Published:Updated:

தேர்தலில் கிரிமினல் மயம்... மலருமா ஜனநாயகம்?! - கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு நிரந்தரத் தடை

தேர்தலில் கிரிமினல் மயம்... மலருமா ஜனநாயகம்?! - கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு நிரந்தரத் தடை
பிரீமியம் ஸ்டோரி
தேர்தலில் கிரிமினல் மயம்... மலருமா ஜனநாயகம்?! - கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு நிரந்தரத் தடை

தேர்தலில் கிரிமினல் மயம்... மலருமா ஜனநாயகம்?! - கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு நிரந்தரத் தடை

தேர்தலில் கிரிமினல் மயம்... மலருமா ஜனநாயகம்?! - கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு நிரந்தரத் தடை

தேர்தலில் கிரிமினல் மயம்... மலருமா ஜனநாயகம்?! - கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு நிரந்தரத் தடை

Published:Updated:
தேர்தலில் கிரிமினல் மயம்... மலருமா ஜனநாயகம்?! - கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு நிரந்தரத் தடை
பிரீமியம் ஸ்டோரி
தேர்தலில் கிரிமினல் மயம்... மலருமா ஜனநாயகம்?! - கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு நிரந்தரத் தடை

‘கடும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம்’ - தேர்தல் கமிஷன்

‘குற்றப் பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ-க்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’ -  நீதிபதிகள்

இந்த இரண்டு விஷயங்களும் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வெளியிடப்பட்டவை.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தண்டனைக்குப் பிறகு, ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா பொதுநல வழக்கு ஒன்றைப் போட்டார். இதில்தான் மேலே குறிப்பிட்ட இரண்டு விஷயங்கள் அரங்கேறின. வாழ்நாள் தடை, ஸ்பெஷல் கோர்ட், வழக்குகள் விவரம் என கோர்ட்டில் விவாதங்கள் நடப்பதால் அரசியல்வாதிகள் ஆட்டம் கண்டிருக்கிறார்கள்.

தேர்தலில் கிரிமினல் மயம்... மலருமா ஜனநாயகம்?! - கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு நிரந்தரத் தடை

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜூலையில் நடந்தபோது, ‘குற்றப் பின்னணியினர் தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை தேவையில்லை’ என்றது தேர்தல் கமிஷன். ‘வாழ்நாள் தடை கோரிக்கையை ஏற்க முடியாது. வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனச் சொன்னது மத்திய அரசு. அன்றைக்கு அப்படி சொன்ன தேர்தல் ஆணையமும் மத்திய அரசும், இப்போது முடிவை மாற்றிக்கொண்டன. ‘குற்றப் பின்னணியினருக்கு வாழ்நாள் தடை விதித்தால் மட்டுமே அரசியலிருந்து குற்றச் செயல்களைக் குறைக்க முடியும். குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதிக்க, மத்திய அரசுக்குப் பரிந்துரை வழங்கியிருக்கிறோம்’ எனச் சொன்னது தேர்தல் கமிஷன். மத்திய அரசோ, ‘வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையமும், சட்ட கமிஷனும் பரிந்துரை செய்துள்ளதைத் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறோம். அரசியலிருந்து குற்றவாளிகளை அகற்ற வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு’ என்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நாவின் சின்கா தலைமையிலான பெஞ்ச், ‘அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான திட்டங்களை அளிக்க வேண்டும். தற்போதுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டன... எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர்... எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது... 2014ம் ஆண்டுக்குப் பின் எம்.பி, எம்.எல்-ஏக்கள்மீது எத்தனை வழக்குகள் பதியப்பட்டன எனத் தெரிவிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. அதோடு ‘சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடத்தினால்தான் ஓராண்டுக்குள் அரசியல்வாதிகளின் வழக்குகளை முடிக்க முடியும். எனவே சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டம், அதற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்’ எனவும் உத்தரவிட்டிருக்கிறது. 1,581 மக்கள் பிரதிநிதிகளின் வண்டவாளங்கள் டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் வெளிச்சத்துக்கு வரலாம்.

சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டிய 1,581 மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் நிரம்பியிருக்கிறார்கள். அவர்களின் நதிமூலம் தேடினோம்.

