ளது’’ என்கிறது போலீஸ். இந்தக் காரணங்கள்தான் சாய்போவைத் தீவிரவாதி என அடையாளப் படுத்துகின்றன.

இரட்டைக் கோபுரம் தாக்குதல் நடந்த கட்டத்துக்கு அருகில் தான் இப்படியான துப்பாக்கிச் சூடுகள் சர்வ சாதாரணமாக நடைபெறத் தொடங்கி விட்டன. மான்ஹட்டன் ட்ரக் தாக்குதல் நடந்த 24 மணி நேரத்துக்குள் அடுத்த தாக்குதல் கொலராடோவில் நடைபெற்றது. வால்மார்ட் ஷாப்பிங்கில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மூன்று பேர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறான்.

நவம்பர் 5ம் தேதி, டெக்ஸாசில் தேவாலயத்துக்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். டெவின் பேட்ரிக் செல்லி எனும் 26 வயது இளைஞன்தான் தாக்குதல் நடத்தியிருக்கிறான். இவன் அமெரிக்க ஏர் ஃபோர்ஸில் பயிற்சி பெற்றவன் என பெண்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குகிறதா?

ட்ரம்ப் அரியணைக்கு வந்தபிறகு இப்படியான தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றன. இரட்டைக் கோபுரம் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு தீவிரவாதத்தை ஒழிப்பதில் தீவிரம் காட்டியது அமெரிக்கா. ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டன. அந்த நடவடிக்கையின் ஒரு அங்கமாக ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டான். ஆனால், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ட்ரம்ப் மெத்தனம் காட்டுகிறாரா என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது தீவிரவாதத் தாக்குதல்கள் அமெரிக்காவில் மெல்ல தலை தூக்கத் தொடங்கியுள்ளன.

- ச.ஸ்ரீராம்