‘‘தரமான மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது’’ என்கிறார்கள் பி.ஜே.பி-யினர். அதேபோல் தகுதியான அரசியல்வாதிகளை ஏன் உருவாக்கவில்லை? இ.பி.கோ.வின் அத்தனை செக்‌ஷன்களையும் தாங்கி நிற்கும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மக்கள் பிரதிநிதிகள்தான், தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு பற்றி குடிமக்களுக்குப் பாடம் நடத்துகிறார்கள். மக்களவையின் 543 ‘மக்கள் பிரதிநிதி’களில் 184 எம்.பி-கள்மீது வழக்குகள் உள்ளன. அதாவது மொத்த எம்.பி.க்களில் 34 சதவீதம் பேர் குற்றப் பின்னணியினர். இதில் ஆளும் பி.ஜே.பி-யில்தான் அதிகபட்சமாக 97 பேர்மீது வழக்குகள் இருக்கின்றன. கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, கடத்தல், ஈவ் டீசிங், போன்ற மிக கடுமையான வழக்குகளில் மட்டும் 112 எம்.பி-களுக்குத் தொடர்பு இருக்கிறது. கொலை வழக்கில் 10 பேரும், கொலை முயற்சி வழக்குகளில் 17 பேரும், வகுப்புவாத விரோதம் தொடர்பான வழக்குகளில் 16 பேரும், திருட்டு, கொள்ளை வழக்குகளில் 10 பேரும் இருக்கிறார்கள். மாநிலங்களவை கணக்கைப் பார்த்தால் 233 பேரில் 44 பேர் (19%) குற்றப் பின்னணியினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்தலில் கிரிமினல் மயம்... மலருமா ஜனநாயகம்?! - கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு நிரந்தரத் தடை

நாடாளுமன்றம் மட்டுமா குற்றப் பின்னணியினரின் புகலிடமாக இருக்கிறது? மாநில சட்டமன்றங்களும்தான். நாடாளுமன்றத்தின் மக்களவை (543) மற்றும் மாநிலங்களவை (233) உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 776. இதுதவிர 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கிற எம்.எல்.ஏ-க்களின் மொத்த எண்ணிக்கை 4,120. எம்.பி-க்களையும் எம்.எல்.ஏ-க்களையும் கூட்டினால் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,896. இந்த 4,896 ‘மக்கள் பிரதிநிதி’களில் 1,581 பேர் (33%) குற்றப் பின்னணியினர்.

தேர்தலில் கிரிமினல் மயம்... மலருமா ஜனநாயகம்?! - கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு நிரந்தரத் தடை

இந்த 1,581 பேர் மீதான வழக்குகள் விவகாரம்தான், ‘தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை’ என்கிற சூழ்நிலைக்கு சுப்ரீம் கோர்ட்டில் வந்து நிற்கிறது.

குற்றப் பின்னணி கொண்ட இந்த 1,581 மக்கள் பிரதிநிதிகளில் பி.ஜே.பி.தான் டாப் 1. இந்தியா முழுவதும் பி.ஜே.பி-க்கு இருக்கிற எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 1,675. இதில் 523 பேர் குற்றப் பின்னணியினர். இந்த 523-ல் 337 பேர்மீது கடுமையான குற்ற வழக்குள் உள்ளன. இந்த 1,581 பேரில் 51 பேர்மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுமத்தப் பட்டிருக்கின்றன. இந்த விவரங்கள் அனைத்தும் வேட்புமனுவோடு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களிலிருந்து திரட்டியிருக்கிறது ஜனநாயக அமைப்பு.

நீட் தகுதித் தேர்வு அவசியம் பற்றிப் பேசும் அரசியல்வாதிகள், கிரிமினல் பின்னணி கொண்டவர்களுக்குத் தேர்தலில் சீட் தராமல் ஒதுக்கிவைத்து, தகுதியானவர்களை மக்கள் மன்றங்களுக்கு அனுப்பி வைக்கலாமே. ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை என்பதைத் தேர்தலுக்குத் தேர்தல் அதிகரித்து வரும் ‘கிரிமினல் மக்கள் பிரதிநிதி’களின் எண்ணிக்கையே சான்று! 2004 எம்.பி. தேர்தலில் 462 வேட்பாளர்கள்மீது வழக்குகள் இருந்தன. இது 2009 தேர்தலில் 1,158 ஆக உயர்ந்தது. 2014 தேர்தலிலோ 1,404 வேட்பாளர்களாக அதிகரித்தது. இதில் எல்லா கட்சிகளும் கொஞ்சமும் சளைக்கவில்லை.

தேர்தலில் கிரிமினல் மயம்... மலருமா ஜனநாயகம்?! - கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு நிரந்தரத் தடை

‘குற்றப் பின்னணியினரை அமைச்சரவைகளில் சேர்க்கத் தடை விதிக்க வேண்டும்’ எனச் சொல்லி சுப்ரீம் கோர்ட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழக்குப் போடப்பட்டது. அந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் சொன்ன அறிவுரை எந்தக் காலத்துக்கும் பொருந்தும். ‘குற்றப் பின்னணி கொண்ட அரசாங்கத்தால் ஆளப்படுவதை மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. பிரதமர், முதல்வர்கள் அரசியல் சாசனத்தின் நம்பிக்கை பெட்டகங்கள். பதவி பிரமாணத்தின்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் புனிதத்தைக் கருத்தில் கொண்டு குற்ற வரலாறு கொண்டவர்களை அமைச்சர்களாக்க வேண்டாம். அவர்களை அமைச்சரவையில் சேர்க்கக் கூடாது’ எனச் சொன்னது சுப்ரீம் கோர்ட்.

‘‘ஆட்சிக்கு வந்தால் குற்றப் பின்னணி எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் சிறையில் தள்ளப்படுவார்கள். நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து, ஓராண்டுக்குள் சிறையில் அடைக்கப்படுவார்கள். ஐந்தாண்டுகளுக்குள், கிரிமினல்களிடமிருந்து நாடு மீட்கப்படும். குற்றப் பின்னணி எம்.பி-க்களை நாடாளுமன்றத்திலிருந்தே விரட்டியடித்து அரசியலைத் தூய்மையாக்குவோம். 2014 மே 16-ம் தேதிக்குப் பிறகு அதுதான் எனது வேலையாக இருக்கும்’’ என குஜராத் காந்திநகரில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் முழங்கினார் மோடி. மூன்றரை ஆண்டுகள் போனதுதான் மிச்சம். இப்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகுதான் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். 

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

வழக்கு இருந்தாலே தடை விதிக்க வேண்டும்!

குற்றவாளி என நீதிமன்றம் தண்டனை அளித்தால்தான் இப்போது தேர்தலில் போட்டியிடத் தடை உள்ளது. வழக்கு விசாரணையில் இருந்தாலோ அல்லது சிறையில் இருந்தாலோ போட்டியிட முடியும். ‘வழக்கு நிலுவையில் இருந்தாலே போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்’ என்கிற கோரிக்கை நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகிறது. ‘‘கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள், தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்’’ என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி.

‘ஐந்தாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கும் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், வழக்கு நிலுவையில் இருந்தாலும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை 1998-ம் ஆண்டே தேர்தல் கமிஷன் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில்தான், தேர்தலில் குற்றப் பின்னணியினர் போட்டியிடுவதைத்  தடுப்பது குறித்த நடைமுறைகளை வகுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சட்ட ஆணையத்துக்கு 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இதனை ஏற்று, ‘நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவானாலே வேட்பாளர்களைத் தகுதிநீக்கம் செய்யலாம்’ என சுப்ரீம் கோர்ட்டுக்குச் சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது. ‘வேட்புமனு தாக்கலின்போது பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் அளிப்பவர்களுக்கு, குறைந்தது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும். வேட்புமனுவில் தவறான தகவலைத் தருவதை மோசடிக் குற்றமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் குறிப்பிட வேண்டும்’ எனவும் பரிந்துரை செய்தது. ‘அரசியல் காரணங்களுக்காகக்கூட ஒருவர்மீது பொய் வழக்குப் போடுவதற்கு வழியுண்டு’ எனச் சொல்லி இந்த யோசனையைத் தங்கள் சுயநலத்துக்காக, முன்பிருந்த மன்மோகன் சிங் ஆட்சி ஏற்க மறுத்துவிட்டது.

‘மக்கள் பிரதிநிதி’களை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் மட்டுமே உண்டு. இந்த அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற சீர்த்திருத்தத்தையும்கூட மன்மோகன் அரசு ஏற்கவில்லை. பி.ஜே.பி. ஆட்சியிலாவது அமல்படுத்தலாமே ஏன் செய்யவில்லை? மோடியின் கரங்களை யார் கட்டி வைத்திருக்கிறார்கள்?

சிறையில் இருந்துகொண்டே தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கிற ஜனநாயகம் நல்ல குடியரசாக இருக்குமா? ‘வழக்கின்போது ஒருவரைச் சிறையில் அடைக்கிறோம். இதனால், அவரின் அடிப்படை உரிமைகளான சுதந்திரமாகப் பேச, எழுத, எங்கேயும் செல்ல ஆகியவை மறுக்கப்படுகிறது. அப்படிப்பட்டவர் தேர்தலில் போட்டியிட மட்டும் எப்படி உரிமையிருக்கிறது’ என்கிற வாதத்தை முன் வைக்கிறார் குரேஷி. ‘தேர்தல் சீர்திருத்தம்’ என்கிற ஓணானைத் தங்கள் வேட்டிக்குள் விடுவார்களா ஆட்சியாளர்கள்?

எத்தனை ஓராண்டுகள்?

‘குற்றப்பின்னணி மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்’ எனச் சொல்லி 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று போடப்பட்டது. வழக்கை விசாரித்த ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச், 2014 மார்ச் 10-ம் தேதி, ‘வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மக்கள் பிரதிநிதிகள் பதவியில் நீடித்து வருகிறார்கள். எனவே எம்.பி., எம்.எல்.ஏ-கள் மீதான கிரிமினல் வழக்குகள் விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்’ எனக் கெடு விதித்தது. ‘அப்படி முடிக்காவிட்டால் அதற்கான காரணத்தை அந்தந்த மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் விளக்கம் அளிக்க வேண்டும்’ எனத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகும்கூட வழக்குகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படவில்லை.

இந்த விஷயம், தேர்தலில் நிற்க நிரந்தரத் தடை விதிக்கக் கோரும் வழக்கு விசாரணையிலும் எதிரொலித்தது. ‘ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என 2014-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, விசாரித்து முடிக்கப்பட்ட வழக்குகளின் விவரங்களை அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ எனவும் இப்போது மத்திய அரசுக்கு செக் வைத்திருக்கிறது சுப்ரீம் கோர்ட். 2014-ல் போட்ட உத்தரவையே மூன்றரை ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

நிரந்தரத் தடை நிறைவேறுமா?

‘கிரிமினல் அரசியல்வாதிகள் 13 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கலாம்’ என்ற யோசனையைச் சிலகாலம் முன்பு மத்திய அரசு கொண்டு வர நினைத்தது. இதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மோடி அரசு முடிவு செய்திருந்தது.

 எந்த ஒரு குற்றத்துக்காகவும் 7 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை பெறுகிறவர்கள் போட்டியிட முடியாது.

 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்த பிறகும் மேலும் 6 ஆண்டுகளுக்கும் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

 ஒருவர்மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தாலும் போட்டியிட தகுதியற்றவர்.

 தேர்தல் கமிஷனிடம் பொய்யான, தவறான தகவல் அளிப்பவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுதிநீக்கம் செய்யப்படுவார்.

என சட்ட திருத்த வரைவு தயார் செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.

7-வது இடத்தில் தமிழ்நாடு!

 மாநில சட்டமன்றங்களில் அதிக குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-க்கள் இருப்பது மகாராஷ்ட்ரா மாநிலத்தில்தான். மொத்தமுள்ள 288 எம்.எல்.ஏ-க்களில் 160 பேர்மீது வழக்குகள் உள்ளன.

 2-வது இடத்தில் உத்தரப்பிரதேசமும் 3-வது இடத்தில் பீகாரும் 4-வது இடத்தில் மேற்கு வங்காளமும் 5-வது இடத்தில் கேரளாவும் இருக்கின்றன. 7-வது இடத்தில் தமிழ்நாடு சட்டமன்றம் இருக்கிறது. 234 பேரில் 75 பேர் குற்றப் பின்னணியினர்.

 ‘குற்றப் பின்னணியினர் யாருமே இல்லை’ என்கிற பெருமையைத் தாங்கி நிற்கிறது 40 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட மிசோராம் சட்டமன்றம்.

 மிக மோசமான குற்ற வழக்குகள் உள்ள மாநில சட்டமன்ற எம்.எல்.ஏ-க்களிலும் மகாராஷ்ட்ராதான் முன்னிலை. 111 பேர்மீது கடும் குற்ற வழக்குகள் உள்ளன. உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், தெலுங்கானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இதிலும் தமிழ்நாடு 7-வது இடம்.